English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Slops
-2 n. தளர் காற்சட்டை, ஆணை உடை, கப்பலோட்டிகளுக்கு தைத்துக் கொடுக்கப்படும் உடை, ஆணை விரிப்பு.
Slop-seller
n. தைத்த உடைகள் விற்பவர்.
Slop-shop
n. தைத்த உடைகள் விற்குங்கடை.
Slot
-1 n. இயைவடுப் பள்ளம், இயந்திரத்தில் மற்றொரு பகுதியுல்ன் பொருந்தி இயைவதற்கான துளை அல்லது கீறல் அல்லது பள்ளம், துளைவிளிம்பு, இயந்திரத்திறல் நாணயம் விழுவதற்குரிய வடிவளவுத்துளை, மறைபொறிக்கதவம், நாடகமேடையில் தோன்றாப் பொறிவழி, (வினை.) இயந்திரத்தில் இயைவடுப்பள
Slot
-2 n. மான்தடம், வேட்டையில் காலடித்தடத்தால் அறியப்படும் மான் சென்ற நெறி.
Sloth
n. மடிமை, மரங்களில்வாழும் கரடிபோன்ற தேவாங்கினஞ் சார்ந்த பால்குடி விலங்குவகை.
Sloth-bear
n. தேனுண்ணுங் கரடிவகை.
Sloth-monkey
n. தேவாங்கு வகை.
Slot-machine
n. காசுவீழ்வியங்குபொறி, துளைவிளிம்பில் காசுபோடுவதனால் இயங்குங் கருவி.
Slot-meter
n. காசுவீழ்வு அலகீட்டுக்கருவி, காசுவீழ்வதனால் அலகு குறித்துக்காட்டுங் கருவி.
Slotting-machine
n. துளைவிளிம்புபெட்டி செய்யும் அமைவு.
Slouch
n. குனிவு, தலைதொங்கவிட்ட நிலை, கவிழ்வுநிலை, கவிழ்நடை, குனிந்தபோக்கு, கூனல்தோற்றம், அருவருப்பான தோற்றம், கீழ்நோக்கிய தொப்பிவிளம்புச் சாய்ப்பு, திறமைகெட்ட வேல, செப்பமற்றவேலை, தட்டிக்கழிப்புப் பணி, ஏடாகோடத் தோற்றமளிக்குங் கோமாளி, (வினை.) தலையைத் தொங்கவிடு, கூனிநட, அருவருப்பாக நட, குந்திநில், உட்கார், தொப்பியின் ஒருபுற விளிம்பினைக் கீழ் நோக்கிச் சாய்வுறுவி.
Slough
-1 n. சதுப்புநிலப் பள்ளம், சதுப்புநிலத் தேக்கம், சேற்றுத்தலைக் காயல், சதுப்பார்ந்த கழிநிலம்.
Slough
-2 n. பாம்புரிவை, விலங்குகழற்றி, பறவை உதிர்த்தஇறகு, உயிரினம் கழித்த உறுப்பு, எறிந்த சட்டை, தோல் பொருக்கு, அசறு, கழித்து ஒதுக்கப்பட்ட பழக்கவழக்கக் கூறு, (வினை.) மேலுரிபோக்கு, சட்டைகழற்று, சட்டைபோல் கழற்றி எறி, சட்டைபோற் கழன்று விழு, உதிர்ந்து விழு, கழித்து
Slovak
n. ஸ்லவோனிய மக்களுள் ஒருவர், ஸ்லவோனிய மக்களின் மொழி, (பெ.) ஸ்லவோனிய மக்களில் ஒருவர் சார்ந்த, ஸ்லவோனிய மக்களின் மொழி சார்ந்த.
Sloven
n. ஒழுங்கற்றவர், தூய்மையற்றவர், அழுக்கானவர், கவலையற்றவர், பொறுப்பற்றவர், சோம்பேறி, ஒழுங்குமுறையற்றவர், (பெ.) சோம்பலான, ஒழுங்கற்ற, தூய்மையற்ற.
Slovene, Slovenian
தென் ஸ்லவோனியர், யூகோஸ்லாவியாவிலுள்ள ஸ்லவோனிய மக்களுள் ஒருவர், தென் ஸ்லவோனிய மொழி, யூகோஸ்லாவியாவிலுள்ள ஸ்லவோனியர் மொழி, (பெ.) யூகோஸ்லாவியாவிலுள்ள ஸ்லாவோனிய மக்களுள் ஒருவர் சார்ந்த, தென் ஸ்லவோனிய மொழிசார்ந்த, யூகோஸ்லாவியாவிலுள்ள ஸ்லவோனிய மக்கள் மொழிக்குரிய.
Slovenly
a. துப்பரவுகெட்ட, தூய்மையற்ற, ஒழுங்குமுறையற்ற, ஒழுங்கற்ற, அக்கறையற்ற, சோம்பலான, (வினையடை.) சோம்பலாக, அக்கறையின்றி, பொறுப்பின்றி, ஒழுங்குமுறையின்றி.
Slow
a. மெதுவான, மந்தமான, காலந்தாழ்த்துகிற, தாமதமான, படிப்படியான, தாமதமாகச் செல்கிற, சுணங்குகிற, கூரறிவற்ற, முட்டாள்தனமான, விருப்பற்ற, கிளர்ச்சியற்ற, எழுச்சியில்லாத, சோர்வூட்டுகிற, நிழற்படக் கண்ணாடிவகையில் சிறு தொளையுடைய, பரப்புவகையில் தாமதத்திற்குக் காரணமாகிற, (வினை.) மௌளச்செலுத்து, வேகங்குறை, (வினையடை.) மந்தகதியில், மெதுவாக, காலங்கடந்து, தாமதமாக.