English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sibs
n. pl. உடன்பிறப்புக்கள், உடன்பிறந்த ஆண்கள் அல்லது பெண்கள்.
Sibship
n. இனவுறவுப்பண்பு, குருதித்தொடர்பு, பொதுமரபுத்தொடர்பு, ஒரு தாய் வயிற்றுக்குழு, ஒரே தாய் தந்தையினையுடையவர் குழாய்.
Sibyl
n. தேவராட்டி, குறிகூறும் பெண், வருங்காலக் குறிகாரி, பழங்காலச் சூனியக்காரி.
Sibylline
a. குறிகூறுந் தன்மையுடைய, பழங்காலத்தெய்வ உரை சார்ந்த, வருவதுரைக்கிற, மறைபுதிரான, விளங்காத, புரியாத.
Sic
adv. அப்படியே, மேற்கோளாளர் கூறிய அதே நிலையில்.
Sic volo sic jubeo
n. விலக்க முடியாத ஆணை.
Sicanian
n. சிசிலி தீவின் தொல்பழங்குடியினர், (பெ.) சிசிலி நாட்டுத் தொல்பழங்குடி சார்ந்த.
Siccative
n. புலர்த்து பொடி, நெய்வண்ண ஓவியம் எளிதில் உலரக் கலக்கப்படும் பொருள், (பெ.) வண்ண ஓவிய நெய்யினை எளிதில் புலர்த்துந் திறமுடைய.
Sice
-1 n. பகடையின் ஆறு, பகடைக்காயிலுள்ள ஆறு என்ற எண்.
Sice
-2 n. குதிரைக்காரர்.
Sicel
n. கிரேக்கருக்கு முற்பட கி.மு.11ஆம் நுற்றாண்டில் சிசிலித் தீவில் குடியேறிய பழங்குடி இனத்தினர், (பெ.) சிசிலித் தீவின் தொல்குடி சார்ந்த.
Siceliot
n. சிசிலித் தீவில் குடியேறிய பண்டைய கிரேக்கர்கள், (பெ.) சிசிலியில் குடியேறிய பண்டைய கிரேக்கர்களைச் சார்ந்த.
Sicilian
n. சிசிலித் தீவினர், (பெ.) சிசிலித்தீவு சார்ந்த, சிசிலித் தீவுக்குடிமக்கள் சார்ந்த.
Sick
-1 a. நோய்ப்பட்ட, பிணியுற்ற, நோய்நொடிப்பட்ட, உடல்நலங்குன்றிய, குமட்டலுணர்ச்சியுடைய, வாந்தி எடுக்கிற, நோய்ப்பட்டோ ருக்குரிய, நோஞ்சலான, இளைத்த, ஒட்டி உணங்கிய, நன்னிலையற்ற, முழுதும் சோர்வுற்ற, மிகுகளைப்புற்ற, உளச்சோர்வுடைய, கிளர்ச்சியற்ற, கிளர்ச்சியற்ற தோற்ற
Sickbay
n. கப்பல் மருத்துவ அறை.
Sick-bed
n. நோயாளிப் படுக்கை, நோய்நில, நோய்க்காரணமான ஏலாநிலை.
Sick-benefit
n. நோய்ப்படி.
Sick-call
n. மருத்துவ உதவி நேரமறிவிக்கும் படைத்துறைக் குழலோசை.
Sicken
v. நோயுறு, பிணிவாய்ப்படத் தொடங்கு, நோய் நிலையுறு, நோய்க்குறி காட்டு, நோய் அறிகுறிகள் காணப்பெறு, குமட்டு, வெறுப்புக்கொள், அருவருப்பு அடை, சலிப்புக்கொள், கழிமிகையால் உவர்ப்புறு, களைப்புறச்செய், களைப்புறு, சோர்வுணர், மன உளைவுறு, கேடுறு, வரவர மோசமாகு, சலிப்பூட்டு, உவர்ப்பூட்டு, மேலும் வலிமையிழ, நோஞ்சலாகு, வரவர இளை.