English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Space-travel
n. விண்வௌதப் பயணம்.
Space-writer
n. செய்தித்தாள்களில் வெற்றிடம் நிரப்ப எழுதுவோர்.
Space-writing
n. செய்தித்தாளிகறில் வெற்றிடம் நிரப்ப எழுதி வைத்துக்கொள்ளுதல்.
Spacing
n. இடையிடம் விடல்.
Spacious
a. பரந்த,இடமகன்ற, போதிய இட அகலமுடைய, தாராள வாய்ப்புடைய, வள நிறைவுடைய.
Spaciousness
n. இட அகற்சி, பரப்பகலம், போதிய பரப்புடைமை, இடவாய்ப்பு வளம், இடவாய்ப்பு நிறைவு.
Spade
n. மண்வாரி, மண்வெட்டி, மண்வாரி அலகு வெட்டாழம், மண்வாரி போன்ற கருவி, கொழுவெட்டு, திமிங்கிலக் கொழுப்பை வெட்டி எடுக்கும் வெட்டுக்கத்தி, சீட்டு வகையில் ஒன்று கருகிற மண்வாரிச்சின்னச் சீட்டு,(வினை.) மண்வாரியால் வெட்டு, கொழுவெட்டால் திமிங்கிலக் கொழுப்பைவெட்டியெடு.
Spadeful
n. வாரளவு, மண்வெட்டியால் வெட்டி எடுக்கப்படும் அளவு.
Spade-work
n. முன்னொருக்க வேலை, முன்வெட்டு வேலை.
Spadiceous, a.
பாளை சார்ந்த, பாளை போன்ற, பாளையினையுடைய.
Spadicose
a. பாளை சார்ந்த, பாளை போன்ற.
Spadille
n. சீட்டாட்ட வகையில் உயர் சீட்டு.
Spadix
n. (தாவ.) பாளை, உறையுள் பொதிந்த மலர்க்கொத்துக்குலை.
Spado
n. (சட்.) மலடன், மலட்டு விலங்கு.
SpaghettI
n. திரி இடியப்ப வகை.
Spahee, spahi
முற்காலத் துருக்கு நாட்டுக் குதிரைப்படைவீரன், பிரஞ்சு அல்ஜீரிய குதிரை வீரன்.
Spake
v. செய்யுள் வழக்கில் ஸ்பீக் என்பதன் இறந்தகாலம்.
Spalder
n. நொறுக்காளர், சுரங்க வேலையில் தாதுப்பொருள்களை வகைப்படுத்தும் பொருட்டுச் சிம்புகளாக உடைப்பவர்.
Spall
n. சிம்பு, சிராய், (வினை.) சிம்புகளாக நொறுக்கு, சுரங்கவேலைவகையில் தாதுப்பொருள்களை வகைப்படுத்துவதற்காகச் சிம்புகளாக உடை.
Spalpeen
n. வீரன், அயர்லாந்து நாட்டு வழக்கில் கீழ்மகன்.