English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spar
-3 n. மற்குத்தியக்கம், குத்துச்சண்டை செய்வது போன்ற கைமெய் இயக்கம், கோழிச் சண்டை இயக்கம், (வினை.) மற்குத்தியக்கங் காட்டு, கைமுட்டியால் தாக்குவது போலவும் தடுப்பதுபோலவும் சாடை காட்டு, குத்துச் சண்டை செய், சொற்களைப் பரிமாறிக் கொள்.
Sparable
n. குற்றாணி, புதைமிதியடிகளின் அடித்தோல் குதிகாற்பகுதி பொருத்தப் பயன்படும் தலையற்ற ஆணி வகை.
Spar-buoy
n. கழிமுனை, மிதவை, நிமிர்முனைப் பாய்மரக் கழியடியில் இணைக்கப்பட்ட மிதவைக்கட்டை.
Spar-deck
n. கப்பலின் முழுநீள மேல்தளம்.
Spare
n. காப்புறுப்பு, இயந்திரங்கள் பொறிகள் ஊர்திகள் வகையில் வேளைக்காப்பீட்டு உதிரி உறுப்பு, (பெ.) அருகலான, குறைவான, மட்டான, போதாத, ஒல்லியான, மெலிந்த, கஞ்சத்தனமான, செட்டான, சிக்கனமான, போதிய அளவினும் மிக்க, தனக்குக்போக மீந்த, மீத்தளிக்கக்கூடிய, மீழ்த்திலிருந்து கொடுக்கத்தக்க, பொதுத் தேவைக்கு மேற் பட்டதான, விட்டுக்கொடுக்கக்கூடிய, நெருக்கடி வேளைக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட, (வினை.) கொல்லாமல் விடு, அழிக்காமல் விடு, அழியாமற் பேணு, தண்டிக்காமல் விடு, கேடு செய்யாமல் விடு, மன்னித்துவிடு, பிழைத்துப்போகவிடு, விட்டுவை, விட்டவிடு, இல்லாமற் கழி, செலவிடாமல், மீத்துவை, காத்துவை, சொல்லாமல் விடு, மீத்துவழங்கு, மீழ்த்திலிருந்து கொடு, கடுந்தேவைக்குரியது போக மீதத்தைக் கொடு, அவசர ஈடுபாடு போக மீத நேரங்கொடு, மிகுதேவை போக மீத்துக்கொடுக்க இயலும் நிலையிலிரு, சிறிது கொடுத்தருள், செட்டாக இடு, மட்டாகச் செலவிடு.
Sparerib
n. செட்டெலும்பு, மிகளம் கொஞ்சமான இறைச்சியோடு கூடிய பன்றியின் மேல் விலா எலும்பு.
Sparger
n. தேறல் வடித்தலில் தூவுகலம்.
Sparing
a. கைப்படிப்பான, கையிறுக்கமான, மிகக்குறைந்த அளவில் செலவுசெய்கிற.
Sparingly
adv. செட்டாக, சுருக்கமாக.
Sparingness
n. செட்டு, கையிறுக்கம், கைச்சுருக்கம்.
Spark
n. தீப்பொறி, சுடர்ப்பொறி, மின்விசைப்பொறி, அனற்கூறு, ஔதர்முனை, மணிக்கல்லின் சுடர்முகப்பு, மின்னுந் துகள், மினுங்கும் பொருள், உயிர்ப்பு, உயிர்த்துடிப்பு, அறிவுத்துடிப்பு, பண்புத்திறம், தூண்டுதிறம், மகிழ்நன், ஒய்யாரன், காதற்கொழுந்து, இன்பண்பாளர், சமுதாத்திற் பழகுதற்கினியவர், (வினை.) அனற்பொறி காலு, சுடர்ப்பொறி வௌதயிடு, மின்பொறியுமிழ், (மின.) மின்னோட்டம் தடைப்படும் இடத்தில் மின்பொறி உண்டாக்கு, மகளிரிடையே காதல் தோழனாயமை, பழகினியனாயிரு.
Spark-arrester
n. மின்பொறிக் காப்பமைவு, மின்கருவிகளில் தீப்பொறியால் சேதம் உண்டாகதபடி தடுக்கும் அமைவு.
Spark-gap
n. மின்விசைப்பொறி தாவும் மின்முனை இடைவௌதநெறி.
Sparking-plug
n. உந்துபொறி-உள்வெப்பாலைகளில் வெடிக்கலவைக்கு அனற்பொறியூட்டும் அமைவு.
Sparkish
a. களிகிளர்ச்சிவாய்ந்த, பகட்டொய்யாரமான.
Sparkle
n. ஔதர்வு, சுடர்வு, மினுக்குறவு, (வினை.) மின்னுமினங்கு, ஔதவிடு, சுடரிடு, பளபளப்புறு, பிறங்குறு.
Sparkless
a. அனல் வகையில் பொறியற்ற, பிறங்கொளியில்லாத.
Sparklet
n. சிறுபொறி, வளியூட்டும்பொறி, வளியூட்டு நீர்நிலயங்களிற் பயன்படுத்தப்படும் கரிய உயிரகியூட்டும் துணைக்கருவித் தொகுதிச் சிறுபொறி.
Sparkling
a. மின்னுகிற, சுடர்விடுகிற.
Sparks
n. pl. தந்தியில்லாக் கம்பி இயக்குபவர்.