English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Salvia
n. இதழ்ச் செறிவு மலர்ச் செடிவகை.
Salvo
-1 n. காப்புவாசகம், தனிவிலக்குக்காப்பு, தனிஒதுக்கீடு, கூறாக் குறிப்பமைவு, பசப்புத் தட்டிக்கழிப்பு, போலிவாத விளக்கம், நொண்டிச் சாக்குப்போக்கு, தன்மதிப்புக்காப்புமுறை, தற்பெருமை காப்புவகைமுறை, மனச்சான்று ஆற்றுமுறை.
Salvo
-2 n. வேட்டுவரிசை, கடற்படை வேட்டுவரிசை, வேட்டுவரிசை வணக்கமுறை, விமானத்திலிருந்து ஒருமுறை வீசப்படும் குண்டுமாரிப் பொழிவு, ஒருமுறை அளிக்கப்படம் கைகொட்டாரவாரம்.
Salvolatile
n. மயக்கந் தீர்க்கும் மருந்தாகப் பயன்படும் நவச்சியக் கரியகி.
Salvor
n. மீட்புவேலைக் கப்பல், மீட்பு வேலையர், மீட்பு வேலைத் துணைவர்.
Sam Browne
n. படையினர் தோள்-இடுப்பு வார்
Samaritan
n. சமேரிய நாட்டவர், சமேரிய நாட்டு மொழி, சமேரிய சமயநெறியாளர், (பெ.) சமேரிய நாடு சார்ந்த, சமேரிய நாட்டவருக்குரிய.
Samaritanism
n. சமேரிய நாட்டவர் பண்பு, நல்லிரக்கப் பண்பு.
Sambo
-1 n. நீகிரோ ஐரோப்பியக் கலப்பினத்தவர், செவ்விந்திய ஐரோப்பிய கலப்பினத்தவர்.
Sambo
-2 n. நீகிரோவர், நீகிரோவர் சுட்டும் சாட்டுப்பெயர்.
Same
pron அதுவே, அவையே, முற்கூறப்பட்டவரே, மேலே குறிக்கப்பட்டவர்களே, கூறப்பட்ட அது, கூறப்பட்ட அவர், கூறப்பட்ட அவை, கூறப்பட்ட அவர்கள், (பெ.) அதே, முன்கூறப்பட்ட அதே, அதுவேயான, வேறல்லாத, அதே தன்மையான, ஒரே இயல்புடைய, அதே வகையான, ஒரே மாதிரிப்பட்ட, ஒரே படித்தான, மாறுதலில்லாத, கூறப்பட்ட அந்த, (வினையடை.) ஒரேவகையாக, ஒரேபடித்தாக.
Samel
a. செங்கல்-ஓடு வகையில் அரைவேக்காடான, சூளையில் ஒதுங்கிப் பச்சைவெட்டாயிருக்கிற
Sameness
n. ஒரே வகையான தன்மை, ஒரேபடித்தான நிலை, மாறுதலற்ற இயல்பு.
Samian
n. கிரேக்க நாட்டையடுத்த சாமோஸ் தீவினன், (பெ.) சாமோஸ் தீவினைச் சார்ந்த.
Samisen
n. ஜப்பானிய யாழ்வகை.
Samite
n. பொன்னிழைகள் இடையிட்டு நெய்யப்பெற்ற இடைக்கால உயர்ஆடைவகை.
Samlet
n. வஞ்சிர வகை இளமீன்.
Samnite
n. பண்டைய ரோமாபுரிக் குடியரசுடன் போரிட்ட பழைய இத்தாலிய இனத்தவர்.
Samoan
n. சமோவாத் தீவினர், சமோவாத் தீவின் மொழி, (பெ.) சமோவாத் தீவு சார்ந்த, சமோவாத் தீவின் மொழி சார்ந்த.