English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Slipway
n. கப்பல் கட்டு துறைச் சாய்தளம், கப்பல் இறங்குதுறைச் சாய்மேடை.
Slit
n. சிறுபுழை, பிளப்பு, கீற்று, சிறுவெடிப்பு, சிறுவெட்டு, (பெ.) பிளந்த, நீளவாட்டாகக் கீறிய, வெடிப்புடைய, (வினை.) கீறு, நீட்டுவாட்டாகப் பிள, சிறுபிளவு உண்டாக்கு, குறுகநறுக்கு, துண்டு துண்டாக ஆரி.
Slither
v. (பே-வ) ஒழுங்கின்றிச் சறுக்கிச் செல், சறுக்கித் தடுமாறு, ஒழுங்கின்றி வழுக்கிக் கொண்டு போ.
Slitting-rollers
n. நெக்குவெட்டுருளை, தகடுகளை இடையிட்டு அழுத்தித் கீறும் உள இணைக்கருவி.
Slit-trench
n. படைக்கல இடுவரைப்பள்ளம், (படை.) நீள் இடுகுழி, மறை அப்ழ்.
Sliver
n. சிராய், சிம்பு, வரிச்சல், மரத்துண்டு, தூண்டில் இரையாகப் பயன்படும் சிறுமீன் விலாக்கண்டம், (வினை.) சிராய்களாகக் கீறியெடு, சிம்புகளாகப் பின், மீன் விலாக்கண்டம் கீறியெடு.
Slly
-1 n. நொச்சித்தாக்கு, புறப்பாய்வு, முற்றுகையிடப்பட்டோ ர் வகையில் வௌதயேறித் தாக்குதல், திடீரெழுச்சி, திடீர்ச்செயல் முனைப்பு, பாய்வு, திடீர் அசைவு, திடீர்ப்பயணப் புறப்பாடு, திடீர்க்கற்பனை, மின்னல் புனைவுரை, கொடிப்பேச்சு, நகைத்திறத் துணுக்கு, சாட்டுரை, கேலிக
Slobber
n. சொள்ளு, சாளைவாய்நீர், வடிகோழை, சிணுங்குரை, கொஞ்சற்பேச்ச, ஆபாசமுத்தம், எச்சில் வெறிமுத்தம், (வினை.) கோழை வழியவிடு, முத்தமிட்டு எச்சிற்படுத்து, முத்தமிட்டு, ஆடைகெடு வேலைசெய், குளறுபடிவேலை செய், காரியத்தை குழப்பு.
Slog
n. கடுங்குருட்டடி, குருட்டுக்கைவாக்காக வீழ்த்தப்பட்டகனத்த அடி, கடும் வேலையில் மூழ்குதல், (வினை.) குத்துச்சண்டையில் குருட்டுவாக்காகக் கடுமையான அடிகொடு, பந்தாட்டத்தில் கடுங்குருட்டடி அடி, விடாது கடுநடை நட, விடாது கடுவேலை செய்.
Slogan
n. போர்க்குரல், கட்சிப் போராட்ட ஊக்கொலி, கொள்கைக்குரல், இலக்குரை, மேற்கோளுரை, விளம்பரக் கவர்ச்சிவாசகம், மரபுநெறியுரை, வாய்பாடுரை.
Sloid
n. மரச்செதுக்கற் பயிற்சி.
Sloop
n. சிறிய ஒற்றைப் பாய்மரக்கப்பல், சிறு வேவுலாக்கப்பல்.
Slop
-1 n. சேறு, சிதறிய நீர்மம், குட்டை, தெறித்த நீர், கோமலம், (வினை.) சிதறு, சொட்டு, சேறு தெறி, சேற்றில் நட, கலத்தில் கவிந்து வழி, சேற்றுநீரால் அழுக்காக்கு, சேற்றுநீர் வகையில் அழுக்காக்கு, உணர்ச்சி பொங்கி வழி.
Slope
n. சாய்வு, சரிவு, சரிவுநில, சாய்வளவு, சாரல், மேட்டுநிலப்பகுதி அல்லது சரிவு நிலப்பகுதி, சாய்தளப்பரப்பு, தளக்கோட்டம், கிடைநிலையில் சிறிதளவு சரிவு, நிலக்கோட்டம், நிமிர்நிலையில் சிறிதளவு சரிவு,மேல்நோக்கிய சாய்வு, கீழ்நோக்கிய சரிவு, துப்பாக்கியைத் தோளில் சாய்த்து நிற்கும் போர்வீரர்நிலை, படைவீரனின் துப்பாக்கிச் சாய்வேந்துநிலை, (வினை.) சரித்துத்திருப்பு, சரிவுறு, மேல்நோக்கிச் சாய்வுகொள், கீழ்நோக்கிச் சரிவுறப்பெறு.
Slop-pail
n. படுக்கை அறை அழுக்கு வாளி.
Sloppy
a. பாதை வகையில் குழைசேறார்ந்த, நீர்க்குட்டைகள் நிறைந்த, படுநனைவான, நீர்தோய்ந்த, நிலத்தள வகையில் அழுக்கு நீரால் நனைந்த, மேசைவகையில் அழுக்குநீர் தெறித்த, அழுக்குநீர் துளும்பிய, வேலை வகையில் ஒழுங்கற்ற, பணிவகையில் முற்ற முடியாத, தொழில்வகையில் அரைகுறையான, உணர்ச்சி அல்லது பேச்சுவகையில் மேலீடான உணர்ச்சியுடைய, உணர்ச்சிப் பசப்புடைய.
Slop-room
n. கப்பலில் கப்பலோடிகளுக்கு அளிக்கப்படும் ஆணை உடை-படுக்கைகளின் சேம அறை.
Slops
-1 n. pl. அளறு, பாழ்ஞ்சேறு, கழிவுநீர், கலங்கல் நீர், பாழ்ங்கூழ், நீராளமான கஞ்சி, இளங்கலவைத் தேறல், சாராயச் செறிவுகுன்றிய பான வகை, அடுக்களைக் கழிவுகலஅடைசல், படுக்கையறைக் கூளம்.