English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Restrict
v. வரையறைப்படுத்து, எல்லைக்குட்படுத்து, அடைத்துவை.
Restriction
n. வரையறை, தடைக்கட்டு, எல்லைக்க கட்டுப்பழட, தடைவரம்பு.
Result
n. பின்விளைவு, விளைபயன், பயன்முடிவு, (கண) தீர்வுமுடிவு, (வினை) விளைவுறு,. உண்டாகு, பயணில்வந்து முடிவுறு, பலனாக அமை, தீர்வுவிடையாக அமை.
Resultant
n. (இய) கூட்டு விளைவாக்கம், ஒரு புள்ளி மீதியங்கும் பல்திசைப் பல்லாற்றல்களின் மொத்த விளைவான ஒருதிசைப்பட்ட ஓராற்றல் விளைவு, இணைவாக்க விளைவு, (பெயரடை) பயனான, விளைவான, இணைவாக்க விளைவான, (இய) கூட்டு விளைவாக்கமான.
Resume
-1 n. பொழிப்பு, தொகுப்பு, சுருக்கம் சாரம்.
Resume
-2 v. திரும்ப எடுத்துக்கொள், மறுபடியும் கைக்கொள், திரும்பவுந் தொடங்கு, மீண்டுந் தொடர், திரும்பக் கூறு, இடையீட்டின்பின் மீட்டுந் தொடர்ந்து கூறு, பொழிப்பாகத் தொகுத்துரை, திரும்பவும் எடுத்துரை.
Resummons
n. pl. சட்ட முறைப்பட்ட மறு அழைப்பாணை.
Resumption
n. மறு தொடக்கம், புதுத்தொடக்கம, விட்ட இடத்திலிருந்து மீண்டுந் தொட்ங்குதல், புதுப் பொறுப்பேற்பு.
Resupinate
a. (தாவ) இலைகள் வகையில் தலைகீழான, அடிப்பகுதி மேலேயுள்ள.
Resurge
v. மீட்டெழு, மீட்டெழுவி, உயிர்த்தெழு.
Resurgence
n. மீட்டெழுச்சி, புத்தெழுச்சி, புத்துயிர்ப்பு, புத்தாக்கம்.
Resurgent
a. மீண்டெழுகிற, புத்தெழுச்சி வாய்ந்த, புத்தாக்கமுடைய, புத்துயிர் பெற்றெழுகின்ற.
Resurrect
v. கல்லறையிலிருந்து எடு, புதைகுழியிலிருந்து தோண்டி எடு, மீண்டும் பழக்க வழக்கம் புதுப்பி, மீண்டும் நினைவாற்றலைப் புதுப்பி.
Resurrection
-1 n. இயேசுநாதர் திருமீட்டெழுச்சித் திருநாள், இயேசுநாதர் திருமீட்டெழுச்சி.
Resurrection
-2 n. இறுதித்தீர்ப்பு நாளில் மாண்ட உயிர்களின் மீட்டெழுச்சி, கல்லறைப் பிணத்திருட்டு, வழக்கழிந்தவற்றின் வகையில் வழக்காற்றுப் புத்துயிர்ப்பிப்பு, அழிவிலிருந்து நன்னிலை மீட்பிப்பு, செயலின்மையிலிருந்து புதுச்செயலுக்குவிப்பு.
Resuscitate
v. உயிர்ப்பி, புத்துயிர்கொடு, மீண்டும் நடைமுறைக்குக் கொணர், மறுபடியும் பழக்கத்திற்குக் கொண்டு வா, மீண்டும் ஊக்குவித்தியக்கு.
Ret
v. சணல் வகையில் ஈரப்பதப்படுத்து, வைக்கோல் வகையில் நீரில் நனைந்து கெட்டுப்போ, அழுகிப்போ.
Retable
n. பலிபீடத்துக்குப் பின்புறமுள்ள நிலையடுக்கு.
Retail
n. சில்லறை விற்பனை, சில்லறை வாணிகம், (பெயரடை) விற்பனை வகையில் சில்லறையான, வாணிக வகையில் சில்லறையான, சில்லறை விற்பனை செய்கிற, சில்லறை வாணிகத்தில் ஈடுபட்ட, சில்லறை வாணிகத்தொடடிர்புடைய, (வினை) சில்லறையாக விற்பனைசெய், தனித்தனியாக விவரங்கூறு, செய்தி வகையில் பரப்பு, செய்தி வகையில் பரப்பு, செய்தி பரவவிடு, பலரிடங்கூறு, (வினையடை) சில்லறையாக.
Retain
v. விடாது வைத்திரு, உறுதியாகக் கைக்கொள், தொடர்ந்து கைக்கொண்டிரு, வசமாக வைத்துக்கொள், கொடுத்து வழக்கறிஞரின் தொழிலுதவி நீடிக்கும்படி செய், அழிக்காது விட்டுவைத்திரு, நீக்காமல் கொண்டிரு, மறவாது கவனத்தில் வைத்திரு.