English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Request
n. கோரிக்கை, வேண்டுகோள், மனு, முறையீடு, வேண்டிக்கொண்ட பொருள், வேட்பு, விரும்பப்பட்ட நிலை, தேவை, வேண்டப்படும் நிலை, (வினை) வேண்டு, கோரு, வேண்டுகோள் செய், முறையிடு, வேண்டிக்கேள், வேண்டுமென்று கோரு, மன்றாடு,நயந்துகேள், செயல்வகையில் குறையிரந்து கொள், செயல்வகையில் கேட்டுக்கொள், இசைவு வகையில் கோரு.
Requicken
v. புத்துயிரளி.
Requiem
n. இறந்தார் ஆவி அமைதியடைவதற்கான சிறப்பு வழிபாடு, அமைதி வழிபாட்டிற்கான இசை அமைப்பு, இரங்கற்பா, நெய்தற்பண்.
Requies cat
n. மாண்டார் ஆவியின் அமைதி குறித்த வேண்டுதல், சாந்தி.
Requiescant in pace
n. அவர்கள் ஆவிகள் அமைதியுறுக.
Requiescat in pace
n. அஹ்ர் ஆவி அமைதியுறுவதாக.
Require
v. வேண்டு, அவாவிக்கோரு, உரிமைக்கோரிக்கையிடு, செயற் கட்டளையிடு, ஆணைக்குறிப்புத் தெரிவி, வலிந்து கோரு, தேவைப்படு, இன்றியமையா நிலையுடையதாயிரு, அவசியப்படுவதாயிரு, அவசியமாயிரு.
Requirement
n. தேவை, கோரிக்கை, வேண்டப்படும் பொருள்.
Requisite
n. இன்றியமையாத்தேவை, அவசியக்கூறு, வெற்றிக்குரிய முற்கூறு, தேவைப்பொருள், (பெயரடை) சூழ்நிலைகளிடையே தேவைப்படுகிற, வெற்றிக்குத் தேவையான, தேவைப்படுகிற, செயல்துறைத் தேவையான.
Requisition
n. தேவைக்கோரிக்கை, எழுத்துவழி வேண்டுகேள், பணித்துறைச் செயல்முறைக் கட்டளை, படைப் பொருள் கோரிக்கைக் கட்டளை, (வினை) வேண்டுதற் கட்டளையிடு, படைத்துறைக்கான பயனீட்டு ஆணைக்கோரிக்கை செய், படைத்துறைக்கான ஆணைக்கோரிக்கையிடு, போர்ப்பொருள் நாடி ஆணையிடு, தனிமுறை அழைப்பாணையிடு, பொதுப்பணிக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்.
Requite
v. கைம்மாறு செய், நல் ஈடுசெய், பரிசீடு செய், பதிலீடு அளி, பதிலுக்குப்பதில் செய், தகையுறத்ட திருப்பிக் கொடு, வஞ்சந் தீர், பழிக்குப்பழி வாங்கு.
Re-read
v. திரும்பப் படி, வாசித்ததையேண மீண்டும் வாசி.
Re-reckoning
n. மறுகணிப்பு.
Reredos
n. பலிபீடத்தின் பின்புறச் சுவரை மறைக்கும் வேலைப்பாடுடைய திரை.
Res
n. பொருள், உடைமை, சொத்து.
Res angusta domi;
n. வறுமை, வீட்டிலுள்ள இடர்ப்பாட்டுநிலை.
Res judicata
n. முன்பே தீர்க்கப்பட்டதென்று வாதிக்கப்பட வேண்டாதது.
Resaddle
v. மீண்டுங் குதிரைக்குச் சேணங் கட்டு.
Resalable
a. திருமப விற்கத்தக்க.