English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Staging
n. நாடக மேடையற்றம், நாடகமேடை நடிப்பு, வண்டி அஞ்சல் செய்தல், சாரக்கட்டு, கட்டிடத்திற்கான சாரங்கட்டுதல்.
Stagirite
n. ஸ்டாகிரா என்னும் பண்டை கிரேக்க நகரினர், பண்டை கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில்.
Stagnant
a. நீரொழுக்கற்ற, ஓடாத, பாயாத, அசையாது நிற்கிற, கிளர்ச்சியற்ற, மந்தமாக, செயலற்ற, சோம்பியுள்ள, கெட்டுப்போன, நலங்கெட்ட.
Stagnate
v. நீர்மவகையில் ஓட்டமற்றிரு, பாயாது தேங்கிநில், செயலற்று இயங்கு, வாழ்க்கை வகையில் தேக்கமடைந்திரு, மாறுபாடில்லாத சோர்வுற்றிரு, உள்ளத்தின் வகையில் சுறுசுறுப்பற்றிரு, சோம்பியிரு, ஆள்வகையில் கிளர்ச்சியற்றிரு, தொழில்வகையில் மந்தமாயிரு.
Stagnicolous
a. சதுப்புநிலத்தில் வாழ்கிற, தேங்கல்நீரில் வளர்கிற.
Stag-party
n. ஆடூஉக்குழாம், ஆடவர் மட்டும் கொண்ட குழு.
Stagy
a. நாடகப் பாணியிலுள்ள, நாடகப் பண்புமிக்க, பகட்டு நடிப்பான, புறப்பகட்டான.
Staid
a. எழுச்சியற்ற, கிளர்ச்சியற்ற, ஒரு நிலைப்பட்ட.
Stain
n. கறை, அழுக்கு, நிறவேறுபாடு, நிறவேறுபாட்டுத்தடம், கறை உண்டாக்கும் பொருள், சாயப்பொருள், குற்றம், குறைபாடு, (வினை.) கறைப்படுத்து, அழுக்காக்கு, மாசுபடுத்து, நிறங்கெடு, நிறம்மாறுபடுத்த, நிறம் மங்கலாக்கு, சிறிதளவு வௌதறிய சாயலுட்டு, புதுநிறமூட்டு, புகழுக்குக் களங்கம் விளைவி, பெயருக்குப் பழி ஏற்று, மரம்-கண்ணாடி முதலியவற்றிற்குப் புதுவண்ணச் சாயல்கொடு, உருப்பெருக்காடியில் பார்க்கும் பொருளுக்கச் சாயமேற்று, சுவர் ஒட்டுத்தாளுக்கு நிறப்படிவமேற்று, (வேதி.) உட்படிவம் வௌதத் தெரியும்படி கூறுகளின் நிறம் வேறுபடுத்திக் காட்டு.
Stainless
a. மாசற்ற, கறையற்ற, களங்கமற்ற, குறையற்ற, குற்றத்தடமில்லாத, துருவற்ற, எஃகுவகையில் நிறமியக்கலப்பால் துருவுக்கும் அரிப்புக்கும் இடமளிக்காத.
Stainless steel
துருவுறா எஃகிரும்பு
Stair
n. ஏணிப்படி, படிக்கட்டு.
Stair-carpet
n. படிக்கட்டு விரிப்பு.
Stair-case
n. படிக்கட்டு.
Staired
a. படிக்கட்டினையுடைய, படிக்கட்டுப் போல் வகைப்படுத்திய.
Stairfoot
n. படிக்கட்டுகளின் அடியில் இருக்கும் சமதளப்பரப்பு.
Stairhead
n. படிக்கட்டு மேடை, படிக்கட்டு உச்சியில் இருக்கும் சமதளமான இடம்.
Stair-rod
n. படிச்சலாகை, படிதோறும் படிக்கட்டு விரிப்பை அமைவுறப் பொருந்தச் செய்யும்கழி.
Stairs
n. pl. படிக்கட்டு, ஏணிப்படிகளின் தொகுதி.
Stair-tower, stair-turret
n. சுழற்படிக்கட்டுக் கூண்டு.