English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Retire
n. பின்வாங்கற் சமிக்கை, (வினை) பின்வாங்கு, ஒதுங்கிச் சென்றுவிடு, பின்னடை, தனிமையிடஞ் செல், படுக்கைக்குப் போ, வேலையினின்று ஓய்வுபெறு, தொழிலை விட்டுவிடு, தேர்வு நாடுவதை விட்டுவிடு, மரப்பந்தாட்ட வகையில் ஒரு சாராருடைய ஆட்டமுறையை வேண்டுமென்றே முடித்துக்கொள், அதிகாரி அல்லது தொழிலாளி வகையில் வேலையினின்று விலகும்படி வற்புறுத்து, (படை) பின்வாங்கும் படி ஆணையிடு, நிதித்துறையில் செலாவணியிலுள்ள தாள் நாணயத்தை நிறுத்து.
Retired
a. பின்வாங்கிய, தன்னொதுக்கமான, கலந்து பழகாத, ஒதுங்கிய, தனிமை விரும்புகிற, ஊழியத்திலிருந்து ஓய்வுபெற்ற, தொழிலை விட்டுவிட்ட.
Retirement
n. பின்வாங்குதல், பின்னடைவு, பணி ஓய்வு, வேலையைவிட்டு விலகுதல், ஒதுங்குதல், ஒதுக்கம், படுக்கப்போதல், படுக்கை ஓய்வு, தனிமைநிலை, பிறர் பார்வையிற் பல்நிலை, ஒதுக்கிடம்.
Retiring
a. ஓய்விற் செல்கிற, ஓய்வுக்குரிய, ஓய்வுவேளை சார்ந்த, ஓதுங்கி வாழ்கிற.
Retiring-room
n. தங்கல் அறை, ஒதுக்கறை.
Retort
-1 n. வாலை, காய்க்சி வடித்தலிற் பயன்படுத்தப்படும் கீழ்நோக்கி வளைந்த கழுத்துடைய கண்ணாடி வடிகலம், பாதமரசத் துப்புரவுத்தொழில்-வளியாக்கத்தொழில்-எஃகுத் தொழில் ஆகியவற்றிற் பயன்படும் கொள்கலம், (வினை)வாலையிலிட்டுப் பாதரசத்தைத் தூய்மையாக்கு.
Retort
-2 n. எதிருரை, பழியெதிர்ச்செயல், (வினை) எதிர்த்துச் சுடச்சுடப் பதிலிறு, எதிர்த்தாக்குரை கூறு, எதிர்த்துக் குற்றஞ்சாட்டு, வாதத்துக்கு எதிர்வாதங்கூறு, வாதித்தவருக்கு எதிராக வாதத்தைத் திருப்பு.
Retorted
a. பின்னாக வளைக்கப்பட்ட, திரும்பி வளைந்த.
Retortion
n. மடக்கி வளைப்பு, பின்னோக்கிமடிவு, வன்முறை எதிர்ச்செயல், அனைத்துநாட்டுச் சட்டத்துறையில் பிறநாட்டுக் குடிகள்மீது பழிக்குப்பழிவாங்குஞ் செயல்.
Retouch
v. திரும்பத்தொடு, திரும்பக் கைவைத்துச் செப்பனிடு.
Retrace
v. மூலநோக்கிப் பின்சென்று ஆராய், மீண்டும் அடியிலிருந்து தொடங்கு, திரும்பிப் பார்வையைச் செலுத்து, சென்றதை மீண்டும் மனத்திரையில் நினைத்துப்பார், வந்த வழியே திரும்பிச்செல், செய்த செயலை அழி.
Retract
v. பின்னிடு, பின் இழு, பின்வாங்கு, உள்வாங்கு, சுருங்கு, பின்வாங்கிக்கொள், உள்நோக்கிச் சுருக்கிக்கொள், பின்னுக்கு இழுக்கத்தக்கதாயிரு, சுருக்கத்தக்கதாயிரு, உறதி கைதுற, சொன்னசொல் மாற்று, சூளுரை திரும்பப் பெறு, கொள்கை மறு, கருத்துக் கைவிடு, கூறியது பொய்யென ஒத்துக்கொள், தவறென ஏற்றுக்கொள், தள்ளுபடி செய், நாக்கு உள்ளிழுத்து உச்சரி, சதுரங்கத்தில் முந்திய காயின் இயக்கத்தை மறித்தியக்கு.
Retractation
n. தள்ளுபடி செய்தல், உத்தரவை மாற்றுதல், சொன்னதிலிருந்து பிறழ்வு, சூளுரை மாற்றுதல், பின்னடைவு.
Retracted
a. உள்ளுக்கிழுக்கப்பட்ட, பின்னுக்குத் திரும்பிய, மாற்றப்பட்ட, தள்ளுபடி செய்யப்பட்ட, நாக்கை உள்ளேயிழுதது உச்சரிக்கப்பட்ட.
Retractile
a. பின்னுக்கு இழுக்கப்படத்தக்க.
Retractive
a. பின்னுக்கிழுக்கக்கூடிய, பின்வாங்கும் இயல்புடைய, சதுரங்கத்தில் ஆடிய காய்வகையில் மறித்தாடக் கூடிய.
Retractor
n. இயந்திர உறுப்புகளின் பின்ழுப்பமைவு, பின்னீர்ப்புத் தசை, சதுரங்க ஆட்டத்தில் மறித்தாட்டம் அவசியமாக்கும் நிலை.
Retral
a. (இய.,தாவ) பின்புறஞ் சார்ந்த, பின்பக்கத்திய.
Retransfer
-1 n. இடமாற்ற மறிதலை, மீட்டிடமாற்றம்.
Retransfer
-2 v. மறுபடியும் மாற்று, முன்னிடத்திற்கு அனுப்பு.