English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ringent
a. வாய் பிளந்துகொண்டிருக்கிற, இளிக்கிற, (தாவ) அங்காத்திருக்கிற.
Ringer
n. எறிவாட்டத்தில் முளையைச் சுற்றி விழுந்து படியும் வளையம், வேட்டையில் வட்டமாக ஓடும் நரி, மணியடிப்பதற்கான அமைவு.
Ring-fence
n. சுற்றடைப்புவேலி.
Ring-finger
n. மோதிரவிரல்.
Ring-goal
n. எறிகண்ணியாட்டம், கழிகளைக்கொண்டு சிறு வளையத்தை இலக்குநோக்கி எறியும் விளையாட்டுவகை.
Ringhunt
n. தீவளையவேட்டை, நெருப்பு வளையத்தைக் கொண்டு விலங்குகள் உட்பக்கம் துரத்தப்படும் வேட்டை முறை.
Ringleader
n. கலகத்தலைவன்.
Ringlet
n. சிறுமோதிரம், காளான் படர்வால் ஏற்படும் கருநிறப் புல்வட்டம், மோதிரவடிவ அடையாளம், பனிச்சை, மயிர்ச்சுருள்.
Ring-lock
n. வளையப்பொருத்தப் பூட்டு, பல்வளையங்களைச் சரியாகப் பொருத்துவதன் மூலமே திறந்துமூடப்படும் பூட்டு வகை.
Ring-man
n. குதிரைப்பந்தயப் பணய வாழ்க்கையர்.
Ring-master
n. வட்டரங்கு மேலாளர்.
Ring-neck
n. மணிப்புறா, மணிக்குருவி,. கழுத்தில் வளையம் போன்ற அடையாளமுடைய குருவிவகை.
Ring-necked
a. கழுத்தைச்சுற்றி வண்ணப்பட்டையுடைய, கழுத்தில் வண்ணப்பட்டைகளையுடைய.
Ringsnake
n. சுருட்சிப் புல்வௌதப் பாம்பு வகை.
Ring-stand
n. மோதிர நிலைமாட்டி, விரல்மோதிரங்களை மாட்டி வைப்பதற்கான நிலைச்சட்டம்.
Ring-straked
a. (விவி) உடம்பைச் சுற்றி வண்ண வளையங்களையுடைய.
Ring-tail
n. நீலப்பருந்துவகையின் பெடை, மூன்று வயதுக்குட்பட்ட கழுகு, சுருள்வால் பூனைவகை.
Ring-tailed
a. பலவண்ண வளை வாலுடைய, நுனியிற் சுருண்ட வாலுடைய.
Ring-taw
n. வட்டக் கழற்றி ஆட்டம்.