English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sky-sign
n. மீமுகட்டு விளம்பரம், உயர் கட்டிடங்களின் உச்ச உயர் இடங்களிற் காட்டப்படும் ஔதவிளக்க விளம்பரம்.
Sky-tinetured
a. வான்வண்ணச் சாயலுடைய.
Skyward
a. வானோக்கிய, (வினையடை.) வானோக்கி.
Sky-writing
n. புகைவரி எழுத்து, வானுர்தி விளம்பரங்களில் பயன்படுத்தப்பெறும் புகைக்கோட்டு எழுத்துமுறை.
Slab
-1 n. பாளம், இழைப்புத்தட்டம், மரக்கட்டையறுப்பம், சிலாத்துண்டம், (வினை.) பாளமாக்கு, தட்டப்படுத்து, சிலைத்துணுக்கறு.
Slab
-2 a. களிபோன்ற, நீர்ம வகையில் கெட்டியாய் ஒட்டிக்கொள்ளுந் தன்மையுள்ள, பசைக்களியான.
Slabbiness
n. சேற்றுநிலை, சகதித்தன்மை.
Slabby
a. சேறான, சகதியான.
Slab-sided
a. ஒடுங்கிநீண்ட.
Slab-stone
n. பாளக்கல், பாளம்பாளமாகப் பிளவுறுங் கல்.
Slack
n. தொகாப்புரி, சுற்றிவரிவதற்குரிய சுற்றாக்கயிற்றுப் பகுதி, தொங்கல் வரி, அரைக்கச்சன் சுற்றெச்சப்பகுதி, வாணிகத்துறையில் மந்தமான பருவம், தளர் ஆட்டம், தளர்விடம், (பே-வ) மந்தநிலை, சோம்பற்கட்டம, இளைப்பாறு பருவம், (பே-வ) தடை எதிர்ப்பு, துடுக்குத்தளம், கரிக்கற்கட்டைக்கான நிலக்கரித்தூள், கடல்வேலைத் தேக்கநிலை மீன்வலை இழுவை, (பெ.) தொய்வான, தளதளப்பான, தளர்த்தியான, முறுக்கப்படாத, கட்டப்படாத, மந்தமான, தேக்கமுடைய, சோம்பலுடைய, மயக்கதயக்கமுடைய, செயன்முனைப்பற்ற, செயலற்ற, இளகலான, இறுக்கமற்ற, சோர்வுடைய, செய்யத்தவறுகிற, தவறுவதற்கிடமளிக்கிற, விடுபாடுடைய, உன்னிப்பில்லாத, கவனிப்பற்ற, அக்கறையற்ற, ஆர்வங் குன்றிய, அசட்டையான, (ஒலி.) தளர்ஓசையுடைய, ஓசைச்செறிவற்ற, (வினை.) தளர்த்தியாக்கு, தளர்த்திவிடு, தளதளப்பாக்கு, தளரவிடு, (பே-வ) முனைப்புக் குறையவிடு,செறிவுழூறைவி, முனைப்புக்குறை, செறிவுழூறை, அசட்டையாயிரு, ஆற்றிக்கொள், இளைப்பாறு, சோம்பலாக இரு, சுண்ணவகையில் நீற்று, (வினையடை.) தொய்வாக, தளர்வாக, கவனியா நிலையில், அசட்டையாக, ஆர்வமின்றி, அக்கறையில்லாமல், சோர்வாக, செய்யத்தவறி, போதாநிலையில், அரைகுறையாக.
Slack-bake
v. அரை வேக்காடாக்கு.
Slacken
v. தளர்த்தியாக்கு, தளர்த்திவிடு, தளதளப்பாக்கு, தளர்த்து, செறிவுகுறைவி, முயற்சி முனைப்புக் குறையவிடு, செறிவு குறைவுறு, முனைப்புக்குறை, கவனிப்பின்றி விடு, அசட்டையாயிரு, (பே-வ) ஆற்றிக்கொள், இளைப்பாறு, சோம்பலாக இரு.
Slacker
n. சோம்பியிருப்பவர், வேலையில் விருப்பமில்லாதிருப்பவர், செயல் முனைப்பற்றவர், தளர்த்துபவர், சோர்வுடையவர்.
Slack-handed
a. கைச் சோர்வுடைய, செயற்சோர்வுடைய.
Slackly
adv. சோர்வாக, அரைகுறையாக.
Slackness
n. இளக்கம், தளர்ச்சி, மந்தம், முனைப்புக்கேடு, ஆர்வக்கேடு, சோர்வு, பின்னிடைவு.
Slacks
n. pl. தளர்காற்சட்டை.