English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Squeaker
n. கீச்சொலி எழுப்புகிறவர், மாடப்புறாக் குஞ்சு, காட்டிக்கொடுப்பவர், கீச்சொலி விளையாட்டுப் பொம்மை.
Squeal
n. குழந்தையின் கீச்சொலி, வீல்வீல் என்ற குழந்தைக் கதறல், குழந்தையின் மகிழ்ச்சிக் கூச்சல், பன்றியின் கிறீச்சொலி, (வினை.) குழந்தை வகையில் கீச்சொலியிடு, குழந்தை வகையில் வீலவீல் என்று கதறு, குழந்தை வகையில் மகிழ்ச்சியுடன் பேசு, (பே-வ) வரிவிதிப்பை எதிர்த்து வீறிட்டெழு, (பே-வ) கூட்டாளியைக் காட்டிக்கொடு.
Squealer
n. கீச்சிடுபவர், புறாக்குஞ்சு, கூட்டாளியைக் காட்டிக் கொடுப்பவர்.
Squeamish
a. குமட்டுகிற, கூர்சுவையுடைய, எதிர்பார்க்கிற.
Squeegee
n. (கப்.) தொய்வக விளிம்புள்ள ஈரம்புலர்த்து கருவி, (நி-ப) ஈரம் புலர்த்த தூரிகை, (நி-ப) ஈரம் புலர்த்தும் உருளைக்கருவி, (வினை.) (கப்.) தொய்வக விளிம்புள்ள கருவியினால் ஈரம் புலர்த்து, (நி-ப) துடைப்புத் தூரிகையால் ஈரம் போக்கு, புலர்த்துருளையால் ஈரந்துடை.
Squeeze
n. பிழிவு, நெரிப்பு, கசக்கீடு, பிசைவு, கூட்டநெருக்கடி, ஆள்நெருக்கம், ஈரத்தாள் அல்லது மெழுகில் எடுக்கப்படும் அழுத்து தடம், வரிப்பிழிவு, வலிந்து பெறும் வரிப்பணம், சட்டவரம்பிகந்த தரகு, கொள்முதல் சரக்கில்வேலையாட்கள் வலிந்து பறிக்கும் நுற்று விழுக்காடு, (வினை.) பிழி, கசக்கு, பிசை, அழுத்திப்படி, திணித்து உட்செலுத்து, வலிந்து நுழைவி, நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டுசெல், வலிந்து பறித்து அலைக்கழிக்கச்செய், கசக்கிப்பெறு, கட்டாயப்படுத்திச் செயலாற்று, வந்தமாகச் செய்வி, அச்சுறுத்திப் பெறு, விடாது கெஞ்சிப்பெறு, மிக முயன்று வருவி, நாணயம் முதலியவற்றின் பொறிப்படையாளமெடு.
Squeezer
n. பிழிபவர், கசக்குபவர், வலிந்து பணம் பறிப்பவர், வந்தமாகச் செய்விப்பவர், பிழிவுகருவி, பிழிவுஇய்நதிரம், பிழியும் இயந்திரப்பகுதி, உருக்கிரும்புக்குழம்பில் குமிழிபோக்கும் இயந்திரக்கருவி.
Squelch
n. (பே-வ) மிதித்துத் துவைப்பு, தரைமட்ட அரைப்பு, நுண் சேற்று ஒலி, சளக்கொலி, தொப்பென மோதுதல், உருவிலாக் குழம்பு, மொத்தை எதிர்ப்புரை, (வினை.) மிதித்துத் துவை, உதைத்துத் தரை மட்டமாக அரை, காலால் தேய்த்துக் குழம்பாக்கு, சப்பையாக அரை, ஒழித்துவிடு, திகைக்க வை, வாயடைத்துவிடச் செய்.
Squib
n. கையெறி வாணவெடி, கையெறி சுரிவாண வெடி, வசைப்பாடல், வெடிமருந்துக் குழல், (வினை.) வசைப்பாடல் இயற்று.
Squid
-1 n. தூண்டில் இரையாகப் பயன்படும் சிப்பிமீன் வகை, செயற்கைத் தூண்டில் இரை, (வினை.) சிப்பிமீன் தூண்டில் இரைவைத்து மீன்பிடி, இரையிட்டு மீன்பிடி.
Squid
-2 n. நீர்முழ்கியினைத் தாக்கும் பீரங்கி.
Squiffy
a. மட்டாகக் குடித்த.
Squill
n. சிறுநீர் தூண்டும் மருந்தாகவும் பேதி மருந்தாகவும் பயன்படும் அல்லியினப் பூண்டு, அல்லியினச் செடிவகை.
Squill-fish
n. நத்தை வகை, மேல்தோடுடைய உயிரின வகை.
Squinch
n. (க-க) உள் வளைவுக் கட்டுமானம்.
Squint
n. ஒரக்கணிப்புக் கண், பக்கவாட்டுப் பார்வை, கள்ளப் பார்வை, மனச்சாய்வு, விருப்பச் சாய்வு, சார்வு நாட்டம், திருக்கோயிற் சுவரில் சாய்வுப் புழைவாய், (பே-வ) நொடிப்பார்வை, கணக்காட்சி, (பெ.) ஒருக்கணித்த பார்வையுடைய, (வினை.) சிறக்கணித்துப் பார்.
Squint-eyed
a. ஒருக்கணிப்புப் பார்வையுடைய.
Squire
n. மாவட்டத் தலைமை நிலக்கிழார், வீரத் திருத்தகையின் துணையாள், வீரத் திருநம்பி, வீரத்திருத்தகையாகும் அவாவுடன் வீரத்திருத்தத் துணைவானகச் செல்லும் துணைவன், வனிதையர் வழிகாட்டீ, (வினை.) வழித்துணை செல்.
Squirearch
n. நிலக்கிழார் ஆட்சிவகுப்பைச் சேர்ந்தவர்.
Squirearchal
a. நிலக்கிழார் ஆட்சி சார்ந்த.