English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Resign,
-1 v. பணிதுற, இராசிநாமாச் செய், கைவிடு, கைதுறந்து ஒப்படை, விட்டுக்கொடு, கம்மென்றிரு, அமைந்தடங்கு.
Resignation
n. பணிதுறப்பு, இராசிநாமா, விலகல் கடிதம், விலகியிருத்தல், குறைகூறாது பொறுத்துக்கொள்ளல், அமைவடக்கம்.
Resile
v. எதிர்த்தடிப்பு, எதிர்த்தெறிப்பு, மீட்டெழுச்சி, எதிர்விசைப்பு, விரிவாற்றல், நீட்டாற்றல், மனத்தின் விரிதிறம், தொய்வாற்றல்.
Resilience
n. எதிர்த்தடிப்பு, எதிர்த்தெறிப்பு, மீட்டெழுச்சி, எதிர்விசைப்பு, விரிவாற்றல், நீட்டாற்றல், மனத்தின் விரிதிறம், தொய்வாற்றல்.
Resiliency
n. விரிவாற்றல், நீட்டாற்றல், தொய்திறம், நிலைமைக்குத் தக்கபடி மாறும் பண்புத்திறம்.
Resilient
a. விரிவாற்றலுடைய, நீட்டாற்றலுடைய, தொய்திறமுடைய, நிலைமைக்குத் தக்கபடி மாறுதலடையக் கூடிய.
Resin
n. நீரில் கரையாத பற்றாற்றல் மிக்க மரப்பிசின் வகை, (வினை) மரப்பிசினைத் தேய், மரப்பிசினுட்டிச் செயலாற்று.
Resipiscence
n. மதிப் பேறு, திருந்தும் பண்பு.
Resist
n. மேற்புற அரிப்புத் தடைப்பொருள், சாயமிடப் பெறாத காலிக்கோத்துணிப் பகுதிக்குரிய மேற்பரப்புத் தடை காப்புப் பொருள், (வினை) தடைசெய், எதிர்த்துநில், தடுத்து நிறுத்து, போக்குச் செறுத்துத் தடு, வெற்றியாக எதிர், எதிர்த்துத்தாக்கு, தாங்கிநில், தாங்கும் ஆற்றல் பெற்றிரு, நுழைவு தடு, ஊடுபரவலைத் தடைசெய், ஏற்க மறு, ஏற்காது புறந்தள்ளு, எதிர்ப்புச் செய், எதிர்ப்புக்காட்டு, எதிர்ப்பு உருவாக்கு, பணிய மற, பாதிக்கப்பெறாதிருது, கலவாதிரு, மறுப்பளி, தவிர், பழக்கந் தடை செய், செயல் தடு, எதிர்முயற்சி செய், தடுக்க முயற்சி செய்.,
Resistance
n. எதிர்ப்பு, தடுக்கும் ஆற்றல், இடைமறிக்கும் ஆற்றல், மின்சாரம்-காந்தம்-வெப்ப வகையில் எற்காமை, மின்சார வகையில் மின்சாரத்திற்கு உறுதியான தடையமைவு.
Resistibility
n. தடுக்கத்தக்க நிலை, எதிர்ப்பாண்மையுள்ளது, எதிர்ப்பு ஆற்றல்.
Resoluble
a. தீர்க்க வல்ல, கூறாகப் பிரிக்கத்தக்க, பகுத்துணரவல்ல.
Resolute
a. உறுதிகொண்ட, நெஞ்சுரங் கொண்ட, தயக்கமற்ற, பின்வாங்காத, கருமமே கண்ணான.
Resolution
n. புதிர்விடுவிப்பு,ஐயநீக்கம், சிக்கலறுப்பு, மன்றத் தீர்மானம், கூட்டமுடிவு, மன்றத் தீர்வான நிறைவேற்றம், கூட்டமுடிவெடுப்பு, தீர்மான வாசகம், உறப்புக் கூறுபாடு, கூறுபாடு, இஸ்ற்கூறுபாட்டுச் சிதைவு, பண்புறுதி, ஒழுக்க உரம், செயல்துணிவு, (செய்) அசைமாற்று, நெடிலசை ஒன்றினிடமாக இரு குறிலசை மாற்றமைப்பு, (இசை) பொருந்திசைமாற்று, பொருந்தா இசையின் பொருந்திசையான மாற்றமைவு, (மரு) ஊமை வீக்க மறைவு, சீழ் வைப்பில்லாமலே வீக்கமறைதல், (பொறி) ஆற்றற் பிரிவீடு, ஒருமையாற்றலினிடமாக மொத்தத்தில் அழ்ற்கிணையான ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்களை ஈடுபடுத்தல்.
Resolutive
n. தசைகரைப்பு மருந்து, தசைகரைப்புமேற்பூச்சு, (பெயரடை) தசைகரைக்கும் ஆற்றலுடைய, கூறாக்கச் சிதைவூட்டுகிற, கரைகிற.
Resolve
n. மனத்துணிபு, கருத்து உறுதிப்பாடு, (செய்) உள்ள உறுதி, (வினை) கரை, ஒருமை குலை, பகுதிகளாகப் பிரி, சிதைத்தொழி, மாற்று, மாற, பகுத்தாய்ந்து, எளிமை வாய்ந்ததாக மாற்று, பொருந்தா இசையைப் பொருந்திசைக்கு மாற்று, பொருந்திசையாக மாறு, தீர், விளக்கு, தௌதவி, அமைதிப்படுத்து, செய்திபற்றி முடிவெடு, உளவுறுதிகொள், மனத்தில் ஆய்ந்து முடிவு செய், வாக்கெடுத்து முடிவுய்ய், தீர்மானம் மேற்கோள், முடிவு செய்வி, துணிபு மேற்கொள்ளச்செய்.
Resolvent
n. (மரு.,வேதி)கழலை முதலியவற்றைக் கரைக்கும் மருந்து, கூறுபடுத்திக் கரைக்கும் மருந்து, கரைக்கும் பூச்சி, (பெயரடை) கழலை முதலியவற்றைக் கரைக்கிற, கூறுபடுத்திச் சிதைக்கிற.
Resonance
n. ஒலியலை எதிர்வு, அதிர்வொலிப்பெருக்கம், முழக்க அதிர்வு, நாடி அதிர்வு, (வேதி) ஓரிணைதிற ஈரிணை திறஙகளின் இடைப்பட்ட நிலை.
Resonant
a. எதிலொலிக்கின்ற, தொடர்ந்தொலிக்கின்ற, ஒலிமுழக்கஞ் செய்கின்ற, அதிர்ந்து முழங்குகிற, எதிர் எதிரொலியாக முழங்குகிற, எதிலொலி முழக்கம் உண்டுபண்ணுகின்ற, ஒலி வாங்கி முழங்குகின்ற, ஒலி வழியே அதிர்வுற்று ஒலிபெருக்கிக் காட்டுகின்ற.
Resonator
n. ஒலி அதிர்வாற்றல் பொருள், ஒலியதிர்வு அமைவு, இசையதிர்வு முழக்கக்கருவி, இசைக்கூறாக்கக் கருவி, இசைக் கலவையில் தனிக்கூறு பிரித்துக்காட்டுங்கருவி, தனி இசைக்கூறு ஏற்றதிரும் அமைவு.