English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Reserved;
a. அடக்கமான, ஒதுக்கமான, உணர்ச்சிகளை அல்லது கருத்துக்களை வௌதயிடுவதில் தயக்கங் கொள்கிற, பேச்சில் விருப்பமற்ற, தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட, சேமக் காப்பீடு செய்யப்பட்ட, இடர்க்காப்புக் சேம ஒதுக்கீடு செய்யப்பட்ட.
Reserves
n. pl. இடர்நிலை காப்புச் சேமப்படைப் பகுதி, நில-நீர்- வான் படைகளின் நெருக்கடி நேரத்தில் பின்வாங்கும் படைக்கு ஆதரவாகக் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ள தனிச் சேமப்படைப்பகுதி, நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைப் பகுதி.
Reservist
n. சேமப்படைவீரர்.
Reservoir
n. நீர்த்தேக்கம், இயற்கையான, அல்லது செயற்கையான நீர்ச்சேமிப்பு இடம்., நீர்த்தேக்கத் தொட்டி, இயந்திரத்தில் நீர்மம் வைக்கப்பட்டிருக்கும் பகுதி, உடலில் நீர்மம் தேக்கப்பட்டிருக்கும் பகுதி, சேமப் பொருட்களஞ்சியம், சேம அறிவுக்களஞ்சிகம், பின்பயன்கருதிச் சேகரிக்கப்பட்ட உண்மைகளின் தொகுதி, (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை.
Reset
-2 v. மணிக்கற்கள் வகையில் மாற்றிப் பதிப்பவை.
Reset
-1 n. திருட்டுப்பொருள்களைப் பெறுதல், தடையுத்தரவுக்கு ஆளானவர்களை வைத்தாதரித்தல், (வினை) திருட்டுப் பொருள்களைப் பெறு,. களவுப்பொருள்கள் வகையில் வாங்கி வைத்துக்கொள்.
Resetter
n. திருட்டுப் பொருள்களைப் பெறுவோர்.
Reship.
v. திரும்பவுங் கப்பலில் ஏற்றுதல்.
Reshipment
n. மீட்டுங் கப்பலில் ஏற்றுதல்.
Reside
v. குடிவாழ்வுபெறு, குடியிருப்பிடமாகக் கொள், நலையாகத் தங்கியிரு, இருப்பிடத்திலேயே நீடித்துத் தங்கியிரு, பணிமனை இல்லங்களில் தங்கியிரு, உரிமை வகையில் நிலை பெற்றிரு, பண்புகள் வகையில் இயல்பாக நிலைகொண்டிரு, உரிமை வகையில் மரபுவழியாக அமைந்திரு.
Residence
n. குடியிருத்தல், குடியிருப்பாகக் கொள்ளல், குடியிருக்கத் தொடங்கல், அலுவலர்களின் தங்கல் குடியிருப்பு, உறையுள், உறைவிடம்.
Residency
n. (வர) முன்னாள் இந்திய மன்னரவையின் கவர்னர் ஜெனரல் பேராளரின் பணிமனை.
Resident n.
குடியிருப்பாளர், ஊர் அல்லது ஊர்ப்புறத்து நிலையாகத் தங்கியிருப்பவர், புலம்பெயரா உயிரினம், அயல்நாட்டவையில் அமைச்சராயிருப்போர், காப்பரசுகளில் ஆட்சியாளர் பெயராள், துணைக்காப்பரசின் ஆளுநர், (பெயரடை) குடியிருக்கின்ற, பதியெழாப் பண்புடைய, புலம்பெயராத, தன் அலுவலகத்திலேயே தங்கியிருக்கிற, உறுப்பினர் பதவியமர்வுடைய, தங்கியிருக்கிற, உறுப்பினர் பதவியமர்வுடைய, தங்கியிருக்கக் கடமைப்பட்ட, உரிமை வகையில் பிறப்புவழி உரியதான.
Residential
a. நகர ஊர்ப்பகுதிகள் வகையில் குடியிரப்புக்குரிய,,குடியிருப்புக்குத் தகுதியான, தனிப்பட்டோ ர் மனைகள் இருக்கின்ற, குடியிருப்புத் தொடர்புடைய.
Residentship
n. (வர) முன்னாள் இந்திய மன்னரவையின் கவர்னர் ஜெனரல் பேராளர்நிலை., சார்பு நாடுகளில் பிரிட்டிஷ் ஆட்சிச் சார்பாளர் நிலை.
Residual
n. (கண) கழித்துவந்த மீதி, (வேதி) எரிபொருள் எச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், (பெயரடை) (கண) கழித்துவந்த மீந்த, (வேதி) எரிபொருளில் எஞ்சிய, ஆவி ஆக்கத்தில் மிஞ்சிய, கணிப்பில் விளக்கப்படாத கூறான.
Residuary
a. சொத்து வகையில் வகடன் முதலிய பொறுப்புக்கள் போக மீந்த மதிப்புச்சார்ந்த, மிச்சமான, மீந்துள்ள, (வேதி) எரிபொருளில் அல்லது ஆவியாக்கத்தில் எஞ்சியுள்ள.
Residue
n. மீதி, மிச்சம், எஞ்சியுள்ளது, மிச்சமாக விடப்பட்டது, வரி-கடன்-கொடை முதலியன போகச் சொத்தின் மிச்சம்.
Residuum
n. (வேதி) எரிந்த அல்லது ஆவியான பிறகு உள்ள எச்சம், (கண) கணிப்பில் விளக்கம் பெறாப் பகுதி, சமுதாய அடிநிலைக்கூறு.
Re-sign
-2 v. மீண்டுங் கையொப்பமிடு.