English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Slowcoach
n. செயல் மந்தமானவர், அறிவுமந்தமானவர், நுண்ணறிவற்றவர், கருத்துகளிற் காலத்தாற் பிற்பட்டவர்.
Slow-match
n. வெடிமருந்து பற்றவைப்பதற்குரிய நெடுந்திரி.
Slow-worm
n. நிலப்புழு வகை, பாம்பிற்கும்-பல்லிக்கும் இடைப்பட்ட தீங்கற்ற சிற்றுயிர் வகை.
Slub
n. கம்பளிப்புரியிழை, முன் அடிப்படை அரைமுறுக்குக் கம்பளி இழை, (வினை.) கம்பளியைப் புரியிழையாக்கு, முன் அடிப்படை அரையளவாக முறுக்கு.
Slubber
v. கவனமின்றிச் செய், அரைகுறையாகச் செய், குளறுபடியாகச் செய், எச்சிற்படுத்து, உமிழ்நீர் ஒழுகவிடு.
Sludge
n. குழைசேறு, பனிச்சேறு, சாக்கடைக்கசடு.
Slug
-1 n. இலையட்டை, தோட்டச்செடிகளை அழிக்கும் ஓடற்றநத்தை வகை, (வினை.) இலையட்டைகளைச் சேகரித்து அழி.
Slug
-2 n. பரற்குண்டு, ஓழுங்கற்ற வடிவுடைய துப்பாக்கிக்குண்டு, பருங்குழை, உலோக மொத்தை, உருக்கச்சு இயந்திரத்தில் கோத்தவரிப்பாளம்.
Slug-abed
n. தூங்குமூஞ்சி.
Sluggard
n. சோம்பேறி, மந்தமானவர், (பெ.) சோம்பேறியான.
Sluggish
a. மந்தமான, மடிமைவாய்ந்த, எளிதில் அசையாத, மெதுவாகச் செல்கிற, உணர்ச்சித்திறங் குன்றிய.
Sluice
n. மதகு, வாய்மடை, கண்மாய், மதகு வருநீர், மதகு வடிநீர், கண்மாய் வருகால், கண்மாய் மறிகால், வாய்க்கால், தூம்புவாய்க்கால், கட்டு நீரோடை, அலம்பீடு, (வினை.) மதகு அமை, வாய்மடை, வகுத்தமை, மதகுநீர்த்தேக்கு, மதகிலிருந்து வௌளம் பெருகச்செய், அலம்பு, மீதாக நீர்பாய்ச்சு, தூம்புநீர்பீற்று, வௌளத்தின் வகையில் பீறிப்பாய்வுறு.
Sluice-gate
n. மதகு, மடைவாய்.
Sluice-valve
n. மதகுச்சீப்பு, மடையடைப்பு.
Sluice-way
n. தூம்புவாய்க்கால், கட்டுநீரோடை, செயற்கைக் கால்வாய்.
Sluit
n. கால்வாய், தென் ஆப்பிரிக்க வழக்கில் ஒடுங்கிய வாய்க்கால்.
Slum
-1 n. அழுக்குத்தெரு, அங்கணம், புழக்கடை, நாராசப் பின்கடைச்சந்து, (வினை.) அழுக்கடை சென்று ஆய்வுசெய்.
Slum
-2 n. மசகெண்ணெயின் மசகியல்பற்ற கூறு, மசகெண்ணெயில் பயன்பாட்டின்போது உண்டாகும் பிசுக்குள்ள மண்டி.
Slumber
n. ஆழ்துயில், அயர்ந்த உறக்கம், (வினை.) அயர்ந்து உறங்கு.