English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Slag
n. மண்டூரம், தாதுமண்டம், உருக்கிய சுரங்க உலோகக்கசடு, இரும்புக்கிட்டம், சம்மட்டியால் அடிக்கப்பட்ட காய்ச்சிய இரும்பில் எழும் இரும்புக்கரியக உயிரகைச்சிம்பு, செங்கல் கடும்பதக்கட்டி, கடுவேக்காட்டில் சூளையில் ஏற்படும் செங்கற்கட்டி, கொல்லுலைச் சாம்பற்கட்டி, காரோடு, எரிமலைக்குழம்பின் இறுகிய சாம்பற்கட்டி, (வினை.) தாதுமண்டம்படுத்து, இரும்புக்கிட்டமாக்கு, செங்கற் கடும்பதக்கட்டியாக்கு, சாம்பற்கட்டியக்கு, உலோகக் கசடுபடு, கடும்பதக்கட்டிபடு, சாம்பற்கட்டியாகு.
Slaggy
a. உலோகக்கிட்ட வடிவான, மண்டூர இயல்பான, தூதுமண்டமாகக் கிட்டிய, கடும்பதச் செங்கல் சார்ந்த, எரிமலைச்சாம்பற்கட்டியார்ந்த.
Slag-wool
n. கனிம இழைக்கம்பிளி, உலோகக்கிட்டப்பாகூடான நீராவியால் இழைக்கப்படுஞ் செயற்கைக் கம்பளி.
Slain
v. 'சிலை' என்பதன் முடிவெச்சம்.
Slake
v. விடாய் தணி, பழியவா நிறைவுசெய், சுண்ணவகையில் நீற்று, நீருடன் கலந்து நீறாக்கு.
Slakeless
a. (செய்.) விடாய் வகையில் தணியாத, தணிக்கமுடியாத, பழியுணர்ச்சி வகையில் தீராத, எளிதில் தீர்க்கமுடியாத.
Slalom
n. தடங்கல் பனிச்சரிவாட்டம், இடைத்தடைகள் மூலம் நெறி ஓழுங்குபடுத்தப்பட்ட கீழ்நோக்கிய சரிவான பனிச்சறுக்காட்டக் கேளிக்கை, தடங்கல் படகுப்போட்டிப்பந்தயம்.
Slam
n. தடால் ஒலி, தடாற்கதவடைப்பு, சீட்டாட்ட முழுவரிசைக் கெலிப்பு, (வினை.) கதவைத் தடாலென அடை, கதவுவகையில் தடாலென மூடிக்கொள், தொப்பென்று வை, (பே-வ) அடி, மோது, புடை, தட்டு, எளிதில் வெற்றிகொள்.
Slander
n. அவதூறு, பழிதூற்றுரை, பொல்லாங்குரை, பொய்க்குற்றச்சாட்டு, (சட்.) பொய்யுரைப் பழி, (வினை.) பழிதூற்று, பழித்துரை, பொய்ப்பழி கூறு, பொய்யுரைப் பழிசுமத்து, நற்பெயர் கெடு, பெயர் கறைப்படுத்து.
Slanderer
n. அவதூறு பேசுபவர், பழிதூற்றுபவர்.
Slanderous
a. அவதூறான, பழிதூற்றுகிற.
Slang
n. கொச்சைவழக்கு, கொச்சைச்சொல், கொச்சைவழக்குத்தொடர், இழிதகவான குழுஉக்குறி வழக்கு, (வினை.) கொச்சை மொழிகளால் தூற்று, பச்சையாகத் திட்டு.
Slangy
a. கொச்சை வழங்கும் இயல்புடைய, கொச்சையின் இயல்புவாய்ந்த.
Slant
n. கோட்டம், சாய்வு, சரிவு, சாய்வுநிலை, சரிநிமிர்வில்லா நிலை, மட்டச்சாய்வு, சமதளமில்லாநிலை, வசைக் குறிப்பு, இகழ்ச்சி, மறைமுகக்கண்டனம், சாய்வுச் சார்பு, நோக்கு, கருத்துச்சார்பு, (பெ.) (செய்.) சாய்வான, சரிவான, கோணமான, (வினை.) சரிவாகு, சரிவாக்கு, கோட்டமுறு, நேர்கோட்டிலிருந்து விலகிச்செல்.
Slantendicular, slantindicular, slantingdicular
a. (பே-வ) நிமிர்வரையல்லாத, சாய்வுவாட்டமான, சாய்முகமான.
Slap
n. அறை, உள்ளங்கை அடி, (வினை.) கை ஓச்சி அடி, அறை, (வினையடை.) அடி அதிர்ச்சியுல்ன் திடீரென்ற, எதிர்பாராமல், முழுதளவாக, நிறைவாக.
Slap-bang
adv. மூர்க்கமாக, வன்முறையாக, முழக்கமாக, கூச்சலிட்டுக்கொண்டு, தலைகீழாக, பதற்றமாக.
Slapdash
-1 n. வேகப்பாய்ச்சல், மும்முரவேலை, ஆவேசச் செயல், குத்துச்சாந்து, சுண்ணாம்புஞ்சரளைக்கல்லுங் கலந்த சுவர்ப்பூச்சு நீறு, (பெ.) வேகமாகச் செல்கிற, மும்முரமாகப் பாய்கிற, இடையிடைச் செய்யப்பட்ட, கண்ட கண்டபடி செய்யப்பட்ட, மேலீடாகச் செய்யப்பட்ட, முனைப்பின்றிச் செய்ய
Slapdash
-2 adv. மடத்துணிச்சலுடன், ஆவேசத்துடன்.