English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ripple-cloth
n. அலைவரித் துகில்.
Ripple-mark
n. (மண்) அலைப்பரிப்படையாளம், முன்னுழி நீர் அலைப்பினால் அல்லது காற்றுவீச்சினால் அடிநிலப் பாறையடுக்குகளில் தோன்றும் அரிப்புத்தடம்.
Ripplet
n. சிறு குறுந்திரை.
Rip-saw
n. பிளம்பு இரம்பம்.
Ripuarian
a. ரைன் ஆற்றங்கரையில் வாழ்ந்த பண்டைப் பிராங்குகளின் இனத்தைச் சார்ந்த.
Rise
n. எழுச்சி, கதிரவன் தோற்றுவாய், ஆற்றின் பிறப்பிடம், மேடு,. குன்று, திடர், தேரி, பாதையேற்றம், உயர்வு, முன்னேற்றம், தோற்றம், படி உயர்ச்சி, பதவி மேம்பாடு, மதிப்புயர்வு, விலையேற்றம்., கூலியேற்றம், குரல் உயர்ச்சி, மீன்வகையில் நீர்ப்பரப்பிற்கு உயர்ந்துவரல், வில் வளைவின் குத்துயர்ச்சி, படியின் நிலத்தினின்று மெலெழு, உயரப்பற, வானிலெழு, மேன்மேல் உயர்ந்துசெல், மேலே செல், மேல்நோக்கிச் சாய்வாயிரு வணக்கமுறையில் எழு, எழுந்து நின்று வரவேற்றுப் பாராட்டு, உயிர்த்தெழு, கூட்ட அமர்வு முடித்தெழு, மன்ற அமர்வு முடிவுறு, நிமிர், நிமிர்ந்திரு, கிளம்பு, துள்ளு, ஆற்றுவகையில் பிறப்பிடமாகக் கொண்டெழு, புறப்படு, மேலெழுந்து தோன்று, வௌதப்படு, முனைப்பாகு, வளர்ச்சியுறு, ஓங்கு, மேம்படு, முன்னேறு, மேல்நிலை அடை, உயர்வுறு, பெருக்கமுறு, மேன்மேலும் மிகுதியாகு, பொங்கு, இயங்கத்தொடங்கு, விழித்தெழு, எழுச்சிகொள், எழுச்சியுறு, மனத்தில் தோன்று, அமைதி குலைத்தெழு, வீறுகொண்டெழு, பணிவப்ற்றியெழு, கிளர்ந்தெழு, மீறியெழு, கிளர்ச்சி செய், கலகஞ்செய், சீறியெழு, வெறுத்தெழு, விளைவாகு, உண்டாகு, விளைவாகப்பேறு, தகுதி பொருந்தப்பெறு, (கப்) உச்சியிலிருந்து அடியாகத் தோன்றப்பெறு.
Riser
n. படுக்கையிலிருந்து எழுந்திருப்பவர், எழுவது, இரண்டு பேடிகளின் மேற்படிகளின் மேற்பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதி.
Risibility
n. சிரிப்பாற்றல், சிரிப்பு விருப்பம், சிரிப்பு.
Risible
a. சிரிக்கும் பாங்குடைய, நகைப்புச் சார்ந்த.
Rising
n. எழல், எழுந்திருத்தல், உயருதல், உயர்ந்து செல்லுதல், ஏற்றம், அதிகரிப்பு, பெருக்கம், மேற்பரப்பிற்கு வருதல், முன்னேற்றம், தோற்றம், மறு உயிரெழுச்சி, இயேசுநாதரின் திருமீட்டெழுச்சி, கிளர்ச்சி, கலகம், கட்டி, பரு, கொப்புளம், (பெயரடை) எறுகிற, பெருகுகிற, உதிக்கிற, அடிவானத்துக்கு மேலே வருகிற, முன்னேறுகிற, உயர்ந்து வளருகிற, இனி வளரவிருக்கிற, வருங்காலத்திற்குய, குறிப்பிட்ட வயதினை நெருங்குகிற.
Rising-again
n. இயேசுநாதரின் திருமீட்டெழுச்சி, மறு உயிர் எழுச்சி.
Risk
n. இடர்வரவு, அபாய நேர்வு, வருநிலை இழப்பு, வருதீங்கு, எதிர்பாரா ஊறுபாடு, இடர்காப்பின்மை, எளிதில் தீங்கிற்கு ஆளாகும் நிலை, விளைவுக்குரிய பொறுப்பு, (வினை) வரவு துணிந்திறங்கு, வருவிளைவின் பொறுப்பை எற்றுக்கொள்ள முனை.
Risk-money
n. காசுக்கணக்கர் படி.
Risky
a. இடர்வரவு நிரம்பிய, அபாயமிக்க, பெருநட்டம் ஏற்படத்தக்க, கதை-நாடக வகைகளில் ஒழுக்கக்கேடு உண்டு பண்ணத்தக்க, மரபு நிலை ஆசாரங்கள் வகையில் புண்படுத்தக் கூடிய.
Risque
a. கதை-நாடக வகைகளில் ஒழுக்கத்திற்கு ஊறுவிளைக்கிற.
Rissole
n. ரொட்டி மீன் வறை, இறைச்சி மீன் வறை.
Rissotto
n. அரிசிப் புழுக்கல்.
Ritardando
adv. இன்னும் மெதுவாக.
Rite
n. கரணம், வினைமுறை, சமயச் சடங்கு, பழக்கவழக்க வினைமரபு, வழிபாட்டுமுறை.
Ritual
n. சடங்குமுறை, கரணவியல், சடங்கு முறையாற்றுகை, வினைமுறை முற்றுவிப்பு, (பெயரடை) சமய வினைமுறை சார்ந்த, வினைமுறைகளை உட்கொண்ட, வினைமுறைகளாலான, சல்ங்கியல்பான.