English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Reply to all
யாவர்க்கும் பதில்
Repobndez silvous plait,
(தொ.) பதிலளிக்க, மறு மொழி தருக.
Repoint
v. (க-க) கல்-செங்கல் இடைவௌத இணைப்புக்களை மீட்டும் சாந்துபூசிச் செப்பமாக்கு.
Report
n. பொதுமொழி, ஊர்ப்பேச்சு, வழ்ந்தி, பொதுமதிப்புரை, பொதுக்கருத்துப்போக்கு, அறிக்கை, கருத்து ஆய்வு முடிவு, குறிப்புரை, விவர அறிவிப்பு, விரிவுரை, அதிர்வொலி, வெடியோசை, (வினை) அறிவி, தெரிவி, அறிக்கை கொடு, விரித்துரை, விரங்கூறு, எடுத்துரை, கூறியவாறே எடுத்துக்கூறு, முறைப்படி செய்தி தெரிவி, முறைப்படி அறிக்கை செய், முறைப்படி வருகை தெரிவி, பணிமுறையில் மேலிடத்திற்குத் தெரியப்படுத்து, கருத்தறிவிப்புச் செய், பத்திரிகைக்குச் செய்தி அறிக்கையிடு.
Reportage
n. செய்தித்துறைக்குரிய செய்தியறிவிப்பு, செய்தித்துறைக்குரிய செய்தியறிவிப்பின் தனிப்பாணி.
Reporter
n. செய்தியாளர், நிருபர்.
Repose
-1 n. ஓய்வு, செயலோய்வு, உழைப்பு நிறுத்தம், அலைவின்மை, உலைவின்மை, உறக்கம், அமைதியான நிலை, இளைப்பாறல், மன அமைதி, கலை அமைதித்தோற்றம், (வினை) ஓய்வுகொள், சார்த்து, அணையாகக் கொண்டு கிடத்து, ஓய்வுகொடு, இளைப்பாற்று, உறக்கத்தில் அமைந்திரு, சாப்படுக்கையில் கிடத்தப்
Repose (2), v.,
நம்பியிரு.
Repository
n. கொள்கலம், சேமவைப்பிடம், சேமக்குவை, களஞ்சியம், கருவூலம், அரும்பொருட்குவை, காட்சிச்சாலை, கிடங்கு, கடை, விற்பனை இடம், குதிரைத்தாமணி, இடுகாடு, நம்பகமானவர், ஆன்மாக்களின் உறைவிடம்.
Repossess
v. மீண்டும் பெறு, திரும்பவும் பெற்று நுகர்.
Repossession
n. மீட்டும் பெறுகை.
Repost
n. வாட்போரில் விரை எதிரடி, விரை எதிர் வெட்டுரை, (வினை) விரை எதிரடி கொடு, விரை எதிர் வெட்டுரை கூறு.
Repot
v. தொட்டிச்செடி வகையில் எடுத்துப் பெரிய தொட்டியில் மீட்டும் நடு.
Repousse
n. புடைப்பகழ்வுச் சித்திரமாக மறுபுறமிருந்து அடித்துருவாக்கப்பட்ட உலோக ஒப்பனை வேலைப்பாடு, (பெயரடை) புடைப்பகழ்வுச் சித்திரமாக மறுபுறமிருந்து அடித்து உருவாக்கப்பட்ட.
Repped
a. தட்டுமுட்டுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் துணி வகையில் கயிறு போன்ற மேற்புற இழைமானமுடைய.
Reprehend
v. கண்டி, பழி, கூறு, திட்டு, குற்றங்கண்டு பிடி.
Reprehension
n. கண்டிடனம், கடிந்துரை, பழிகூறல், திட்டு.
Represent
v. உருமாதிரியாயமை,. புற உருவங்கொடு, புற உருவாயமை, குறித்துக்காட்டு, சுட்டிக்காட்டி, குறியீடாகச் சுட்டு, சின்னமாயமை, நாடக மாந்தரை நடிகராகச் செயற்படுத்திக்காட்டு, விரிவுரை மூலம் உருப்படுத்திக்காட்டு, படமாக உருப்படுத்திக்காட்டு, சுட்டு, ஆயமைவுறு, பிரதிநிதித்துவம் பெற்றிரு, பொதுமக்கள் அவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தனுப்பப்பெற்றிரு, பெயராளராயிரு, பெயராண்மைகொள், சார்பாளராயிரு, சார்பில் பேச உரிமைகொண்டிரு, முன்வை, தெரிவி, மனங்கொள எடுத்துரை, பாவி, கற்பனையில் உருவாக்கு, புனைந்து மனங்கொள்வி, பாவித்துரை, புனைந்து வறு, புனைந்து சாட்டியுரை.
Representation
n. பெயராண்மை, பிரதிநிதித்துவம்., உருவமைப்பு, கட்டுரை, விரிவுரை அமைதி, அறிவிப்பு, தெரிவிப்பு, சார்பாண்மையுரை, பாவிப்பு, பாவிப்புரை, புனைவுரு, கருத்துரு, நாடக அரங்கக்காட்சி, ஒழுங்கமைவுக் காட்சி, முறையீடு, வாதம், விளக்கவுரை, பிரதிநிதிகள் குழுமம், மரபுரிமை ஏற்பு.