English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rille
n. (வான்) திங்கட் பரப்புப் பள்ளத்தாக்கு.
Rillettes, rilletts
பன்றிக்கறித் துவரன், பன்றி இறைச்சி-கோழிக்குஞ்சு நிணம் முதலியவை கலந்த கொத்துக் கறி.
Rim
-1 n. ஓரம், விளிம்பு, வட்ட ஓர விளிம்பு, திண்ணிய கரை விளிம்பு, புடைப்பான விளிம்புக் கரை, நீளுருளையின்சல்லடைச்சட்டம், (கப்) நீர்ப்பரப்பு, (செய்) வளையம், வட்டவடிவப்பொருள்,. (வினை) வட்டவடிவ விளிம்பு இணைவி, ஓரம் அமைவி, விளிம்பாக அமை, ஓரமாக இயலு.
Rim
-2 n. (உறு) வபை, அகட்டு உள்வரிச்சவ்வு, அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கயி இரட்டைச் சவ்வுப் பை.
Rim-brake
n. சக்கர ஓரத் தடுப்புக்கட்டை.
Rime
-1 n. (செய்) வெண்ணுரைபோன்ற உறைபனிப் படிவு, (வினை) வெண்ணுரைபோன்ற உறைபனிப் படிவால் மூடு.
Rimer
n. உலோகத்துளையிடு கருவி.
Rimmon
n. டமாஸ்கஸில் வணங்கப்பட்ட பண்டைத் தெய்வம்.
Rimose, rimous
(தாவ) முழுதும் இடைப்பிளவுப்ள் கொண்ட.
Rind
n. புறணி, தாவரங்களின் பட்டை, பழத்தோல், காய்கறிகளின் புறத்தொலி., பாலேடு முதலியவற்றின்மேல் தோடு, பன்றியிறைச்சியின் மேல்தொலி, புறந்தோற்றம்,. மேற்புறம், (வினை) பட்டை உரி.
Ring
-1 n. மோதிரம், வளையம், மூக்குவளையம், கைவளையம், சுற்றுப்பட்டை, கம்பிவளையம், சுற்றுவளையம், சுற்றுவிளிம்பு, வட்டு, வட்ட அமைவு, மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு, சங்கிலிக்கவசக்கண்ணி, வட்டவழி, திருகுநெறி, மரங்களின் சாலைவட்டம், வட்டரங்கு, காட்சியரங்கு,. மற
Ring
-2 n. மணியடிப்பு, மணியடிப்பொலி, மணியோசை, தொனி, குரலின் தனிப்பண்பு, மணியடிப்பதுபோன்ற ஒலி, நாதம், நாணயத்தின் கண்கண் என்ற அதிர்வொலி, உலோகம் முதலிய வற்றின் தட்டொலி, தொலைபேசி அழைப்பு மணி ஒலி, (வினை) மணி அடி, மணிகளின் ஒலி எழுப்பு, மணி வகையில் அதிர்வொலி எழுப்பு,
Ring-bark
v. சுற்றுவரி வெட்டு, மரப்பட்டையில் வளையங்கள் வெட்டு.
Ring-bone
n. எலும்புக் கரணை, எலும்புக்கரணை நோய்.
Ring-cartilage
n. குரல்வளைக் குருத்தெலும்பு.
Ring-dove
n. காட்டுப்புறா வகை.
Ringed
-1 a. வளையத்தாற் சூழப்பட்ட, வளையம்போன்ற அடையாளமுள்ள, மோதிர வடிவணமுடைய, வளையங்கள் கொண்டுள்ள.
Ringed
-2 v. 'ரிங்1' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.