English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Retransform
v. முன் உருவத்திற்கே மாற்று, மீட்டுரு மாற்று.
Retranslate
v. மறுமொழிபெயர்ப்புச் செய்.
Retranslation
n. மறுமொழிபெயர்ப்பு, மறிநிலை மொழிபெயர்ப்பு.
Retransmission
n. மீட்டெதிருய்ப்பு, திருப்பியனுப்பீடு.
Retransmit
v. திருப்பியனுப்பு, மீட்டெதிர் கடக்கச்செய், முன்னிலம் ஒருபடி கடந்து முன்னேறுவி.
Re-traverse
v. மீட்டுங் குறுக்கே திரும்பிக்கடந்து செல்.
Re-tread
v. மீட்டும் விதி, மீண்டும் மிதித்துச்செல், குழாய்ப்பட்டைக்கு மறு அடிப்பகுதி அமை.
Retreading
மேற்பட்டையிடல், மறுபட்டையிடல்
Retreat
n. பின்னடைவு, (படை) பின்தாங்கல் நடவடிக்கை, பின்வாங்கிச் செல்கை, பின்னடைவுச் சமிக்கை, ஓய்வு, ஓய்வுநேரம், ஓய்விடம், (படை) ஓய்வுச்சமிக்கை, (படை) அந்திவேளை எக்காள இசைப்பு, தனியிடம், ஒதுங்குநிலை, தனியிடஞ் சேர்வு, பாதுகாப்பிடம், தற்காலிகச் சமய நோன்புக்கூடம், பித்தர் பேணகம், இயலார் பாதுகாப்பு மனை, உதவிநிதி பெறுவோர் புகலிடம், (வினை) பின்னடை, பின்னுக்குச் செல், பின்வாங்கு, (படை) பின்வாங்கல் நடவடிக்கை மேற்கொள், (படை) பின்னிடைந்தோடு, புறமுதுகிட்டுச்செல், படைவகையில் இடம்விட்டுச்செல், இடம்விட்டுக்கொடு, சூதாட்டத்தில் காயைப் பின்னுக்கு நகர்த்து, பின்செல், பின்னோக்கிச் சென்று மறைவுறு.
Retrench
v. செலவினம் வெட்டிக்குற வெட்டிக்கழித்துத் தொகை மட்டுப்படுத்து, செலவினங் குறைத்துச் சிக்கனப்படுத்து, சிக்கனவழிகளைக் கையாளு, ஏடு முதலிய வற்றின் வகையில் வெட்டிக்குறுக்கு, பகுதியினை வெட்டியெடு, (படை) அணையரண் உள்ள கழ்மூலம் காப்பு வலிமையூட்டு.
Retrenchment
n. வெட்டிக்குறைப்பு, வெட்டுச்சிக்கனம், நீடித்த பாதுகாப்புக்கான உள்ளரண் அமைப்பு.
Retrial
n. மறு விசாரணை, வழக்குமன்றத்தின் மறு கேள்வி முறை.
Retribution
n. முறைமைக் கைம்மாறு, பழியெதிர்ச்செயல், வஞ்சத்தீர்வு.
Retrim
v. மீண்டும் ஒழுங்குசெய், திருத்தி மறுபடியும் புதுக்கு.
Retrive
n. மீட்பு வாய்ப்பு, சீர்ப்பாட்டுக்குரிய வாய்ப்புநிலை, (வினை) மீட்பி, தப்புவி, பிழைப்பி, காத்தளி, மறுபடியும் உயிர்ப்பூட்டு, மீடடுக்கொடு, மீண்டும் நன்னிலைக்குக் கொணர், மீண்டுஞ் செழிப்புநிலைக்குக் கொண்டுவா, இழப்பீடுசெய், பிழை காத்தமை, மறுபடியுஞ் செப்பஞ் செய், மீண்டும் நினைவிற்குக் கொண்டுவா, முஸ்ன்று நினைவுபடுத்தி வெற்றிகாண் மறைந்ததை ண்டும் வௌதப்படுத்து, வேட்டைநாய் வகையில் காயம்பட்டு வீழ்ந்ததைத் தேடி எடுத்துக்கொண்டுவா, கண்டெடுத்துக் கொணர்.
Retriver
n. மீட்பு ஞமலி, வேட்டையாடிக் கொன்ற விலங்குகளைத் தேடிக் கொண்டிவந்து சேர்க்கும்பழக்குவிக்கப்பட்ட நாய்.
Retroact
v. எதிர்ச்செயரலாற்று, பின்னோக்கிச் செயற்படு, பின்னோக்கிய விளைவுடையதாயிரு, முன்மூல விளைவுடையதாயிரு.
Retroactive
a. சென்றகாலச் செய்திகள் வகையில் பயன்படுத்தப்படுகிற, சென்றகால நிகழ்ச்சிகளைப் பாதிக்கறி, பின்னோக்கிச செயற்படுகிற.
Retrocede
-1 v. பின்னோக்கி இயங்கு, பின்னடைந்து செல், கீல்வாதம் வகையில் உள்நோக்கித் தாக்கு.
Retrocede
-2 v. ஆட்சிப்பரப்பினைத் திருப்பிக் கொடுத்துவிடு.