English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spearman
n. வேல்வீரன், வேல்கொண்டு போரிடும் காலாட்படை வீரன்.
Spearmint
n. தோட்டப் புதினாக்கீரை வகை.
Spec
n. (பே-வ) சூதாட்ட முயற்சி, துணிவு வாணிகளம்.
Special
n. சிறப்பு முறைக் காவல்துறையினர், சிறப்புமுறைப்புகைவண்டி, சிறப்புமுறைத் தேர்வு, செய்தித்தாள் வகையில் சிறப்பிதழ், (பெ.) தனிவகையான, சிறப்பு முறையான, சிறப்பியல்புடைய, பொதுநிலை மீறிய, குறிப்பிட்ட காரணத்திற்கான, தனிச்செறிவுடைய, தனி முனைப்புடைய, தனிப்படிமுறையான, தனிப்பட்ட அளவுடைய.
Specialism
n. தனித்துறை ஈடுபாடு, தனித்துறைப் பயிற்சி, தனித்துறைப் பயிற்சிப் பண்பு.
Specialist
n. வல்லுநர், சிறப்பாய் வறிஞர், தனித்துறைநிபுணர்.
Specialist
வல்லுநர், தனித் தகுதியர்
Specialistic
a. தனித்துறை வல்லாண்மை சார்ந்த, தனித்துறையாய்விற்குரிய.
Speciality
n. தனிக்கூறு, சிறப்புக்கூறு, தனிப்பண்புக்கூறு, தனிமுறைச் சிறப்புத் தொழில், தனிமுறைச் சிறப்புச் செயல், தனிச்சிறப்புரிமைச் செய்பொருள், தனி உழைப்புத்துறை, தனிக்கவனிப்புத்துறை.
Specialization
n. தனித்துறைப்பாடு, தனித்துறைப்பயிற்சி, வகைதிரிபுப் பெருக்கம், வகைதிரிபேற்றம், தனிப் பண்பு வளர்ச்சி, தனிவேறுபாட்டு வளர்ச்சி, சிறப்புடை நியமம்.
Specialize
v. தனித்துறை வல்லுநராயிரு, துறை வல்லுநராக்கு, தனித்துறைப் பயிற்சி மேற்கொள், தனித்துறை ஆய்வில் மேன்மேலும் ஆழ்ந்துசெல், தனித்துறைப்படுத்து, பொருட் குறுக்கஞ் செய், தனிவகையாக்கு, தனியியற்படுத்து, தனிப்பண்பூட்டு, தனித்தன்மை உடையதாக்கு, தனிச்செறிவூட்டு, பண்பு முனைப்பாக்கு, தனியியற்படு, தனித்தன்மையுடையதாகு, தனிப்படுத்து, தனிப்படக்குறிப்பிடு, வரையறுத்துக்குறிப்பிடு, தனி வரையறைப்படுத்து, தனிவிளக்கமளி, வகை திரிபுறுத்து, வகை பிரித்துக் காட்டு, (உயி.) தனி வேறுபாடு பெருக்கிக் காட்டு, தனி வேறுபாடு உடையதாகு.
Specialty
n. தனிமுறைச் சிறப்புத்தொழில், தனிச்சிறப்புப் பண்டம், தனிச்சிறப்புச் செயல், தனி உழைப்புத்துறை, தனிக்கவனிப்புத்துறை, (சட்.) முத்திரை ஒப்பந்தம், முத்திரை ஆவணம்.
Species
n. (தாவ., உயி.) வகை பிரிவு, (அள.) வகைமாதிரி, இனத்தில் மேலும் வகைபிரிக்க முடியாதபடி சிறிதான தனியுருக்களடங்கிய குழு, படிவம், போன்றிருப்பது, சமயத்துறையில் திருவுணாவின் புற வடிவம், (சட்.) புற உருவமைப்பு.
Specific
n. தனிப் பிணிமருந்து, தனிநோய்ப் பண்டுவமுறை, (பெ.) திட்ட வட்டமான, தௌதவான, வரையறுத்துக் குறிக்கப்பட்ட, திட்ட வட்டமான குறிப்புக்களையுடைய, மருந்து வகையில் தனி நோய்க்குரிய, மருந்து வகையில் தனிப்பயனுறுதி வாய்ந்த, தனி வகை சுட்டிய, தனிவகைப்பட்ட, தனிவகைப் பண்புத் தொடர்பான, தனிச்செய்தி சார்ந்த, தனிமுறைச் சார்புடைய, தனிவகைக்கு மட்டுமேயுரிய, தனிவகை பிரித்துக்காட்டுகிற, வகைப்பிரிவுக்குரிய, தீர்வை வகையில் எடை முதலியன பொருட்படுத்தாமல் அளவு ஒன்றினையே கணிப்படிப்படையாகக் கொண்ட.
Specification
n. தனிக்குறிப்பீடு, தனித்தனி விவரக்குறிப்பீடு, விளக்கவிவரம், தனி ஒதுக்கீடு, இனக்குறிப்பபொதுக்கீடு, காப்புரிமை மனுவின் பொருள் ஆக்க விவரக்குறிப்பு, (சட்.) தனி உரிமையாகக் கருதப்படும் பொருளின் கூட்டாக்கமுறை.
Specifications
n. pl. சிற்பியின் முழு வேலைப்பாட்டுப்பொருள் ஆக்கத்திட்ட விவரம், பொறியியலாளரின் முழு வேலைமானத் திட்ட விவரம்.
Specify
v. பெயர் சுட்டிக் குறிப்பிடு, தனிப்படக் குறித்துக் காட்டு, விளக்க விவரமாகக் கூறு, இன வகை விரி விளக்கங் குறிப்பிடு, இனம் இனமாகக் குறி, சிற்பி வகையில் முழு வேலைமானத் திட்டத்தில் உட்படுத்தி இணை.
Specimen
n. வகைமாதிரி, உருமாதிரி, எடுத்துக்காட்டுமாதிரி, விளக்க மாதிரிச்சான்று, மாதிரித் துணுக்கு, சான்றிலக்கம், சிறப்புப் பெயர் மாதிரி, மேல்வரிச் சான்று.
Speciology
n. தோற்றுவாய் ஆராய்வுநுல்.