English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sanctitude
n. புனிதர் தன்மை, திருநிலைப் பண்பு.
Sanctity
n. வாழ்வின் புனிதம், புனிதர் பண்பு, அருட்டூய்மை, அருளுடைமை, போற்றரளத் தகுதி, மீறத்தகா உயர்நிலை.
Sanctuary
n. தெய்வமனை, திருக்கோயில் கருமனை, வழிபாட்டிடம், புனித இடம், புகலரண், காவலிடம், புனிதங்களுட் புனிதம்.
Sanctum
n. யூதசமயத்தில் புண்ணியத் தானம், புனித இடம், திருவுண்ணாழிகை, கர்ப்பக்கிரகம், கருவறை, படிப்பறை, தனி ஆய்வுக்கூடம்.
Sanctum sanctorum
n. புனித உறையுள், கருவுறை, கர்ப்பக்கிரகம்.
Sanctus
n. இறுதியுணா வழிபாட்டில் தொடக்கப்பாடல் இறுதி இசை.
Sand
n. மணல், (பே-வ) மனவுறுதி, செயல்திட்பம்,(பெ.) மணலாலான, மணலடங்கிய, மணற்பாங்கான, மணலின் இயல்புடைய, (வினை.) மணல் தூவு, மணல்பரப்பு,மணலுட்புதை, மணலால் மெருகூட்டு.
Sandal
-1 n. மிதியடி, செருப்பு, மிதியடி வார், அணிகெழு புதையரணம், மெல்லிய தொய்வக மீபுதையரணம், (வினை.) மிதியடி அணி, மிதியடி மாட்டு, கால்புதையரணத்திற்கு அடிப்பட்டை போடு.
Sandal(2), sandal wood
n. சந்தன மரம்.
Sandarac
n. சாந்தரக்கு, சாராயம்-மை ஆகியவற்றின் கறைதுடைக்கப் பயன்படும் பொடித பிசின்வகை, செவ்வீரம்.
Sand-bag
n. மணற்பை, மணற்சாக்கு, அரணமைப்புக்கான மணல் மூடை, பளுவுக்கான மணற்பொட்டணம், மணற்சிப்பம், ஊமையடி அடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீள மணற்பை, உதையணையாகப் பயன்படும் மணற்கட்டு, (வினை.) மணல்மூட்டையால் அரண்காப்பு வலுப்படுத்து, பலகணிகளுக்கு மணற்சிப்பத்தால் வளிகாப்பளி, நீள மணற்பையால் மொத்து.
Sand-bank
n. மணற்கரை, கடலிலும் ஆற்றலிலும் உள்ள நீரடி மணல்திடல்.
Sand-bar
n. மணல்திட்டு, துறைமுகம் அல்லது கழிமுகவாயிலில் உள்ள மணல்மேடு.
Sand-bath
n. மணற்புடம், வேதியியல் செய்முறையில் சமவெப்புக்காகப் பயன்படுத்தப்படும் வெம்மணற்கலம்.
Sand-bed
n. மணற்படுகை, மணற்படுகை அடுக்கு.
Sand-blast
n. மணல் ஊதைப்பீற்று, கண்ணாடி முதலியவற்றின் மேற்பரப்பைத் திண்ணிதாக்க வழங்கப்பெறும் அழுத்த வளியுடன் கூடிய மணல்பீற்று.
Sand-blind
a. மங்கல் பார்வையான, அரைப் பார்வையான.
Sand-box
n. ஒத்துமணற்கலம், வார்ப்புக்குப் பயன்படுத்தப்பெறும் மணற்கட்டி வார்ப்பச்சுரு, மணல்தூவு பெட்டி, குழிப்பந்தாட்டத்தில் தொடக்கத்தில் பந்தை வைக்கும் மணற்கலம்.
Sand-boy
n. மணல் விலையாளன்.