English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sharp-sighted
a. கூர்ங்காட்சித் திறமடைய, கூரறிவுடைய.
Sharp-witted
a. அறிவுத்திறமிக்க, அறிவார்ந்த சொல்திறமிக்க.
Shastra
n. சாத்திரம், சமயநுல்.
Shatter
v. தகர், நொறுக்கு, தூள்தூளா உடைத்தெறி, நொறுக்கு, துகள் துகள்களாக உடைந்துவிடு, முழுவதுஞ் சீர்கேடாகடகு, அழித்துவிடு, சிதறஅடி.
Shave
n. மழிப்பு, சவரம், மயிர் மழிக்கை, மயிரிழை பிழைத்தல், சிறிதே பிழைத்தல், இடர் அணிமைநிலை, நுட்பப்பிழையால் ஏற்பட்ட தவறுதல், கொஞ்சத்தில் தவறிப்போதல், தொட்டுக்கொள்ளாமலேயே நெருங்கி அணுகுதல், அணுக்க உரசுதல், நுண் அணுக்கநிலை, சீவலகு, மரம் முதலியவற்றைச் சீவுவதற்காக இரண்டு முனைகளிலும் கைப்பிடியுடைய கத்தி அலகு, தந்திரம், மோசடி, ஏமாற்றல், (வினை.) மயிர்மழி, சவரம் பண்ணு, சவரஞ் செய்துவிடு, மயிர் மழித்துக்கொள், இழைப்புளிகொண்டு சீவு, தொடாமலேயே நெருக்கமாகக் கடந்துசெல், ஓரமாக ஓடு, எல்லையிலிரு, மயிரிழையில் தவறவிடு, மேற்புறத்தை மேய்ந்தவிடு.
Shave-hook
n. உலோகச்சுரண்டி, பற்றவைப்பதற்குமுன் உலோகத்தின் மேற்புறத்தைச் சுரண்டுவதற்கான கருவி.
Shaveling
n. முண்டிதஞ் செய்துகொண்டவர், துறவி, சமயத்தொண்டில் ஈடுபட்ட மடத்துத்துறவி, மதகுரு.
Shaver
n. அம்பட்டர், நாவிதர், சிரைப்பவர், மழிப்பவர், பணம் பறிக்கிற வணிகர், (பே-வ) பையன், பயல், சிறுவன்.
Shavian
a. ஜார்ஜ் பெர்னார்டுஷா (1க்ஷ்56-1ஹீ50) என்ற ஆசிரியருக்குரிய, ஷாவின் பாணியிலுள்ள.
Shaving
n. மழித்தல், சீவல், மரச்சீவல் சுருளை.
Shaving
மழிப்பு, மழித்தல்
Shaving-brush
n. மழிப்புத் தூரிகை.
Shaw
n. (செய்.) புதர்க்காடு, புதர்க்கும்பு.
Shawl
n. சால்வை, போர்வை, பெண்டிர் தோளணிக்கவணி, (வினை.) சால்வை போர்த்து, கவணி அணி.
Shawl-dance
n. போர்வை நடனம், சால்வையை அலைத்தாடும் ஆடல்வகை.
Shawm
n. வழக்கற்றுப்போன இசைக்கருவி வகை.
Shde-slip
n. பக்கச்சறுக்கல், ஓரச்சாய்வு, விலாத்தல், விமானத்தின் ஓரச்சாய்வியக்கம், தப்புப்பிள்ளை, முறைகேடாக்பிறந்த குழந்தை, நாடக அரங்கின் காட்சிமாற்றப்பக்க அறை, (வினை.) பக்கவாட்டில் சறுக்கு, விலாத்து, விமானவகையில் ஓரமாகச் சாய்ந்தியங்கு.
Shea, shea-butter
n. தாவர வெண்ணெய் தரும் ஆப்பிரிக்க மரவகை.
Sheading
n. வட்டகை, மேன் தீவின் ஆறு ஆட்சிப் பிரிவுகளில் ஒன்று.