English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Somatic
a. உடற்கூறு சார்ந்த, உடற்பிழம்பியலான, உடல் சார்ந்த, உயிர்க்கூற்றிற்குப் புறம்பான, மனஞ்சாராத.
Somatogenic
a. உடம்பில் தோன்றுகிற, உடலிற் பிறக்கிற இயல்புடைய.
Somatology
n. உடலுயிரியல்நுல், உயிருள்ள உடலைப் பற்றிய ஆய்வுத்துறை, பொருள்களின் நிலையியக்க அளவை ஆய்வியல், உடல் மெய்க்கூற்றியல் நுல், உடல் உள்ளுறுப்பியல், உடலியல் ஆய்வுத்துறை.
Sombre
a. இருளார்ந்த, மங்கலான, கிளர்ச்சியற்ற, சோர்வூட்டுகிற, துயரம் நிரம்பிய.
Sombrero
n. அகல் விளிம்புத் தொப்பி.
Some
pron சிலர், சில, கொஞ்சம், சிறிது, ஏதோ கொஞ்சம், ஒரு சிறிதளவேனும், (பெ.) ஏதோ சில, இனமறியப்படாதசில, யாரோ ஒரு, ஏதோ ஒரு, குறிப்பிட்ட சில, கொஞ்சம், ஒருசிறிது, கணிசமான சில, போதிய அளவான, கணிசமான அளவுடைய, குறிப்பிடத்தக்க அளவான, எதிர்பார்த்ததிலும் மிகுதியான, போற்றத்தக்க அளவான, மதிப்பானசில, ஒரளவாகக் குறிப்பிடத்தக்க,புறக்கணிக்கத்தகாத அளவான, சிறிதளவாவது, குத்தாயமான, சற்று ஏறத்தாழ்வான, (வினையடை.) (இழி.) ஓரளவில்.
Somebody
n. குறிப்பிடத்தக்கவர், பெருஞ்சுட்டு, யாரோ ஒருவர், இனமறியப்படாத ஒருவர்.
Somehow
adv. எப்படியோ, ஏதோ ஒரு வகையில், எவ்வாறேனும், ஏதோ ஒருவழியாக.
Someone
n. குறிப்பிடத்தக்கவர், முக்கியமானவர், யாரோ ஒருவர், இனமறியப்படாத ஒருவர், பழக்கப்படாத ஒருவர், புதிதான ஒருவர்.
Somersault
n. குட்டிக்கரணம், தலைகுப்புறவீழ்வு, (வினை.) குட்டிக்கரணமிடு.
Somerset
-2 n. துரப்பியற் சேணம், வளையச் சேணம்.
Somerset House
n. ஆவணச் சேமவைப்பு மனை, எண்பிக்கப்பட்ட ஆவணங்களும்-உள்நாட்டு ஆயத்துறை அலுவலகங்களுங் கொண்ட லண்டன் மாநகரா மாளிகை.
Something
pron ஏதோ ஒன்று, ஏதாயினும் ஒன்று, இனமறியப்படாத ஒன்று, நினைவில்லாத ஏதோ ஒன்று, சிறிதளவு, ஏதோ கொஞ்சம், ஒத்துக்கொள்ளப்படவேண்டிய அளவு, பாராட்டத்தக்க அளவு, பாராட்டத்தக்க செய்தி, மதிப்புவாய்ந்தவர், (வினையடை.) மட்டான அளவில், ஓரளவு, சிறிது சற்றே.
Sometime
a. முன்னொரு நாளைய, முன்னொரு காலத்திய, (வினையடை.) சில காலமாக, கொஞ்சநேரம், கொஞ்சநாளாக, ஏதோவொரு சமயம், ஏதோ ஒருகாலத்தில், எப்பொழுதாவது ஒருசமயம், முன்பு ஒருகாலத்தில்.
Sometimes
adv. சிலவேளைகளில்.
Someway
adv. ஏதோ ஒருவழியாக.
Someways
adv. ஏதோ ஒருவழியில், ஏதோ ஒருவகையில்.
Somewhat
pron ஏதோ ஒரு சிறிதளவு, சிறிதளவே, (வினையடை.) சற்றே, சிறிதளவில், ஓரளவில், ஏறக்குறைய.
Somewhen
adv. ஏதோ ஒரு சமயம், எப்போதோ ஒரு தடவை.
Somewhence
adv. எங்கிருந்தோ.