English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Shell
n. கொட்டை ஓடு, விதைநெற்று, விதை உறை, மேல்தோடு, உறைபொதி, முட்டைன் மேலோடு, ஆமைஓடு, கிளிஞ்சிற் சிப்பி, சங்கு, சங்குச்சிப்பியின் மேலோடு, பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை, திட்டவரைச் சட்டம், புறத்தோற்றம், மேற்போக்கான ஒப்புமை, முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம், எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு, கப்பல் அழிபாட்டு எச்சம், பிணப்பேழை உள்வரிப் பொதிவு, சிறு பந்தயப்படகு, குண்டு, எரிகலம், வெடி மருந்துக்கலம், தாள்வெடிப்பொதி, உலோக வெடியுறை, வாளின் கைப்பிடி காப்பு, முற்கால யாழ்வகை, பள்ளி இடைநிலைப்படிவம், (வினை.) தோட்டினை அப்ற்று, உறைநீக்கு, ஒட்டை உடைத்து வௌதயிலெடு, ஒட்டினுள் அமை, தோட்டிற் பொதி, உறையிலிடு, சிப்பியிட்டுப் பாவு, ஒடிட்டுப் பரப்பு, குண்டுவீசு, குண்டுவீசித் தாக்கு, விமானக் குண்டுவீச்சு நடத்து, உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு.
Shell lime
சிப்பிச் சுண்ணம்
Shellac
n. அவலரக்கு, மெருகு எண்ணெய் செய்யப் பயன்படும் தகட்டு வடிவாக்கப்பட்ட அரகு, (வினை.) மெழுகுநெய்அவலரக்குகொண்டு வண்ணச் சாயமிடு.
Shellback
n. பழைய கப்பலோடி.
Shellbark
n. பட்டையுரியுமியல்புடைய வாதுமையின் வெட்டுமர வகை.
Shellbit
n. நகவுளி வடிவான துளைப்புக் கருவி வகை.
Shellfish
n. சிப்பி நண்டின நீர்வாழ் உயிரி.
Shell-heap
n. வரலாற்றிற்கு முற்பட்டகாலச் சிப்பி எலும்புக் கூளக் குவியல்.
Shell-jacket
n. இராணுவப் பிடிப்புச் சட்டை.
Shell-lime
n. உயர்தரச் சிப்பிச் சுண்ணாம்பு.
Shell-marble
n. புதைபடிவச் சிப்பிகளடங்கிய வெண் சலவைக் கல்.
Shellout
n. இருவருக்கு மேற்பட்டவர் ஆடும் மேடைக் கோற் பந்தாட்ட வகை.
Shell-parakeet, shell-parrot
n. ஆஸ்திரேலிய கூண்டுப்பறவை வகை.
Shellproof
a. குண்டுகளால் துளைக்க முடியாத, துப்பாக்கி வேட்டுக்களால் தகர்க்க முடியாத.
Shell-sand
n. உயிரியற் சுண்ணகப் பொருட் கலப்புமிக்க மணல்.
Shell-shock
n. குண்டதிர்ச்சிக் கோளாறு.
Shell-work
n. ஒட்டுச்சிப்பி வேலைப்பாடு, மரத்தின் மேல் கிளிஞ்சில் பதித்துச் செய்யும் அடிகொப்பனை வேலை.
Shelta
n. அயர்லாந்து நாடோ டிகளின் குழுஉக்குறி.
Shelter
n. பாதுகாப்பு, பாதுகாப்புநிலை, நிழலீடு, வெயில் தடைகாப்பு, மழைக்காப்பு, இடர்காப்பு, மறைவிடம், மறைதட்டி, காப்புத்திரை, ஒதுக்கிடம், காப்பிடம், புகலிடம், தங்கிடம், இடர்காப்பிடம், தங்கல், தங்குமனை, குடில் (வினை.) பாதுகாப்பளி, தடைகாப்புச் செய், பாதுகாவலாயிரு, தடைகாப்பாயிரு, மறைந்தாதரவு செய், தங்கிடம், கொடு, தங்கிடமாயுதவு, குற்றசாட்டிலிருந்து காப்பாற்று இடர் தடுத்துதவு.
Sheltie, shelty
ஷெட்லாந்து மட்டக் குதிரை.