English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sonata
n. சில்வழி இசைப்பா, அடிப்படை இசைப்பு மாறாமல் ஒரு கருவி அல்லது இரு கருவிகளுக்குரியழ்ய்ச் சந்த வேறுபாடுகளுடன் பாடப்படும் முக்கூறுபாடுடைய பதம்.
Sonatina
n. குறுஞ்சில்வழி இசைப்பா.
Song
n. பாடல், பாட்டு, இசைப்பா, எதுமை அமைந்த சிறு பாவகை, இசைப்பதம், சந்தயாப்பு, கவிதை, மிடற்றிசை, வாய்ப்பாட்டு, குரற்பாட்டு, பாட்டின் மெட்டு, பறவையின் இன்னிசைப்பு, வண்டினத்தின் முரல்வு, பண்ணார் குல், பாட்டுககுறிக்கும் பொருள், வழக்கமான பண்பு, பேச்சுப்பயில்முறை, வகைமுறை, வீணாரவாரம், அற்பச்செய்தி, சிறுதிறப்பொருள்.
Song-plugging
n. வல்லந்தப் பாடற் பரப்பீடு.
Song-sparrow
n. வேலியில் ஊடாடும் இசைப்பறவைவகை.
Songster
n. பாடகர், இசைஞர், பாடும்பறவை, கவிஞர்.
Songstress
n. பாடகி, பாண்மகள்.
Song-thrush
n. இன்னிசைப் பறவை வகை.
Sonic
a. ஒலிசார்ந்த, ஒலியலைகளுக்குரிய.
Soniferous
a. ஒலியுண்டாக்குகிற, ஒலிகடத்திச் செல்லுகிற.
Son-in-law
n. மருமகன், மகள் கணவன்.
Sonnet
n. ஈரேழ்வரிப்பா, பதினான்கு வரிகள் கொண்ட செய்யுள் வகை, சிறு உணர்ச்சிப்பாடல் வகை, (வினை.) ஈரேழ்வரிப்பாஎழுது, ஈரேழ்வரிப்பாவினாற் போற்றிப்புகழ்.
Sonneteer
n. ஈரேழ்வரிப் பாவாணர், (வினை.) ஈரேழ்வரிப்பா இயற்று, ஈரேழ்வரிப்பாவாற் பராவிப் பாராட்டு.
Sonny
n. சிறுகுறு புதல்வன், புதல்வனைச் சுட்டிய விளிக்குறிப்புச்செல்.
Sonobuoy
n. வமிதவை, வானுர்தியிலிருந்து கடற்பரப்பில் வீசப்பட்டுக் கடலடியில் நீர்மூழ்கி இயக்க விவரங்களைக் கண்டுணர்ந்து விமானத்துக்குத் தகவல் தெரிவிப்பதற்குரிய அமைவுடைய கடல் மிதவை.
Sonometer
n. ஒலிமானி, செவிப்புல ஒலி உணர்வுமானி.
Sonorescent
a. கதிரலைவொலியுடைய, திண்தொய்வகம் போன்ற பொருள்களின் வகையில் வெப்பச்சுடரிய்க்க அலைகளுக்கேற்ற ஒலி எழுப்புகிற.
Sonorific
a. ஒலிசெய்கிற, மிடற்றொலி அல்லாத ஒலி எழுப்புகிற, ஒலிபடுகிற, முழங்கொலி செய்கிற, நிறைஓசையுடைய, மணியோசையுடைய, அடித்தால் கணீர்கணீர் என்று ஒலிக்கிற.
Sonorous
a. ஆர்ப்பொலியுடைய, இரட்டுகிற, முழங்கொலிசெய்கிற, நிறை ஓசையுடைய, உரத்த குரலுடைய.
Sonsy
a. கொழுகொழுத்த, ஆகூழுடைய.