English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Reverential
a. மதிப்பார்வமிக்க, பயபக்தியுல்ன்கூடிய, பணிவார்ந்த.
Reverie
n. பகற் கனவு, தன்னைமறந்த ஆழ்ந்த சிந்தனை நிலை, பகற் கனவிலாழ்ந்த மனநிலையைக் காட்டுங் கருயியிசைக்கூறு.
Revers
n. (பிர) சட்டைவிரிமவர் விளிம்பு, உள்வரி வண்ணங்காட்டும் புறமடித்துத் திருப்பிய சட்டை-மார்புக்கச்சுகளின் ஓரப்பகுதி.
Reversal
n. புறமறிப்பு, தள்ளுபடி.
Reverse
n. மறுதலை, மிறநிலை, எதிர்மறை, பின்புறம், நாணயத்தின் மறுபுறம், இன்னல், இடர், அழிவு, தோல்வி, (பெயரடை) மறிதலையான, மறிநிலையான, எதிர்மறையான, மறுபுறமான, தலைகீழான, பின்புறமான, பின்புறமாகச் செயலாற்றுகிற, பின்புறம் தாக்குகிற, (வினை) மறுபக்கமாகத் திருப்பு, தலைகீழாக்கு, நேர்மாறாக்கு, தலைமறி, தலைமாற்று, எதிர்ப்பண்புடையதாக்கு, எதிர்விளைவுடையதாக்கு, செயல்மாற்று, மாற்றிச்செய், இயக்கத் திசைமாற்று, பின்புறமாகச் செலுத்து, ஆடல்துறையில் எதிபுறமாகச் சுழலு, ஆணையை நீக்கு, உரிமை தள்ளுபடி செய்.
Reversi
n. பலகைக் கட்ட ஆட்டவகை.
Reversion
n. திரும்புகை, முன்னைநிலை மீள்வு, முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று, முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு, (உயி) மரபு மடக்கம், மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு, (சட்) உரிமை மீள்வரவு, உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல், (சட்) உரிமை மேல்வரவு, உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல், இறுதிநிலைவ வழியுரிமை, உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு, மாள்வில் கொடுக்கப்படவேண்டுந் தொகை, உருநிலை மரபுரிமையுடைமை, பிறர் கைதுறப்பால் வருங்காலத்தில் பெறத்தக்கதாகவுள்ள உடைமை, மீதி, எச்சமிச்சம்.
Reversioner
n. உரிமை மீள்வரவாளர்.
Revert
v. மடக்கி வந்தடை, உடைமை அல்லது உரிமை வகையில் மீள்வுரிமையாகச் சென்றுசேர், பணிவகையில் இறுநிலை வழியுரிமையாகச் சென்றுசேர், பணிவகையில் இறுநிலை வழியுரிமையாக வந்தடை, முன்னிலைக்கு மீள்வுறு, மூலப்பண்படா நிலைக்கு மடங்கு, பேச்சில் பழைய செய்தியை மீண்டும் நாடு, எடுத்துக்கொண்டே தலைப்பிற்கு மீண்டுஞ் செல், பழைய கொள்கைக்கே மீளு, பார்வையைப் பின்புறமாகத் திருப்பு.
Revertible
a. உடைமை வகையில் மீள்வுரிமையாகச் செல்லத்தக்க.
Revet
v. அணைசுவரிடு, கோட்டையமைப்பில் மதில்-கொத்தளம் ஆகியவற்றிற்கு எதிரணையாகச் சுவரமை.
Revetment
n. அணைசுவரிடு, கோட்டையமைப்பில் மதில்-கொத்தளம் ஆகியவற்றிற்கு எதிரணையாகச் சுவரமை.
Review
n. மறுசீராய்வு, மீட்டாய்வு, மறுசீர்ப்பாடு, ஏடு முதலிய வற்றின் வகையில் மதிப்பாய்வுரை, மதிப்பாய்விதழ், சென்றகாலநிலை ஆய்வு, நிகழ்ச்சிகள்-பொதுநிலைகள்-தொடர் வரலாறுகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை, (படை) கடல்-நில-வான் படைகளின் கூட்டணிப் பார்வையீடு, மேல்வழக்காய்வு, (வினை) மறுபடியும் பார், மறுசீராய்வுசெய், திரும்பிப் பின்நோக்கு, பின்நோக்கஞ் செலுத்து, பார்வையிடு, ஏடு வகையில் மதிப்பாய்வு செய், மதிப்பாய்விதழில் ஆய்வுரை எழுது, வழக்கு வகையில் மேலாய்வு செய், (படை) கூட்டணி மேற்பார்வையிடு.
Reviewer
n. ஏட்டின் மதிப்பாய்வுரையாளர்.
Revile
v. திட்டு, வைதுரை.
Revise
n. மறுபார்வைத்தாள், அச்சுத்துறையில் திருத்திய படிவம், (வினை) திருப்பிப்பார், சரிபார், மறுபார்வையிடு, மறு ஆய்வுசெய்து திருத்து, திருந்திய வடிவங்கொடு, திருத்தங்கள் செய்து சீராக்கு, மறு ஆய்வுசேய்து மாற்றியமை.
Revision
n. புனராய்வு, திருத்தியமைத்தல், திருத்திய படிவம், திருத்த அமைவு, மாற்றமைவு.
Revisional, revisionary
a. சீராய்வுக்குரிய, திருத்தமைவு சார்ந்த, மாற்றமைவான.
Revival
n. மீட்டுயிர்ப்பித்தல், மீட்டுயிர்ப்பு, மீட்டுணர்வளிப்பு, மீட்டெழுச்சி, உடல்-உள வகைகளில் புத்தூக்க அளிப்பு, உடல்-உள வகைகளில் புத்தூக்க அடைவு, புதுப்பிப்பு, மீடடும் வழக்காற்றிற்குக் கொண்டு வருதல், புது மறுமுயற்சி, புத்தாக்கம், சமயத்துறைப் புத்தெழுச்சி, புத்தெழுச்சி இயக்கம், புதுமலர்ச்சி, மறுமலர்ச்சி, புதுத்தோற்றம்.