English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Spinning-wheel
n. கைராட்டினம்.
Spinose
a. முள்ளார்ந்த, முள் நிறைந்த.
Spinosity
n. முள்ளார்வு, முள்நிறைந்த தன்மை.
Spinozism
n. அடிமூல ஒருமைக் கோட்பாடு, பல்லுயிரும் தன் பல்வேறுபாடாகக் கொண்டு அவற்றின் பரப்பும் நினைவுத் திறங்களும் தன் பண்புகளாகவுடைய ஓர் எல்லையிலாப் பொருளே இயலுலகின் மூலம் என்ற ஸ்பைனோசா (1632-16ஹ்ஹ்) என்னும் ஸ்பானிய யூத அறிஞரின் கொள்கை.
Spinster
n. முதுகன்னி, மணமாகாதவன்.
Spinthariscope
n. ஊடிழை கதிர்த்திரை, நீளலை மினுக்கந்தால் கதிரியக்க ஊடிழை மின்துகள் பாய்வு விளக்கிக்காட்டும் துத்தகந்தகித் தகட்டமைவு,
Spinule
n. (தாவ.) சிறுமுள், (வில.) நுண் முதுகெலும்பு.
Spiny
a. முட்கள் நிறைந்த, சுணையுள்ள, மலைக்கச் செய்கிற, தொல்லை கொடுக்கிற, அலைக்கழிக்கிற.
Spiozist
n. அடிமூல ஒருமைக் கோட்பாட்டாளர், ஸ்பைனோசா என்ற ஸ்பானிய மெய்விளக்க அறிஞரைப் பின்பற்றுபவர்.
Spiracle
n. (வில.) விலங்குகள் மூச்சுவிடுவதற்கான தொளை, கடல் வாழுயிர் வகைகளின் ஊதுபுழை.
Spiraea
n. ரோசா இனச் செடிவகை.
Spiral
n. சுருள்வட்டம், திருகுசுருள், சுருள்வில், சிப்பி-சங்கு முதலியவற்றில் திருகு சுருளான வடிவமைவு, படிப்படியான ஏற்றம், படிப்படியான இறக்கம், (பெ.) திருகு சுருளான, மையத்திலிருந்து விலகிக்கொண்டே தொடர்ந்து சுற்றிச் செல்கிற, நீள் திருகான, ஆணியின் புரியைப் போல் புரிகருளான, (வினை.) திருகு சுருளாகச் செல், திருகு சுருளாக்கு.
Spirally
adv. திருகுசுருள் வடிவாக, புரிசுருள் வடிவாக.
Spirant
n. (ஒலி.) மூச்சு உராய்வொலி.
Spiration
n. மூச்சுவிடல்.
Spire
-1 n. தூபி முனை, கோபுரக் கூம்பு, மர உச்சி, கிளைக்குமிடத்துக்கு மேலுள்ள நேரடி மரப்பகுதி, புல்தாள், புல்லின் நுனிக்கூம்பு, தளிர்முனை, தளிர்க்காம்பு, நீள்காம்பு, பூங்கொத்து,குவட்டுரு, கூம்புவடிவப் பொருள், கொடுமுடி, சிகரம், கூர்முனை, கூர்முளை, (வினை.) தளிர்த்
Spire
-2 n. திருகு சுருள், கயிற்றுச் சுருளை, கம்பிச் சுருளை, சுருளின் ஒரு திருகுவட்டம்.
Spired
a. கூம்பு முனையுடைய, கூம்புமுனை பொருத்தப்பட்ட, கூம்பு வடிவான, கூர்முனை வாய்ந்த, தளிர்க்கொத்துடைய, பூங்கொத்துடைய, புல்வயல் நிமிர்தாளுடைய, தளிர்த்த.
Spirillum
n. திருகுசுருள் வடிவ நுண்ணுயிரி, திருகுசுருள் வடிவ நுண்ணுயிரிகளின் தொகுதி.
Spirit
-1 n. மெய்க்கருத்து, மெய்பொருள், சாறு, சத்து, தெய்வஉரு, தெய்வதம், சிறுதெய்வம், மாய உரு, மாயத் தேவதை, கூளி, குறளி, திணைத்தெய்வம், சித்துரு, தெய்வத்திறம், தெய்வ தத்துவம், ஆவி உரு, ஆவிப் பொருள், காற்றலை, பரு உடல் சார்பற்ற நுண்ணுரு, உள்ளுரு, ஆன்மா, உயிர், உயி