English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Roan
-2 n. புத்தகக் கட்டடத்தில் பயன்படுத்தப்படும் பதனிட்ட மெல்லிய ஆட்டுத்தோல்.
Roar
n. முழக்கம், (வினை) முழங்கு, குதிரைவகையில் நோய் காரணமாக மூச்சிடும்போது பேரொலி செய், இடவகையில் பேரொலி நிரம்பியழ்யிரு, எதிரொலி முழக்கஞ் செய், கூடடவகையில் கம்பலை எழுப்பு, உரத்த குரலில் இரை, கொந்தளிப்பாகப் பாடு, பேரொலியினால் செவிடுபடச்செய்.
Roarer
n. பேரொலி செய்பவர், நோய்காரணமாக மூச்சு விடும்போது பேரெலி செய்யுங் குதிரை.
Roaring
n. முழங்குதல், முழக்கம், குதிரை நோய்வகை, (பெயரடை) முழங்குகிற, கும்மாளமடிக்கிற, குடித்துக்கூத்தாடுகிற, கூச்சலான, கூச்சலிடுகிற, சுறுசுறுப்பான.
Roast
n. இறைச்சி வாட்டல், வழ்க்கிறைச்சித் துணையுண்டி, (பெயரடை) வாட்டப்பட்ட, வதக்கப்பட்ட, மிகுவெப்பமான, (வினை) நெருப்பிற் காட்டி வதக்கு, காப்பிக்கொட்டை வறு, தண்டனை வகையில் தீப்பொசுக்கிவிடு,. வெதுவெதுப்பூட்டிக் கொள், இகழ்ந்து பேசு, ஏளனஞ்செய், கேலிபண்ணு, வதக்கப்பெறு.
Roast-beef
n. வழ்க்கிய மாட்டிறைச்சி.
Roaster
n. அனலில் வாட்டுபவர், வாட்டுவதற்கான சூட்டடுப்பு வகை, கனியத்தை நீற்றுவதற்கான உலை, காப்பிக்கொட்டை வறுக்கும் இயந்திரம், வதக்குப் பன்னிறைச்சி, வாட்டுநிலை உருளைக் கிழங்கு.
Roasting-jack
n. மாட்டுகோல், அகப்பைக்கோல்.
Roast-meat
n. வதக்கிறைச்சி.
Rob
v. பற்றிப்பறி, வழிப்பறிசெய், சூறையாடு, கொள்ளையிடு, உரிமை பறிபோக்கு, பறிபோக்குவி, சூறையாகப்பெறு, கொள்ளைகொண்டுபோ.
Robber
n. கொள்ளைக்காரான், வலிந்து பறிப்பவன்.
Robbery
n. வழிப்பறி, கொள்ளை, சூறை, அச்சுறுமத்திப்பறித்தல்.
Robe
n. தளர்த்தியான மேலங்கி, உடுப்பு, (வினை) உடுப்பு அணிவி,. அங்கியிடு, உரிய உடை அணி.
Robert
n. (பே-வ) காவற்றுறையாள்.
Robes
n. pl. பதவிக்குரிய நீண்ட மேலங்கி, படித்தரம் அறிவிக்கும் சிறப்புடை.
Robin, Robin
மார்வு சிவந்த சிறுபறவை வகை.
Robin-run-the-hedge
n. செந்நீல மலர்களும் குண்டிக்காய் வடிவ இலைகளும் உடைய நிலம்படர் கொடிவகை.
Robins-eye
n. கருஞ்சிவப்புச் சிறு மலர்ச் செடிவகை.
Roborant
n. (மரு) தெம்பு மருந்து, (பெயரடை) வலுவூட்டுகிற.
Robot
n. இயந்திர மனிதன், மனித உருவில் தானே தயங்கும்பொறி., மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி, மனிதனைவிடச் செயல்திறம் மிக்க தானியங்கு பொறி, இயந்திரம்போல் செயலாற்றும் மனிதன், தானே இயங்குகிற, போக்குவரத்து அடையாள்குறிப் பொறி, பறக்கும் வெடிகுண்டு.