English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spices
n. pl. நறுமணச் சரக்கு வகைகள், நறுமணச் சரக்கு.
Spiciness
n. உயிர்த்துடிப்பு, விறுவிறுப்பு, கவர்ச்சிக் கூறு, கார நறுமணச் சுவை.
Spick
a. நேர்த்தியான, புத்தருமை வாய்ந்த, துப்புரவுமிக்க, செப்பமிக்க, செவ்விதான.
Spicular
a. முட்கதிர் போன்ற, முட்கதிர் அடர்ந்த, முட்கம்பி சார்ந்த.
Spiculate
a. முட்கம்பி வடிவான, முட்கதிர்களையுடைய, முட்கம்பியையுடைய.
Spicule
n. முட்கம்பி, படிகச் சிம்பு, ஊசிமுள், முள்முனைப்பு, (தாவ.) குலைக்கதிர், (வில.) உடலின் கதிர்முட் பகுதி, கடற்பாசியின் கம்பிமுட் கூறு.
Spicy
a. கார நறுமணம் வாய்ந்த, நறுமணச் சுவைத்திறம் வாய்ந்த, நறுமணச் சுவையூட்டப்பட்ட, காரசாரமான, விறுவிறுப்பான, கவர்ச்சிக் கூறுடைய, துடிதுடிப்புடைய, உணர்ச்சி தூண்டுகிற, நேர்மை திறம்பிய, பகட்டான.
Spider
n. சிலந்தி, எட்டுக்காலி, சிலந்தியினத்தின் வகை, சிலந்திப் பேரினம், சிலந்தி போன்ற பொருள், இக்கா, குச்சு வண்டி.
Spider-catcher
n. நீள் அலகுப் பறவைவகை.
Spider-crab
n. நீள் மென்கால் நண்டுவகை.
Spider-line
n. சிலந்தி நுலிழை.
Spider-monkey
n. நெடுங்கால் அமெரிக்க குரங்குவகை.
Spider-wasp
n. குஞ்சுகளுக்காகச் சிலந்திப்பூச்சிகளைக் கூட்டிற் சேர்த்துவைக்குங் குளவிவகை.
Spidery
a. சிலந்திபோன்ற, சிலந்திப்பூச்சிகள் நிறைந்த, எழுத்துவகையில் நெடுநீள் மெல்வரைகளார்ந்த, சக்கரவகையில் கொடுவளைவான நெடுநீள ஆரங்களையுடைய, கைகால்கள் வகையில் வற்றி, ஒடுங்கி நெடுநீளமான.
Spiegeleisen
n. கன்மம் அடங்கிய வார்ப்பிரும்பு வகை.
Spiel
n. (இழி.) பேச்சு, கதை, சொற்சரடு, (வினை.) விரித்துப் பேசு, மேடையில் முழக்கமிடு, சொற்பொழிவாற்று, நுற்கண்டில் புரியவிழவிடு, சரடு விடு, வம்பள, கதையள, பேச்சுநீட்டு.
Spiflicate, spifflicate
v. (இழி.) நொறுக்கு, ஒழி, அழி, அடக்கு, மூளை, குழப்பு.
Spigot
n. முளை, மூடுகுமிழ்.
Spike
n. கதிர்முனை, கூர்முனை, முனைக்கதிர், இரும்புமுள், தண்டவாள ஆணி, தடித்த பெரிய ஆணி, நறுமணப் பூஞ்செடி வகை, (தாவ.) குலைக்கதிர், கதிர்க்குலையுடன் கூடிய சினை, கதிரிளங்கொப்பு, (பே-வ) மீவினை ஆங்கிலத் திருச்சபை மரபினர், (வினை.) தடித்த பெரிய இருப்பாணி கொண்டு இறுக்கு, இரும்புமுட்கள் அமைத்துக் கொடு, குழாய்ப்பொருத்து முனையினால் இணை, கூர்முனையினாற் குத்து, குத்தித் துளை, பீரங்கி வாயினை முளைகொண்டு அடைத்து மூடு, பயனற்றதாகச் செய்.
Spikenard
n. இலாமிச்சை, சடாமாஞ்சிப் பூண்டுவகை, இலாமிச்சைத் தைலம்.