English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stalking-horse
n. வேட்டையாளர் பின்மறைந்து செல்லப்பெறும் குதிரை நொண்டிச்சாக்கு, போலிக்காரணக் குறிப்பு.
Stall
-1 n. இலாயத்தின் தனிக்கொட்டில், தொழுவத்தின் தனி அடைப்பு, சந்தையின் தனி விற்பனைச் சாவடி, கடைக்கட்டிடத்தின் விற்பனைக் காட்சியரங்கு, கடையின் காட்சிப் பொருள் அடுக்குமேடை, திருக்கோயிற் பாடகர் பந்தியில் திருச்சபைச் சமயகுரு மாடம், சமயகுரு பதவி, சமயகுரு பதவிக்குர
Stall
-2 n. தட்டுமாறி, திருடன் தப்பியோட வழிசெய்யும் அவனது கூட்டாளி, (வினை.) சொற்சிலம்பமாடு, வாதமுறை உரையாடல், பயில், முட்டுக்கட்டையிடு, தாக்குக்காட்டு, தடைதாமதமுறை, இடைஞ்சல்கள் உண்டாக்கு, தடுப்பு முறைகள் கையாளு.
Stallage
n. சந்தையில் விற்பனைச் சாவடியிடம், அங்காடிவிற்பனைச் சாவடிக் கட்டணம், சந்தையில் விற்பனைச் சாவடி இடவுரிமை, பொருட்காட்சிக் கடைக் கட்டணம்.
Stalled
a. விலங்கு வகையில் கொட்டிலில் வைக்கப்பட்ட, கொழுக்க வைக்கப்பட்ட.
Stallfeed
v. தனிக்கொட்டிலில் வைத்துக் கொழுக்கவை.
Stalling
n. தொழுவ அடைப்பு.
Stallinger
n. சந்தைச் சாவடியாளர்.
Stalwart
n. வல்லவர், கட்சியின் வன் கடைப்பிடியாளர், (பெ.) உரமிக்க, கட்டுறுதிவாய்ந்த, வீரமிக்க, மனவுரம்வாய்ந்த, உலையா உறுதியுடைய, வன் கடைப்பிடி வாய்ந்த.
Stamen
n. மலரிழை, மலரின் ஆணுறுப்பு.
Stamina
n. கருவகக்கூறு, அடிப்படைக்கூறு, உள்ளுரம், தாங்கும் உறுதி, அடிவேலு.
Staminal
a. மலரிழை சார்ந்த, பூவிழைக்குரிய, பண்புரஞ் சார்ந்த.
Staminate
a. மலரிழைகளையுடைய, பூவிழைவாய்ந்த, மலரிழைமட்டுமேயுடைய, சூலகம் இல்லாத.
Stamineal
a. பூவிழைகளையுடைய, பூவிழைகள் அடங்கிய.
Staminiferous
a. மலரிழைகளையுடைய.
Staminode, staminodium
n. பொலிவற்ற பூவிழை, மலட்டுமலரிழை.
Stammer
n. கொன்னல், திக்குவாய்ப் பண்பு, (வினை.) கொன்னு, திக்கிப் பேசு, தெற்றிப் பேசு.
Stammerer
n. திக்குவாயர், தெற்றுவாயர்.