English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Return
n. மீட்சி, திரும்புகை, மீள்வரவு, திரும்பி வருகை, பின்னடைவு, மீட்டளிப்பு, திருப்பிக்கொடுப்பு, மீட்டளிப்புப் பொருள், திருப்பிக் கொடுக்கப்படுவது, விற்காது திருப்பித்தரப்படுவது, எதிடிர்மாற்று, ஈடு, எதிர்ச்செயல், பதில், மறுமொழி, விளைவு, பஸ்ன், மீட்டனுப்பீடு, வேட்பாளர் வகையில் தேர்ந்தெடுப்பு, தேர்ந்தெடுப்பு அறிவிப்பு, ஆணைத்தாள்மீது குறித்தனுப்பப்படும் நகர நாயகத்தின் அறிவிப்பு, செலவு மீள்வுப் பயணச்சீட்டு, மறு பந்தய ஆட்டம், ஆள்மாறாது ஆடப்படுந் தொடர் ஆட்டம், (க-க) தொடர்மடக்குக் கட்டு, செங்கோணவாட்டாக மடங்கித் தொடரும் கட்டுமானப் பகுதி, (பெயரடை) திரும்புகிற, திரும்புவதற்குரிய, மாற்றான, பதிலான, (க-க) செங்கோணமாகத் தொடர்ந்த, (வினை) மீள், திரும்பிவா, திரும்பிச்செல், திருப்பிக்கொடு, திருப்பிச் செலுத்து, திருப்பி அனுப்பு, பந்து வகையில் திருப்பியடி, திரும்பவும் எடுத்த இடத்தில் வை, மறுமொழி கூறு, எதிர்த்துக்கூறு, கைம்மாறு கொடு, பலனளி, ஆதாயமளி, மாற்றாகக்டகொடு, பதிலாகக் கொடு, பதில்செய், எதிரீடாகச்செய், முன்னையநிலை அடை, உரியவரிடமே சென்றுசேர், உரிய இடமே சென்றடை, திரும்பவும் நாடு, முன்னோக்கிக் கவனஞ் செலுத்து, மீண்டும் அணுகு, மீண்டஞ் செய், தேர்ந்தெடு, தேர்ந்தெடுத்தனுப்பு, தேர்ந்தெடுப்பறிவி, ஆணைக்கு அலுவல் முறையில் பதில் தெரிவி, (க-க) கட்டிடப்பகுதி வகையில் வேறு திசையில் திரும்பித்தொடர்.
Returnable
a. மீண்டும் ஒப்புவிக்கப்பட வேண்டிய, திருப்பி அனுப்பப்படத் தக்க, திருப்பி அனுப்பப்படவேண்டிய, சட்டப்படித் திருப்பி அனுப்பப்படவேண்டிய.
Returned.
a. திரும்பிவந்த, திருப்பி அனுப்பப்பட்ட.
Returning
a. திரும்புகிற, தேர்ந்தெடுத்தனுப்புகிற.
Returns
n. pl. அடுக்குமுறை வரவு, பலதடவை அடுத்தடுத்து வருகை, தொழில் முஸ்ற்சியின் ஆதாயம், தொழில் முயற்சியிலிருந்து கிடைக்குந் தொகைகள், தொழில் முயற்சியிலிருந்துவரும் ஆதாயம், காரங்குறைந்த குழாய்ப் புகையிலை வகை.
Retuse
a. (தாவ.,பூச்) உட்பள்ளத்துடன் கூடிய, தடித்த நுனி வாய்ந்த.
Reunion
n. பிரிந்தவர் கூட்டம், நண்பர் நிலை, தலைக்கூடல், உணர்ச்சியொத்தோர் கூட்டிருக்கை.
Reunionism
n. ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் இங்கிலாந்து திருச்சபையும் மீண்டும் ஒன்றுபடவேண்டுமென்ற விருப்பம்.
Reunionist
n. ரோமன் கத்தோலிக்க திருச்சபையையும் இங்கிலாந்து திருச்சபையையும்மீண்டும் ஒன்றாக்க முயல்பவர்.
Reurge
v. மீண்டும் வலியுறுத்தி வாதிடு, மறுபடியும் அழுத்தமாக வேண்டு.
Rev
n. (பே-வ) பொறியியக்க வகையில் சுழல், சுழற்றி, (வினை) சுழலு, கழற்று, வேகமாக இயங்கச்செய், தொடக்கத்திலேயே பொறி விரைவாக இயங்கச் செய்.
Revaccinate
v. திரும்ப அம்மை குத்து.
Revaccination
n. பயறு-வாற்கோதுமை மாவு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உணவுவகை.
Revalorization
n. நாணய மதிப்பு மீட்பு, நாட்டின் நடப்பு நாணயத்தின் மதிப்பு பழைய நிலையடையச் செய்தல்.
Revaluation
n. மறுமதிப்பீடு, மறுகணிப்பீடு.
Revalue
v. மறுமுறை மதிப்பிடு, புதிதாகக் கணிப்பிடு.
Revanche
n. பழிக்குப்பழி, எதிர் ஆட்டப்பந்தயம், நாட்டுவாழ்வில் இழந்தது மீடகத் துடிப்பார்வம், பிரான்சு-செர்மன் போரில் தோற்றிழந்த நாடுகளை மீட்க பிரான்சு கொண்ட துடிப்பார்வம்.
Reveal
-1 n. கதவு-பலகணி உட்புறப் பக்கச்சுவர்ப் பரப்பு.
Reveal
-2 v. காண்பித்தருள், திரை விலக்கிக் காட்டு, மறை வௌதப்படுத்து.
Reved
v. 'ரீவ்3' என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.