English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sheaf
n. கற்றை, கட்டு, சிப்பம், கதிர்க்கட்டு, தாள்கட்டு, (வினை.) கற்றையாகக் கட்டு, சிப்பம் ஆக்கு.
Sheaf-binder
n. கதிர்கட்டுக் கருவி.
Shear
n. கத்தரிப்பு, (இய.) அழுத்தப் புடைபெயர் வளைவு, அழுத்தங் காரணமாகப் பொருளின் மெல்லடுக்குகளின் ஒத்திணைவான சறுக்குப் பெயர்ச்சி, (வினை.) கத்தரி, மயிர்வெட்டு, ஆட்டின் கம்பளி வெட்டு, தழைவெட்டு, துணி கத்தரி, தறித்துச் செப்பமாக்கு, வெட்டிச் சன்ன் செய், வேண்டாத மிகுதியைத் துண்டித்தெடு, துணி ஓரம் வெட்டி நீக்கு, கத்தரித்து உருவாக்கு, துண்டித்து அப்புறப்படுத்து, கவர்ந்துகொண்டு விடு, இழக்கச் செய், துறக்கச் செய், ஒட்டாண்டியாக்கு, வறிதாக்கு.
Shear
n. pl. கம்பளி மயிர் வெட்டு கத்தரிக்கோல், தழை வெட்டு கருவி.
Shearbill
n. கத்தரிக்கோல் போன்ற அலகுடைய பறவை வகை.
Shearer
n. ஆட்டு உரோமம் கத்தரிப்பவர்.
Shear-grass
n. கூரலகுப் புல்வகை.
Shearling
n. ஒருமுறை உரோமம் கத்தரிக்கப்ட்ட ஆடு.
Shear-steel
n. கத்தரிக்கோலுக்குரிய எஃகு.
Sheat-fish
n. மிகப்பெரிய நன்னீர் மீன்வகை.
Sheath
n. உறை, வாள்-கத்தி முதலியன செருகுவதற்குரிய பொதிகூடு, (தாவ.) பொதிதாள், (வில., உள்.) பொதி சவ்வு, கவச உறை, ஆற்றின் கரைகாப்பணைப்புக்கான கற்குவை.
Sheathe
v. உறையிலிடு, உட்பொதிந்து வை, மேற்கவசமிடு, மேலுறையிடு.
Sheave
-1 n. ஓடு குழிவு, கப்பியில் கயிறு ஓடுவதற்கான பள்ளம்.
Sheave
-2 v. கூலக்கதிர்களைக் கட்டாகக் கட்டு.
Shebang
n. சூதாட்டமனை, கிடங்கு, பண்டகசாலை, வரவேற்பு அறை, உணவக அரங்கம், உடனடியாக கவனிக் வேண்டிய செய்தி, தொழில்முறை, வேலை, நடைமுறை.
Shebby-genteel
a. வறுமைமறைத்துச் செல்வத் தோற்றம் பேணும் அவதியுடைய.
Shebeen
n. சாராயக்கடை, சட்டப்படி உரிமைபெறாத மதுவிற்பனையிடம்.