English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spatial
a. இடஞ்சார்ந்த, இடமகன்ற, இடத்தொடர்புடைய, இடப்பண்பிற்குரிய.
Spats
n. pl. கணுக்காலுறை, குறுங்காலுறை.
Spattee
n. மேற்பொதி காப்பு, குழந்தைகளும் மகளிரும் புதை மிதிமேல் அணியுங் கம்பளிக் காலுறை.
Spatter
n. சேறடிப்பு, துளிசிதறடிப்பு, தட்டொலி, தடதடவொலி, (வினை.) சேறடி, நீர்மத்துளி சிதறடி, அழுக்குத்தெறிக்கவை, ஆள்மீது மண்வாரி வீசு, ஆள்மீது அவதூறு படர்வி.
Spatterdashes
n. மேற்காப்புக் காலுறைக் குப்பாயம், அழுக்கு நீர் சிதறி மேற்படாமற் காக்கும் காலுறை மேற்காப்பு.
Spatula
n. வண்ணங்குழைக்கும் தட்டலகுக் கரண்டு, (அறு.) நாவழுத்திப் பிடிக்குங் குறடு.
Spatulate
a. அகன்ற கத்திபோன்ற, தட்டைக் கஜ்ண்டி வடிவுடைய.
Spatule
n. பந்தடி மட்டைபோன்ற உறுப்புப்பகுதி, (வில.) பறவையின் வால்முனை.
Spavin
n. குதிரைப் பின்னங்கால் மூட்டு நோய்வகை.
Spawn
n. உறுகீழின உயிர்களின் கரு, சினை, முட்டை, மீன் சினை, மீன் முட்டை, இழிவழக்கில் கால்வழிமரபு, பூசணவலை, பூஞ்சைக்காளானிலுள்ள நாரியற் காளான் கருவிழை, (வினை.) மீன்-தவளை-நத்தை-சிப்பி முதலியவற்றின் வகையில் முட்டையீனு, இழிவழக்கில் பிள்ளைகளைப் பெறு, முட்டைகள் அல்லது இளமீன் வகையில் குஞ்சபொரிக்கப்பெறு.
Spay
v. பெண் விலங்கு வகையில் கருப்பை அகற்று, மலடாக்கு.
Speak
v. பேசு, கூறு, சொல்லு, உரையாடு, மேடையில் சொற்பொழிவாற்று, மன்றங்களில் உரையாற்றும, உச்சரி, சொற்களை ஒலி, கருத்துத் தெரிவி, தனிக்ருத்து வௌதயிடு, மெய்ம்மை வகையில் ஔதயாது தெரிவி, எழுத்துருவில் குறிப்பிடு, கருத்துவரை, மொழிவகையில் பேசத் தெரிந்தவாயிரு, பேச இயலுபவராயிரு, ஓவிய வகையில் உயிர்த்துடிப்புக்காட்டு, குறிப்பிடத் தக்கதாயிரு, செயலாற்றலுடையதாயிரு, சான்றாயமை, சான்று பகர்வதாயிரு, நாய்வகையில் கட்டளைப்படி குரை, குரல்கொடு, குயிலுறு, இசைக்கருவி வகையில் இசைக்குரல் எழுப்பப்பெறு, கப்பல்வகையில் செய்தித் தொடர்பு மேற்கொள்ளு.
Speaker
-1 n. பொதுமேடைப் பேச்சாளர், சொற்பொழிவாளர்.
Speaker
-2 n. அவைத்தலைவர், சபாநாயகர், மக்கள் அவையில் மன்ற அமைதிகாக்கும் பொறுப்புடைய தலைவர்.
Speaking
n. பேசுதல், உரையாடுதல், சொற்பொழிவாற்றுதல், (பெ.) பேசுகிற, பேசுவதற்குப் பயன்படுகிற.
Speaking-trumpet
n. குரல் உய்க்குங் கருவி.
Speaking-tube
n. ஒலிசெலுத்து குழாய்.
Spealeology
n. குகை ஆய்வுநுல்.
Spear
n. ஈட்டி, வேல்கம்பு, எஃகுமுனை கொண்ட வேட்டை எறிகருவி, படைவீரர் எறிவேல், மீனெறி வேல், மீன் குத்தும் ஈட்டி, (வினை.) வேல்கொண்டு எறி, ஈட்டியாற் குத்து, குத்தி ஊடுருவு, நீள்தண்டாக முளைத்து எழு.
Spearhead
n. ஈட்டிமுனை, தாக்குதலை நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள் அல்லது குழு, தாக்குமுகப்பு.