English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Revue
n. நையாண்டி நாடகம், நிகழ்ச்சிகளைக் கோத்துக் கேலியாக நடிக்குங் காட்சிக்கோவை.
Revulsion
n. திடீர்நிலைமாற்றம், திடீர் உணர்ச்சி வேறுபாடு, (மரு) மாற்றுறுப்புச் சிகிச்சை, மற்றோர் உறுப்பில் எதிருறுத்தல் தூண்டும் முறை, (பெயரடை) எதிருறுமுறை சார்ந்த, எதிருறுத்தல் உண்டுபண்ணுகிற.
Revulsive
n. (மரு)எதிரூறுமுறை, மாற்றுறுப்புச் சிகிச்சையில் பழுதுபட்ட உறுப்பின் உறுத்தலுக்கு எதிராக மற்றோர் உறுப்பில் எதிரூறுத்தல் தூண்டும் முறை, (பெயரடை) எதிரூறுமுறை சார்ந்த, எதிருறுத்தல் உண்டுபண்ணுகிற.
Reward
n. பரிசு, வெகுமானம், ஊக்க நன்கொடை, உழைப்புக்குரிய விருப்பூதியம், நற்செயலுக்குரிய மதிப்புக் கைம்மாறு, செயலுக்குரிய நேர்பயன், (வினை) பரிசளி, விருப்ப நன்கொடை வழங்கு, நல்விளைவு நல்கு, நேர்பயன் அளி.
Re-winding
மீளச்சுற்றுதல், மறுதிருகல்
Reword
v. திரும்பவுஞ் செல்லாமை.
Reynard
n. சம்புகன், பிரஞ்சுப் பழங்கதை மரபில் வரும் நரியின் பெயர், நரி.
Rhabdomancy
n. மந்திரக்கோலினாற் குறிகூறுதல், தண்டூகம்.
Rhadamanthine
a. நடு நேர்மையுடைய, நடுநிலையில் தவறா நீதிவாய்ந்த.
Rhadamanthus
n. கிரேக்க புராணமரபில் கீழுலக நடுவர்களில் ஒருவர் பெயர், நடுநிலை தவறாத நீதிபதி.
Rhaetian
n. ரோமப்பேரரசின் பகுதிக்குரிய பெயர், (பெயரடை) ரேய்ட்டியா சார்ந்த.
Rhaetic
a. (மண்) இடையுயிரூழியின் முழ்ற் பருவக் கடைசிப் பிரிவுக்குரிய.
Rhaeto-Romance, Rheato-Romanic
n. ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ரோமான்ஷ்-லாடின் முதலிய வழக்கு மொழிகளின் தொகுதி, (பெயரடை) ரோமான்ஷ்-லாடின் முதலிய ஸ்விட்ஸர்லாந்திலுள்ள வழக்கு மொழிகளின் குழுவினைச் சார்ந்த.
Rhapsode
n. பழங்கிரேக்க பாணன், பண்டைக் கிரேக்கரிடையே வீரகாவியம் பாராயணஞ் செய்பவர்.
Rhapsodic
a. வீரகாவியப்பகுதிக்குரிய, வீரகாவியம் பாராயணஞ் செய்யும் பாணனுக்குரிய.
Rhapsodical
a. வீரகாவியப்பகுதிக்குரிய, வீரகாவியம் பாராயணஞ் செய்யும் பாணனுக்குரிய, கட்டற்ற உணர்ச்சிக்கொந்தளிப்பு வாய்ந்த, உள்ளம் முழுதும் ஈடுபட்டுத் தோய்ந்த.
Rhapsodist
n. வீரகாவியம் பாராயணஞ் செய்யும் பாணன், கட்டுக்கோப்பற்ற செய்யுள் எழுதுபவர், தொடர்பற்றவற்றைப் பிணைத்துப் பேசுபவர்.
Rhapsodize
v. வீரகாவியப்பகுதி பாராயணஞ் செய், கட்டுக்கோப்புத் தளர்வான செய்யுள் இயற்று, தொடர்பற்றவற்றைப் பிணைத்துப்பேசு, கட்டற்ற கற்பனை உணர்ச்சியுடன் பேசு.
Rhapsody
n. வீரகாவியப் பாராயணப்பகுதி, வீரகாவியம், கட்டற்ற உணர்ச்சிக்கற்பனை வாய்ந்த செய்யுள், கட்டுக்கோப்புத் தளர்வான துண்டுத் துணுக்குக்கோவை, உணர்ச்சிக் கொந்தளிப்பான பேச்சு, (இசை) பரிபாட்டு வகை, அளவொவ்வாப் பல்கோப்புக் கதம்ப இசை.