English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sick-flag
n. தொற்று நோய்க்குறிகாட்டும் மஞ்சட்கொடி, தொற்றுக் கப்பற்கொடி, தொற்றொதுக்குத் தடையிடம் குறித்துக் காட்டுங் கொடி.
Sickle
n. அரிவாள், செதுக்குகத்தி, குறுங்கைக் கொடுவாள், சிங்கராசி.
Sick-leave
n. நோவு விடுப்பு.
Sickle-bill
n. அரிவாள் அலகுப் பறவை வகை.
Sickle-feather
n. வளைந்த வாலிறகு.
Sickle-wort
n. மருத்துவ மூலிகை வகை.
Sicklied
a. நோயால் நலிவுற்ற தோற்றமுடைய, வௌதறிய உரமிழந்த.
Sickliness
n. வௌதறிய தோற்றம், நோயப்பட்ட நிலை.
Sick-list
n. (படை., கப்.) பிணிப்பட்டவர் பட்டியல்.
Sickly
a. நோயினாற் பீடிக்கப்பட்ட, நோய்ப்பட்ட தோற்றமுடைய, நோய்நலவுற்று மெலிந்த, சோகைபடிந்த, வௌதறிய தோற்றம் வாய்ந்த, நலிவுற்றுத்தளர்ந்த, வலிமைகுன்றிய, உரமற்ற, நோயாளிக்குரிய, நோய்நிலைக்கறிகுறியான, நோய் விளைவிக்கிற, குமட்டச்செய்கிற, வெறுக்கச்செய்கிற, உடல்நலங் கெடுக்கிற, உடல்நலத்துக்கொவ்வாத, வளர்ச்சி குலைக்கிற, மனநலத்துக் கொவ்வாத, மனநலம் கெடுக்கிற, வாழ்வில் அக்கறையூட்டாத, தேய்ந்துநலிந்த, மங்கலான, தௌதவில்லாத, (வினை.) சோகைத் தோற்றமூட்டு, வௌதறிய தோற்றுமுறுவி, நோய்நிலை படர்வி, (வினையடை.) நோய்ப்பட்ட நிலையில், மெலிவுற்று, நலிந்த நிலையில்.
Sickness
n. நோய்நிலை, உடல்நலமின்மை, நலங்குன்றியநிலை, நோய், வாந்தி, குமட்டல் உணர்ச்சி.
Siculo-Arabian
n. சிசிலித் தீவில் திரித்தமைவுற்ற அராபிய மொழி.
Side
n. பக்கம், அணிமை, அயலிடம், எல்லை, கரை, இடம், இடப்பகுதி, பக்கச்சுவர், பக்கப்பரப்பு, திசை, திசை முகப்பு, கோணம், கோணச்சாய்வு, எல்லைத்தளம், தளமுகப்பு, பிழம்புருவின் பரப்புக்கூறு, எல்லைவரை, புயம், வரைகட்டத்தின் பக்கவரை, எல்லைப்புறம், அக அணிமைஎல்லை, விலா, விலங்கின் விலா இறைச்சி, கிளை, கிளை மரபு, பக்கக் கால்வழி, புறநிலை, புறக்கூறு, சினை, கூறு, பிரிவு, இயல்புச்சார்பு, துறை, உருக்கூறு, பண்புக்கூறு, பண்பமைவு, புறம், இருசார் பரப்புகளில் ஒன்று, தாளின் ஒருபுறம், தாள், தாள் துண்டு, அகப்புறப் பகுதிகளில் ஒன்று, முன்பின் பகுதிகளில் ஒன்று, நீள்வாட்டான எல்லைகளில் ஒன்று, அணிமையெல்லை, பாரிசம், வல இடப்பக்கங்களில் ஒன்று, இருதிசைக்கோடி மூலைகளில் ஒன்று, கட்சி, இருதிசைக் குழுக்களில் ஒன்று, சார்பு, போட்டிக் கருத்துக்களில் ஒன்று, தரப்பு, வழக்கில் இருசார்புகளில் ஒன்று, சாரி, கட்சியின் இருதிசை முனைப்புக்குழுக்களில் ஒன்று, சிறைப்புறம், ஆட்டக்களப் பக்கப்பகுதிகளில் ஒன்று, மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் புடைச்சுழற்சியடி, (இழி.) வீம்புரை, வீறாப்பு, (வினை.) பங்குகொள், ஒன்றுபட்டு ஒரேபக்கத்திலிரு, பக்கச்சார்பாயிரு, இருகூறாக்கு, ஒதுக்குத்தள்ளு.
Side-arms
n. pl. இடுப்பிற் செருகிவைக்கத்தக்க படைக்கருவிகள், கத்தி-உடைவாள் முதலியன.
Side-band
n. கம்பியில்லாத் தந்தியில் சம அதிர்வுப்பட்டி.
Side-bet
n. சீட்டாட்டத்தில் இடைப்பந்தயம்.
Sideboard
n. உணவுக்கூட நிலையடுக்கு, வண்டியின் நிலைத்தட்டு, உந்துகலத்தின் பக்க மிதிபலகை.
Sidebone
n. புள்ளிறைச்சில் சிறகடிச் சிறு கவை எலும்பு.
Side-box
n. நாடக அரங்கில் பக்க இருக்கை.