English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stabilizer
n. நிலைப்படுத்துபவர், நிலைப்படுத்துவது, விமானச் சமநிலையூட்டும் மிகைத்தளம், விமானச் சமநிலையமைவு, கப்பல் நிலைப்படுத்தும் அமைவு, வேதி மாறுபாடு தடுக்கும் கூறு.
Stable
-1 n. தொழுவம், பந்தயக்குதிரைத் தொகுதி, பரிமா நிறுவன அமைப்பு, (வினை.) கொட்டிலிற் குதிரைகளைக் கட்டு, கொட்டிலில் இருப்பது போலக் கட்டுண்டு தங்கியிரு.
Stable
-2 a. நிலையான, உறுதியான, நிலையாக நிறுவப்பட்ட, எளிதில் அசைக்கமுடியாத, அழிக்க வொண்ணாத, திடமான, உலைவிலாத.
Stable-companion
n. ஒரே கொட்டிற்குதிரை, பள்ளித் தோழர்.
Stable-room
n. கொட்டிலில் இடம்.
Stables
n. pl. (படை.) இலாயப் பணித்துறை.
Stabling
n. இலாயத் தங்கல்வசதி.
Stablish
v. நிறுவு, ஊன்றுவி, நிலைநிறுத்து, அமை.
Staccato
a. (இசை.) விட்டுவிட்டுப் பாடவேண்டிய, (வினையடை.) திடீர் விரைதுடிப்புடன்.
Stack
n. வைக்கோற்போர், உலர்புல் போர், மோடார்ந்த கூலக்குவியல், தானியக் கதிர்க்கூம்பு, சுழல் துப்பாக்கிக் குவட்டடுக்கு, கழி அடுக்குக் குவியல், கூப்பு, 10க்ஷ் கன அடிக்கட்டை அளவு, புகைப்போக்கிகளின் கும்பு, கப்பல் அல்லது ஊர்திவகையில் புகைக்கூம்பு, ஸ்காத்லாந்து நாட்டு வழக்கிலும் ஆர்க்னித்தீவுகள் வழக்கிலும் கடற்கரையோரக் கொடும்பாறை, (வினை.) போராகக் குவி, கூம்பாக எழுப்பு, குவியலாகக் குவித்து வை, விமான தளத்தில் விமானக் கட்டளைவகையில் பல்வேறான மட்டங்களில் பறக்கும்படி கூறு.
Stack-funnel
n. வைக்குவைப் புனல்.
Staddle
n. பற்றுக்கோல், கட்டுத்தறி.
Stadium
n. பண்டை கிரேக்க வழக்கில் 202 கெச நீளமுள்ள நீட்டளவை, பண்டைய கிரேக்க வழக்கில் ஓட்டப் பந்தய வௌத, விளையாட்டரங்கம், பயிற்சிவிளையாட்டுக் களரி, (மரு.) நோயின் பருவம்.
Stadium
ஆடக அரங்கம், விளையாட்டரங்கம்
Stadtholder
n. (வர.) ஆளுநர், நெதர்லாந்து வழக்கில் மண்டல ஆட்சித் தலைவர், (வர.) நெதர்லாந்து வழக்கில் மன்னர் ஆட்பேர், (வர.) நெதர்லாந்துக் குடியரசின் ஒன்றிய மாகாணங்களில் தலைமைக் குற்ற நடுவர், (வர.) டச்சுக் குடியரசின் தலைவர்.
Staff
-1 n. கழி, கோல், நீள்முளை, நெடுங்கழி, வடி, கைப்பிரம்பு, கைத்தடி, ஊன்றுகோல், ஆதாரம், கொடிக்கம்பம், கொடி இணைவரிச்சட்டம், கைத்தண்டம், பணிச்சின்னம், ஆட்சிக்கோல், ஆட்சிச் சின்னம், நில அளவைக்கோல், கடல்மட்ட மானி, இருப்பூர்தி தனிநெறி செல்வதற்கான இசைவாணைச் சின்னமா
Staff
-2 n. (படை.) பணித்துணைவர் குழாம், பணிமனைகளில் மேலாளரின் துணை அலுவலர் குழாம், (வினை.) நிறுவன அலுவலர் குழாம் அமைவி.
Staff
-3 n. (இசை.) இசைமான வரிவடிவுப்பதியில் விசை வரிச் சட்டம்.