English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Solidification
n. உறைவிப்பு, இறுகுவிப்பு, உறைவு, இறுகுழ்ல், நீர்ப்பொருள் கெட்டிப்பொருளாதல்.
Solidify
v. திண்மமாக்கு, இறுகலாக்கு, நீர்மப் பொருளைக் கெட்டிப்பொருளாக்கு, உறை, இறுகு, கெட்டியாகு, திண்ணிதாகு, செறிவுறு.
Solidity
n. பிழம்பியல்பு, கெட்டிமை, செறிவு, திட்பம், நிலைத்த தன்மை, நிலையமைதி, நல்லமைதி, உறுதி, பிழம்பளவு.
Solidungualr, solidungulate
a. ஒற்றைக் குளம்புடைய.
Solidus
n. (வர.) ரோமப் பேரரசர் கான்ஸ்டண்டைனால் வழங்கப்பெற்ற பொன் நாணயம், ஆங்கில வௌளிக் குறிப்பு.
Solifidian
n. நம்பிக்கை நியாயக் கோட்பாட்டாளர், வீடுபேற்றிற்குக் கடவுள் நம்பிக்கையொன்றே போதும் என்னும் கோட்பாட்டாளர்.
Soliloquize
v. தனிமொழியாடு, தனிமொழியாக்கு.
Soliloquy
n. தனிமொழி, நாடகத் தனிமொழிப்பகுதி.
Soliped
n. ஒற்றைக் குளம்பு விலங்கு, கவையடியில்லா விலங்கு, (பெ.) ஒற்றைக் குளம்புடைய.
Solipsism
n. (மெய்.) ஆன்மைக நித்தியவாதம், ஆன்மா ஒன்றே அறியத்தக்கதும் நிலைபேறுடையதும் ஆகும் என்னுங் கோட்பாடு.
Solipsist
n. ஆன்மைக நித்தியவாதி, ஆன்மா ஒன்றே அறியத் தக்கதும் நிலைபேறுடையதுமாகும் என்னுங் கோட்பாடுடையவர்.
Solitaire
n. காதணி, சட்டைக் குமிழ், ஒரேபாளமான சட்டைக் கைமாட்டி, பரற்குழிப் பலகை ஆட்டம், பலகையில் சுழற்சிகுண்டுகளால் ஆரம் பல்லாங்குழி போன்ற விளையாட்டு, தனி ஒருவர் சீட்டாட்ட வகை, அமெரிக்க பறவை வகை, தனி வாழ்க்கைத் துறவி.
Solitaire-board
n. பரறகுழி ஆட்டப் பலகை, பல்லாங்குழிப்பலகை.
Solitarily
adv. தனிமையாக, தனிவாழ்வாக, தனிவாழ்வுப் பண்போடு, ஒதுங்கிய நிலையில், கூடிப்பழகாத நிலையில்.
Solitary
n. துறவி, ஒற்றைக்கட்டை, (பெ.) தனிமை வாய்ந்த, தனித் தொதுங்கி வாழ்கிற, தனி ஒதுக்கப்பண்புடைய, கூடி வாழாத, சமுதாயக் கூட்டுவாழ்வுப் பண்பற்ற, துணையற்ற, ஒற்றையான, தனித்த, தனி ஒன்றான, ஒத்திணைவற்ற.
Solitude
n. தனிமை, தனி இயலமைதி, ஏகாந்தம், தனியிடம், ஆள் நடமாட்டமற்ற இடம்.
Solmizate
v. நிலைச்சுரமுறை கையாளு.
Solmization
n. நிலைச்சுரமுறை, நிலைச்சுரமுறை கையாளுதல்.
Solo
n. தனிக்குரலிசை, தனிக்குரல் வாய்ப்பாட்டு, தனிக்கைவரிசை ஆட்டம், சீட்டாட்டத்தில் தனிப்பொறுப்பாட்டம், பக்கவண்டியில்லாத மோட்டார் சைகளி, சீட்டில் ஐந்து பொறிக் கெலிப்புக் கேள்வி, விமான வகையில் துணையிலாத் தனிப்பறப்பு, (பெ.) துணையற்ற, தனியான, (வினையடை.) துணையின்றி, தனியாக.
Soloist
n. தனிக்குரலிசைஞர், தனிக்குருவி இசைஞர், விமானத் தனிவலவர்.