English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Slapjack
n. அடை, வறட்டப்பம், சிங்காரப்பெட்டி, நறுமண முகந்தூள் வைக்கும் தட்டைப்பெட்டி.
Slapping
n. அறை, மொத்தடி, (பெ.) மிகுவிரைவான, மிக விரும்பத்தக்க, மிகப் பெரிய, கணிசமான, (வினையடை.) மிகுவிரைவாக, மிக நன்றாக.
Slapstick
n. சூத்திரக்கோல், வளைந்து கொடுக்கும் இருபிளவாயுள்ள கோமாளியின் கைப்பிரம்பு, கீழ்த்தர அமளிக்களி நாடகம், (பெ.) கோமாளியின் சூத்திரக்கோலைக் கையாள்கிற, கீழ்த்தர நகைச்சுவை நாடக இயல்புடைய.
Slap-up
a. (பே-வ) புத்தம் புதுப்பாணி சார்ந்த, நாட்பாணியான.
Slash
n. வீச்சடி, வீக்கடி, வீச்சடித்தடம், கீறற்காயம், வெட்டுச் சிதைவுத்தடம், பிளவுத்தடம், வெட்டுச்சிதைவுக்கூளம், (வினை.) வீக்கு, சுளீரென அடி, கத்தியால் தாக்கு, வாளால் மொத்து, கசையாலடி, சாட்டையால் சொடுக்கு, குத்திக்கீறு, வெட்டிப்பிள, வெட்டிச்சிதை, (படை.) கொப்புக்கவரரண் எழுப்புவதற்காக மரங்களை வெட்டிவீழ்த்து.
Slat
-1 n. பாவுதிரைப் பட்டிகை, பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் நீண்ட மெல்லிய மரச்சிம்பு, வரிச்சல், ஓடுபரப்புவதற்கான மோட்டு மரச்சட்டம், (பே-வ) சாமியோடு, மெல்லிய மோட்டுப்பாவோடு.
Slat
-2 v. மோதியடி, கப்பற் பாய்-கயிறுகள் முதலியவற்றின் வகையில் சடசடவென்றடித்துக்கொள், தொப்புத் தொப்பென்று சென்று மோது.
Slate
-1 n. பலகைகல், அடுக்கடைப்பாறை, தட்டையான மென்மையான பலகைகளாக எளிதில் பிளக்கப்படவல்ல பசுநீலச் சாம்பல்நிறப் பாறைவகை, சிறுவர் எழுதுவதற்கான மரச்சட்டமிட்ட கற்பலகை, பலகைக் கல்லேடு, (பெ.) கற்பலகை சார்ந்த, கற்பலகையினாற் செய்யப்பட்ட, கற்பலகை நிறமான, மென்கருநீலமான, (
Slate
-2 v. (பே-வ) திறனாய்வில் நுலாசிரியரைக் கடுமையாகக் கண்டி, திட்டு, இடித்துறை, தாளி.
Slate-black
n. சற்றே நீலங்கலந்த இளம்பசுங் கருநிறம், (பெ.) இளம்பசுங் கருநீல நிறமான.
Slate-blue
n. மங்கலான கரும்பசு நீலநிறம், (பெ.) மங்கிய கரும்பசு நீல நிறமான.
Slate-club
n. கூட்டுநலக்குழாய், சிறு வாரப்பங்குத்தொகையுடன் கூட்டுத்துணையுதவி நலம் நாடி அமைக்கும் குழுஅமைப்பு.
Slate-colour
n. பசுநீலக் கரும்பழுப்பு நிறம்.
Slate-coloured
a. பசுநீலக் கரும்பழுப்பு நிறம்வாய்ந்த.
Slate-grey
n. இளம்பசுநீலச் செம்மஞ்சள் நிறம், (பெ.) இளம் பசுநீலச் நிறமான.
Slate-pencil
n. பலப்பம், கற்பலகைக் குச்சி.
Slater
n. பலகைக் கற் பாவோடு வேய்பவர், பலகைக்கற்குச்சி, தோல் நுண்மயிர் களைவதற்கான கற்பலகை அலகுடைய கருவி வகை, (பே-வ) மரப்பேன்.
Slate-writer
n. திப்பிய வரைவு வித்தகர்.
Slate-writing
n. திப்பிய எழுத்து, மூடிய கற்பலகையில் எழுத்து வருவிக்கும் வித்தை.