English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spectrometer
n. வண்ணப்பட்டை மானி.
Spectroscope
n. வண்ணப்பட்டை ஆய்வுகருவி, (வினை.) வண்ணப்பட்டை அய்வுகருவியைக் கையாளு.
Spectroscopic, spectroscopical
a. வண்ணப்பட்டை அளவாய்வியல் சார்ந்த, வண்ணப்பட்டை அளவாய்வியற் கருவிக்குரிய, வண்ணப்பட்டை அளவாய்வின் பயனான.
Spectroscopy
n. வண்ணப்பட்டை ஆய்வு, வண்ணப் பட்டைக்காட்சி, ஆய்வுத்துறை, வண்ணப்பட்டை அளவாய்வுக் கருவியல், வண்ணப்பட்டை ஆய்வுகருவிக் கையாட்சி.
Spectrum
n. உள்விழி நிழலுரு, பின்காட்சித் தோற்றம், உருவௌத வடிவம், விழிக்கோட்ட நிழலுருவம், ஔத நிழற்ப்டை, வண்ணநிழல்வரி உரு.
Speculam
n. (அறு.) கண்ணகற்சிக் கருவி, உடற்குழிவுகளவிரிவுபடுத்திக் காட்டுங் கருவி, பீலிக்கண், பறவைவகைகளின் இறக்கைகளின் வண்ண மையம், உலோகப் பளிங்கு, எதிர் நிழலுருக் காட்டவல்ல உலோகச்சில்லு.
Specular
a. கண்ணகற்சிக் கருவியியல்புடைய, உலோகப் பளிங்கியலான, உலோகப் பளிங்கு சார்ந்த, எதிர்நிழலுருக்காட்டுகிற.
Speculate
v. ஊகஞ் செய், ஊக ஆய்வு நிகழ்த்து, வரக்கூடிய நலந் தீங்குகள் பற்றி ஆய்ந்து நோக்கு, தொலைநீடாய்வு செய், கற்பனைக்கோட்டை கட்டு, ஊக வாணிகஞ்செய், வாணிகச் சூதாட்டத்தில் இறங்கு, துணிந்து முதலிடு, துணிகர ஆதாய வேட்டையாடு, கொள்ளை ஆதாயம் கருதிச்சரக்குகளை வாங்கிக்கட்டு, உருப்பளிங்கு நோக்கு, துருவிநோக்கு, தேர்ந்தவராய், எதிரிநிழலிட்டுக் காட்டு, கோட்பாட்டுக் கோட்டைகட்டு, கனவுக் கூடகோபுரம் எழுப்பு, கனவுமாடம் புனை.
Speculation
n. ஊகக் கோட்டை, ஊக வாணிகம், நினைவுக்கூடகோபுரம், கற்பனைமாடம், நெடுநீளாய்வு, குருட்டு ஆதாயவேட்டை, துணிகர யோக வேட்டை.
Speculum-metal
n. தொலைநோக்காடி உருப்பளிங்கின் உருநிழல் காட்டும் செம்பு-தகரக் கலவை.
Sped
v. 'ஸ்பீட்' (1) என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Speech
n. பேச்சு, உரையாடல், பேச்சாற்றல், மாற்றம், பேசிய சொற்கள், சொறிபொழிவு, சொற்பொழிவுக் கட்டுரை, மன்னர் முதலியோரின் மன்றப் பேருரை, பேச்சு வழக்கு, மொழி, இசைமேளக் குழலின் முரல்வொலி.
Speechful
a. வெறும்பேச்சுப் பேசுகிற, வம்பளக்கிற.
Speechifier
n. சொற்பொழிவாற்றுவதுபோலப் பேசுபவர்.
Speechify
v. (இழி.) பேருரையாற்றிப்பார், சொற்பொழிவாற்றுவது போலப் பேசு.
Speechless
a. ஊமையான, பேச்சுத் தடைப்பட்ட.
Speech-reading
n. செவிடர் பேச்சு அறியும் முறை, பேசுபவரின் உதட்டு அசைவுகளைக் கவனித்துச் செவிடர்கள் பேச்சினைப் புரிந்து கொள்ளும் முறை.
Speech-room
n. சொற்பொழிவுக்கூடம்.
Speech-training
n. சொற்பொழிவுக் கலைப்பயிற்சி, பேச்சுக்குறைகளின் திருத்தமுறைமை.
Speed
-1 n. விரைவு, விரைவுவீதம், செயல்வெற்றி, நிறைவேற்ற நலம், (வினை.) விரைவாகச் செல், வேகமாகச் செலுத்து, விரைந்தனுப்பு, விரைவு தூண்டு, வேகமாக்கு, செயல்வெற்றியுறு, செயல்வெற்றிவழங்கு, நலமுறப் பெறு, நல்முறுவி.