English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sphacelate
v. தசையழுகலுறு, தசையழுகச் செய்.
Sphacelation
n. தசையழுகல், தசையெலும்பு அழிசிதைவு.
Sphagnum
n. சிப்பக்கட்டுப் பாசி வகை.
Sphenogram
n. ஆப்புவடிவ எழுத்துமுறை.
Sphenographic
a. ஆப்புவடிவ எழுத்துமுறை சார்ந்த.
Sphenoid
n. ஆப்பு எலும்பு, மண்டையோட்டு அடிப்புறக் கூட்டெலும்பு, (பெ.) (உள்.) ஆப்புவடிவான.
Sphere
n. கோளம், உருளை, உருண்டை, பந்து வடிவப் பொருள், (செய்.) வானகோளம், விசும்புருளை, குவலயம், நிலவுலகக் கோளம், நிலவுலகம், முற்காலக் கருத்துப்படி வான்கோளங்கள் பதிவுறப்பெற்ற சுழல் வானகோளங்களில் ஒன்று, செயற்களம், செயலெல்லை, செல்வாக்கெல்லை, இயற்கைச்சூழல், சமூகப்படிநிலை, படி, இடம், துறை, நிலை, (வினை.) கோளத்தினுள் வைத்துப் போதி, கோளத்தால் சூழ்ப்பெறுவி, கோளவடிவாக்கு, (செய்.) வான் கோளமளாவி உயர்த்து.
Spheric
a. (செய்.) வான்கோளஞ் சார்ந்த, வானுலகத்திற்குரிய, திப்பிய, மேலான, உயரிய.
Spherical
a. கோள வடிவுடைய, உருண்டையான.
Spherically
adv. கோளவடிவாக, கோளமுறையில், கோளக்கணிப்பு முறைப்படி.
Sphericity
n. கோளத்தன்மை.
Spherics
n.pl. கோள நிலை வடிவியல்-கோணியல்-தொகுதி.
Spherodicity
n. நெட்டுருளைத் தன்மை.
Spherograph
n. கோள ஒற்றைக்கோண் படிமம், நேர் கோடு நிரைகோடுகளை ஒற்றைக்கோணில் வெட்டுவதாகக் காட்டி நிலவுலக கோளவடிவினைத் தளவட்டின் மீது படிவித்துக் காட்டும் நிலைப்படம், கோளக் கணிப்புப் படிவம், கோளக் கணிப்புகளுக்கு வழி செய்யும்படி ஒன்றன் மீது ஒன்று சுழலும்படியாக அமைந்து இருதளவட்டுக்களின் இணைப்பமைவு.
Spheroid
n. நெட்டுருளை, குத்தாயக் கோளம், நீள்வட்டச் சுழற்சி வடிவம்.
Spheroidal
a. நெட்டுருளை வடிவான, குத்தாயக் கோள வடிவான, நெட்டுருளை சார்ந்த, குத்தாயக் கோளஞ் சார்ந்த.
Spherometer
n. நுண்விட்டமானி.
Spherular
a. பரலுருவான, சிறுகோள வடிவான, பரலுருப் போன்ற.
Spherule
n. பரலுரு, சிறுகோளம், சிற்றுருளை, சிறுமணி உருளை.
Spherulite
n. மணிப்பரற் கூறு, பாறைவகைகளின் படிக உருளைக்கூறு.