English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Speed
-2 v. இயந்திரவேகம் ஒழுங்குபடுத்து இயந்திரத்தை நிலையான வேகத்திற் செலுத்து, சட்டமீறிய வேகத்தில் உந்து வண்டி செலுத்து.
Speed-boat
n. இயந்திர விசைப்படகு.
Speed-cone
n. இயந்திர இயங்குருளைகளிடையே வேகவீதம் நிலைப்படுத்தும் இடை வார்ப்பட்டை அமைவு.
Speed-cop
n. உந்து விசையாட்சியாளர், நெறிகாவல்துறையில் உந்துமிதியல் செல்லும் உந்துவேகத் தணிக்கை அலவலர்.
Speeded
n. 'ஸ்பீட் (2) ' என்பதன் இறந்தகால - முடிவெச்சவடிவம்.
Speeder
n. இயந்திரங்களின் விரைவு ஒழுங்குபடுத்தும் அமைவி.
Speedometer
n. விரைவு மானி.
Speedway
n. விசைமிதிப் பந்தய ஓட்டக்களம், விசை வேக உந்து வண்டிநெறிவரை, விசைவேக உந்துவண்டிகள் செல்லுவதற்காக வரையறுத்து ஒதுக்கப்பட்ட பாதைப் பகுதி.
Speedwell
n. நீலமலர்ப் படர்கொடிச் செடிவகை.
Speedy
a. விரைந்த, உடனடியான, தாமதமின்றி நிகழ்கிற.
Speek
-1 n. சிறுபுள்ளி, மாசு, கறை, தூசு, அழுக்கின் சிறுதுகள், பழத்தின் மேலுள்ள புள்ளி, பழத்தின் அழுகற் பகுதி, (வினை.) புள்ளிகள் இடு, கறைப்படுத்து, புள்ளிகள் அமையப்பெறுவி.
Speek
-2 n. கொழுவிய இறைச்சி, கொழுப்பார்ந்த பன்றி இறைச்சி, கடல்நாய்க் கொழுப்பு, திமிங்கிலக் கொழுப்பு.
Speiss
n. ஈயக் கனிப்பொருளெச்சக் கலவை, ஈயச்சுரங்கக் கலவையில் கிடைக்கும் கழிவுருக்குங் கலவை.
Spelaean
a. குகைகள் சார்ந்த, குகைகளில் வாழ்கிற, குகைகளில் உள்ள.
Spelaeologist
n. குகை ஆய்வுநுலர்.
Spelicans
n. 'ஸ்பிலிக்கின்' என்பதன் பன்மை வடிவங்களுள் ஒன்று.
Spell
-1 n. மந்திரச் சொல், மந்திரத்தொடர், மந்திர வாய்ப்பாடு, உச்சாடனம், மந்திர ஒலிப்பு, மந்திர ஆற்றல், மந்திர ஆற்றல் விளைவு, மந்திரத்துக்குப் கட்டுப்பட்ட நிலை, மந்திர வெறிப்பு, வசிய ஆற்றல், அவா ஈர்ப்பாற்றல், கவர்ச்சியாற்றல், கவர்ச்சிக்கூறு.
Spell
-2 n. வேலைவீச்சு, ஒருதடவை செய்தவேலை, சிற்றிடைக்காலம், குறுகிய நேர அளவு, கணப்போது, குறுகி கால எல்லை, (வினை.) (அரு.) வேலைமுறை பெறு, ஓய்வளி.
Spell
-3 v. எழுத்துக்கூட்டு, சொல்வகையில் எழுத்தெழுத்தாகச் சொல், எழுத்தெழுத்தாக எழுது, எழுத்துணர்ந்துபடி, எழுத்தெழுத்தாகப் புரிந்து படி, எழுத்துக்கள் வகையில் கூடிச் சொல்லாக்கு, சொல்லுருவாரு, சூழ்நிலை-திட்டம் ஆகியவற்றின் வகையில் இயல் விளைவாகக் கொணர், மீதாகவந்துவி
Spellbinder
n. கேட்டார்ப்பிணிக்கும் பேச்சாளர்.