English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Staff
-4 n. கட்டிடக் கட்டுமானத்திற்குரிய காரைக் கலவை.
Staff-sergeant
n. ஆணைபெறாத படைத்துறை உயர் அலுவலரின் பயிற்சி அதிகாரி.
Staff-surgeon
n. கடற்படை உயர்படி அறுவை மருத்துவர், மருத்துவமனையில் வேலைபார்க்கும் படைத்துறை மருத்துவர்.
Staff-tree
n. அமெரிக்க புதர்ச்செடி வகை.
Stag
n. கலைமான், ஆண்மான், காளைமாடு, முழுவளர்ச்சியுற்றபின் விதையடிக்கப்பட்ட காளை, பங்குமாற்றுக்களத்தில் உடனடியாக ஆதாய விற்பனை நோக்கத்துடன் புதுப்பங்கு கோருபவர், (இழி.) வகைதுறையற்ற இருப்புச் சரக்கு வணிகர்.
Stag-bettle
n. கொம்பன் வண்டு, கலைமான் கொம்பு போன்ற நிமிர் தாடையலகுடைய வண்டுவகை.
Stage
n. அரங்கு, நாடகமேடை, சாரமேடை, கொல்லத்து வேலைக்காரரின் கட்டுமானத் துணைச்சட்டம், பார்வைத்தட்டம், உருப்பெருக்காடியில் பார்க்கப்படும் பொருள் வைக்குந்தட்டு, நாடகம், நாடகக்காட்சி, நடிப்புக்கலை, நடிப்புத்தொழில், படிநிலை, வளர்ச்சியில் எய்தியுள்ள பருவம், முன்னேற்றப்படி, வரிசை அடுக்கு, வேலைப்படி, செயற்கூறு, செயற்களம், செயலரங்கம், துறை, வழிக்கட்டம், உந்தூர்தித்தொலைவுக் கூறு, நிறுத்து நிலை, உந்தூர்தி நிறுத்துமிடம், அஞ்சல்வண்டி, படிமுறைப் பயணவண்டி, (மண்.) மண்ணுழிப்பிரிவுக் கூறு, (வினை.) நாடகமாகக் காட்டு, மேடையில் நடித்துக்காட்டு, நாடகக் காட்சி போல் நடைமுறைப் படுத்திக் காட்டு, நாடகப்பாணியமை, நாடக வகையில் மேடைக்காட்சிக்குப் பொருத்தமாயமை.
Stage-coach
n. அஞ்சல்முறை வண்டி, இடையிடையே பயணக்கட்டங்களில் மாற்றுக்குதிரை வசதி ஏற்பாடுகளுடன் செல்லும் வண்டி.
Stage-coachman
n. அஞ்சல் வண்டி வலவர்.
Stagecraft
n. நாடகமேடைக் கலை.
Stage-struck
a. மேடைத் திணறலுடைய.
Stag-evil
n. குதிரைகளின் வாய்ப்பூட்டு நோய்.
Staggard
n. நான்காண்டு நிறைந்த கலைமான்.
Stagger
n. தள்ளாட்டம், தடுமாற்றம், தயக்கம், கருத்து ஊசலாட்டம், (இயந்.) விமான முதலிய கட்டுமான வகையில் முந்துறு தளநீட்டம், தளக்கவிவு, தளத் திருகுமறுகீடு, (வினை.) தள்ளாடு, தடுமாறு, நடையின் போது தலைக்கிறக்கமுறு, தயங்கு, கருத்தில் ஊசலாடு, தள்ளாடுவி, தடுமாறுவி, தலைசுற்றுவி, தயக்கமுறுவி, ஆட்டங்கொடுக்கச் செய், ஏறுமாறாக அமைவி, வண்டிச்சக்கர ஆரைகளை மாறி மாறி வலமிடம் திருப்பியமை, நாட்பட்டியில் ஒய்வுநாள் வேலை நேரங்களை மாறுபடக் குறி.
Staggerer
n. தள்ளாடுபவர், தள்ளாடுபவது, தடுமாறுவிப்பவர், தடுமாறுவிப்பது, தயங்குபவர், மனவுறுதி இழக்கப்பண்ணும் விவாதம், ஒழுங்கு குலைக்கும் நிகழ்ச்சி, இடையிட்டுத் தடைப்படுத்தும நிகழ்ச்சி, தடுமாற்ற நிகழ்ச்சி.
Staggers
n. pl. தலைமயக்கம், குதிரை-கால்நடைகளின் மூளை-தண்டுவட நோய்வகை.
Stag-horn
n. சிதல் விதை உறைகள் கொண்ட பாசி வகை, பவளக்கொடி வகை.
Staghorn fern
n. கலைமான் கொம்புபோன்ற இலைகளையுடைய சூரல்வகை.
Staghound
n. பெரு வேட்டைநாய், மான்வேட்டை நாய்.