English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Repiece
v. மீட்டுந் துண்டுகளை ஒட்ட வை, மீட்டும் இணைத்து உருப்படுத்து.
Repine
v. படபடப்புக்கொள், அலட்டிக்கொள், மனம் உலைவுறு, உள அமைதி பெறாதிரு, அதிருப்திகொள்.
Repique
n. முற்கெலிப்பு, 32 சீட்டுகளைக் கொண்டு இருவர் ஆடும் சீட்டாட்டத்தில் ஆட்டம் தொடங்குவதற்குமுன் சீட்டுகளைக் கொண்டே 30 புள்ளிகள் கெலித்தல், (வினை) சீட்டாட்ட வகையில் முற்கெலிப்பு மூலமே தோல்வியடையச் செய், சீட்டாட்ட வகையில் முற்கெலிப்படை.
Replace
v. பழைய இடத்திலேயே மறுபடியும் வை, அகற்றிப் பிறிதிடங் கொள், விலக்கிப் பிறரிடம் கொள், பின்னுற்றிடங் கொள், ஒருவருக்குப்பின் அவரிடம் பெற்றமர், பதிலாக இடங்கொள், பதிலாளாக இடங்கொள், ஒருவர் இடத்தை மற்றொருவரைக் கொண்டு நிரப்பு, ஒன்றன் இடத்தை மற்றொன்றைக் கொண்டு நிரப்பு, மாற்றீடு செய், பதில் ஆள் தேடி அமர்வி.
Replacement
n. பதிலன்ர்த்தீடு, பதில்வைப்பு, பதிலிடங்கொள்ளுகை, பதிலமர்வாளர், பதிலிடங் கொள்ளும் பொருள், மணி உருவியலில் மூலை விளிம்புகளுக்குப் பதிலாகத் தோற்றும் முகப்பு அல்லது முகப்புக்கள்.
Replant
v. மறுபடியும் நடு, புதிதாக நடவு செய்.
Replay
-1 n. திரும்பவும் ஆடப்பட்ட பந்தய விளையாட்டு.
Replay
-2 v. திரும்பவும் பந்தயம் ஆடு.
Replenish
v. மீள நிரப்பு, குறைநிரப்பு.
Replenished
a. குறை நிரப்பப்பட்ட, நிரம்பிய, நிரம்பச் சேர்த்து வைக்கப்பட்ட.
Replete
a. செறிவுற்று நிரம்பிய, குறைவற்ற வளமுடைய, நிரப்பிச் சேமித்துவைக்கப்பட்ட, பொங்கித்ததும்புகிற, திணிக்கப்பட்ட, அடைக்கப்பட்ட, தெவிடடுநிலையடைந்த.
Repletion
n. மிகுநிறைவு, தெவிட்டுநிலை, (மரு) குருதி நிறைவு.
Replevin
n. விசாரணைக்கும் தீர்ப்புக்கும் உட்படுவதாகப் பிணைபடுவதன் பேரில் கடனுக்காகக் கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக் கொடுத்தல், கைப்பற்றப்பட்ட உடைமைகளைத் திரும்பப்பெறல், கைப்பற்றிய உடைமைகளைத்திரும்பக் கொடுப்பதற்கான ஆணை, கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக்கொடுப்பது பற்றிய வழக்கு.
Replevy
v. விசாரணைக்கும் தீர்ப்புக்கும் உட்படுவதாகப் பிணைபட்டுக் கைப்பற்றப்பட்ட சொத்தினைத் திரும்பப் பெறு.
Replica
n. உருவநேர்படி, நேர் பப்ர்ப்பு, மூலப்படம் எழுதியவரே தமது படத்திற்கு எடுத்த படி.
Replicate
n. (இசை) குறிப்பிட்ட சுரத்துக்குமேல் அல்லது கீழ் ஒரு பாலை அல்லது பல பாலைகள் விலகியுள்ள சுரம், (பெயரடை) (தாவ) தன் மீதே திரும்ப மடிக்கப்பட்ட, (வினை) திரும்பச்செய், நேர்படி எடு, திருப்பி மடி.
Replication
n. திரும்பி மடித்தல், மடிப்பு, பதிலிறுத்தல், மறுமொழி, வினாவுக்குரிய விடை, (சட்) பிரதிவாதியின் வாதத்திற்கு வாதியின் பதில், எதிலொலி, படி, படியெடுத்தல்.
Reply
n. விடை, மறுமொழி கூறுதல், விடைவாசகம், (வினை) விடைகூறு, எதிருரை, எதிர்ச்செயலாற்று.