English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stairway
n. படிக்கட்டு வழி, படிக்கட்டு.
Staith, staithe
கப்பல்களில் ஏற்றுவதற்கான வாய்ப்பு வசதிகளையுடைய கரையோர நிலக்கரிக் கிடங்கு.
Stake
n. கூர்ச்சு, மரமுளை, வேலிநடுகழி, எல்லைக்குற்றி, அடையாளக் கம்பம், கொழுகொம்பு, ஆதாரக் கழி, கட்டை வண்டிச் சுற்றோராக் குத்துக்கழி, கட்டுத்தறி, எரிப்புத் தண்டக்கம்பம், எரிப்புத்தண்டம், ஈயவேலையாளின் பட்டடைக்கல், ஓட்டப் பந்தயத் தொகை, பணயம், பந்தயப்பொருள், துணிவீடுபாட்டுப் பொருள், ஆக்க அழிவுக்குத துணிந்து ஈடுபடுத்தும்பொருள், வேணவாப் பிணைப்பு, ஆக்க இழப்புகளில் உள்ள அக்கறை, பங்கீடுபாடு, போட்டிக் குறியிலக்கு, போராட்டக் குறியிலக்கு, முயற்சிக் குறியிலக்கு, சாவுக்குறி, உயிரிழந்தும் காத்தற்குரிய குறிக்கோள் தத்துவம், குறிக்கோள் பரிசு, ஆதாயநாட்டங்கட்குரிய ஒன்று, இடர் ஊசலாட்ட நிலை, (வினை.) முளையில் பிணை, மரமுளைகளைக் கொண்டு இறுக்கு, கொழுகொம்பினை ஆதரமாகக் கொடு, குத்துக்கழிகள் மூலம் காப்புறுதி செய், கழிகள் இணைவி, நடுகழிகளால் அடைப்புச் செய், குற்றிகள் கொண்டு எல்லைகுறி, கழுவில் ஏற்று, கழுமரத்தில் குத்தி ஊடுருவ வை, ஒட்டம் வை, பந்தயப்பொருளாக வை, துணிந்து ஈடுபடுத்து, துணிவு காட்டிப் பணயமாக வை.
Stake-boat
n. நெறிகுறிப் படகு, படகுப்பந்தயப் பாதைகுறியிட்டுக் காட்டுதற்காக நிறுத்தப்பட்டுள்ள படகு.
Stake-net
n. கழித்தொங்கல் வலை, மரமுளைகளில் தொங்கவிடப்படும் மீன்வலை.
Stakes
பணங்கட்டி ஆடும் பந்தயம், குதிரைப்பந்தயப் பணயம், குதிரைப்பந்தயம்.
Stalactiform
a. தொங்கூசிப்பாறை வடிவான.
Stalactite
n. தொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் மோட்டிலிருந்து தொங்கலாகக் கீழ்நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக்கரியகைப் பாறை.
Stalag
n. செர்மன் படைத்துறைச் சிறைக்கொட்டில், ஆணைபெறாப் பணியாளர்களுக்கும் பிறருக்கும் ஒதுக்கப்படும் படைத்துறைச் சிறைக்கூடாரம்.
Stalagmite
n. பொங்கூசிப் பாறை, கடலோரக் குகைகளில் பாறையின் கரைசல் துளி வீழ்வால் நிலத்தினின்று மேல் நோக்கி ஊசிவடிவில் வளரும் சுண்ணக் கரியகைப் பாறை.
Stalagmitic
a. பொங்கூசிப்பாறை வடிவான.
Stale
-1 a. மட்கிய, நாட்பட்ட, சலித்துவிட்ட, கட்டுக்குலைந்த, மலர்ச்சி இழந்த, (வினை.) புதுமையற்றதாக்கு, நலங்கெடுவி, சலிப்புண்டாக்கு.
Stale
-2 n. சிறுநீர், குதிரைச் சிறுநீர், (வினை.) சிறுநீர் கழி.
Stale
-3 n. பொறிப்புள், பிற பறவைகளை வலைப்படுத்த உதவும் பறவை, கையாளாக்கப்பட்டவர், கேலிக்கு இலக்கானவர்.
Stalemate
n. இக்கட்டு நிலை, காயடைப்பு நிலை, சதுரங்க ஆட்டவகையில் அரசுகாய் அடைபடாமலே காய்கள் அசைக்க இடமில்லாதிருக்கும் நிலை, (வினை.) இக்கட்டுநிலைப் படுத்து, சதுரங்க ஆட்டவகையில் காயடைப்பு நிலைக்கு உட்படுத்து.
Stalinism
n. ருசிய பொதுவுடைமைச் சர்வாதிகாரியான ஸ்டாலின் (1க்ஷ்ஹ்ஹீ-1ஹீ53) என்பாரின் அரசியற்கோட்பாடு.
Stalk
-1 n. காம்பு, தண்டு, தாள், காலடி, தேறல் கிண்ணத்தின் அடித்தண்டு, தாறு, இயந்திர நடு உருளை, கருவிகளின் இடைத்தண்டு, நெடும் புகைபோக்கி, ஒடுங்கிய இடையிணைப்புக் கூறு, உறுப்பின் அடி இணைப்பாதாரம், (தாவ.) மரவினத்தின் நடுத்தண்டு, (உயி.) விலங்கின் தண்டுபோன்ற அமைவு, (
Stalk
-2 n. வீறாப்புநடை, ஓசைபடாப் பின்னொட்டு நடை, பதுங்கல் வேட்டையாட்டம், (வினை.) வீறாப்பு நடையிடு, பதுங்கிப் பின்பற்றிச் சென்று வேட்டையாடு, ஔதந்து மறைந்து சென்று வேட்டை விலங்கினைப் பின்பற்று.
Stalked
a. தண்டுடைய, தண்டுபோன்ற உறுப்புடைய, காம்புகொண்ட.
Stalk-eyed
a. நண்டினை ஒப்பத் தண்டுபோன்ற உறுப்பின் மீதமைந்த கண்களையுடைய.