English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ritualist
n. சடங்குவெறியர்.
Ritualize
v. சடங்கு வினைப்படுத்து, சடங்கார்வங் கொள்.
Rivage
n. (செய்) கரை, ஓரம்.
Rival
n. எதிராள், போட்டியாளர், காதலில் மாற்றார், பரிசுவகையில் உடன் போட்டியாளர், பொது இலக்கு நாடி இகலி நிற்பவர், எதிர்மாற்றுப் பொருள், வோட்டியான் செய்தி, ஒப்பிடுவதற்குரிய பண்பு, (பெயரடை) போட்டியிடுகிற, (வினை) இகலு, எதிர்த்துப் போட்டியிடு, ஒப்பிடத்தக்கவராயிரு, ஒப்பிடத்தக்கவாரு.
Rivalry
n. இகல், போட்டி, போட்டியிடல், போட்டிநிலை, போட்டியிடுபவராயிருக்கும் நிலை, போட்டி மனப்பான்மை, போட்டியுணர்ச்சி.
Rivalship
n. போட்டியிடுதல், ஒப்பாயிருக்க முனைதல்.
Rive
v. கிழி, பிள, விள்ளு, திருகியிழு, வெட்டித்துண்டாக்கு, மேட்டுப் பட்டைகளுக்கான வரிச்சலாகப் பிளந்து எடு, பிளவுறு, அடிபட்டுக் கீறு, பிளவுறத்தக்கதாயிரு.
Rivel
v. சுரிப்புறு, சுருங்கு.
River
-1 n. ஆறு, நதி, வாழ்வுக்கும் சாவுக்குமிடையேயுள்ள எல்லைக்கோடு, ஒழுக்கின் பெருக்கு, தொடர் ஒழுக்கு, (பெயரடை) ஆறுசார்ந்த, ஆற்றில் வாழ்கிற, ஆற்றோரமாக வாழ்கிற., ஆற்றில் காண்ப்பெறுகிற, ஆற்றோரமாகக் காணப்பெறுகிற.
River
-2 n. வரிச்சல் பிளப்பவர், கட்டையைப் பிளந்து மேட்டுப்பட்டை அமைப்பவர்.
Riverain
n. ஆற்றங்கரையில் வாழ்பவர், (பெயரடை) ஆற்றிற்குரிய, ஆற்றின் மருங்கு சார்ந்த.
River-bed
n. ஆற்றுப்படுகை, ஆற்றின் அடித்தரை.
River-craft
n. ஆற்றுப்படகு.
River-god
n. ஆற்றுத்தெய்வதம்.
Riverine
a. ஆற்றின்மேல் உள்ள, ஆற்றினுடைய, ஆற்றோரமான.
Riverside
n. ஆற்றோரம், ஆற்றின் கரையடுத்த இடம், (பெயரடை) ஆற்றின் பாங்கருள்ள.
Rivet, n.,
குடையாணி, மறுபுறம் தட்டிப் பிணைத்திறுக்குதற்கான ஆணி, (வினை) தாழ்ப்பாள் இறுக்கு, ஆணிகளைக்கொண்டு இணை அல்லது பிணை, உறுதியாக்கு, அசையாமல் நிலைப்படுத்து, ஒருமுகப்படுத்து, முழுக் கவனமும் செலுத்து, கவனத்தை முழுதுங் கவர், கவனம்-பார்வை முதலிய வகைளில் முற்றிலும் பற்றிப் பிடி.
Riveter
n. ஆணி தறைபவர், ஆணி தறையும் இயந்திரம்.