English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stand-in
n. பகர ஆள், ஆட்பேர்.
Standing
n. நிற்றல், நிலை, மதப்பீடு, புகழ், நிலைமை, தகுதி, காலாநீட்சி, கால வரையறை, (பெ.) நின்று கொண்டிருக்கிற, நிலையான, நிலைபெற்றிருக்கிற, நிலவரமான, அப்போதைக்குச் செய்யப்பெறாத.
Standing-room
n. நிற்க இடம்.
Stand-off
n. இடைநிலையாளர், காற்பந்தாட்டத்தில் முன்னணிக் கோடிக்கும் பின்னணிக் கோடிக்கும் இடை நிற்பவர்.
Stand-offish
a. தனித்து ஒதுங்கி நிற்கிற, ஒதுங்கிநிற்கும் போக்குடைய, கலகலப்பாகப் பழகாத.
Standpat
v. சீட்டு உருவாது ஆடு, கொண்ட கொள்கையே உறுதியாகக் கடைப்பிடித்திரு, விட்டுக்கொடுப்பற்றுப்பிடி முரண்டாயிரு.
Stand-patter
n. உறுதியாக நிற்பவர், கொண்ட கொள்கைவிடாதவர், அரசியற் கடும் பிற்போக்காளர், அரசயில் மேடைப் பிடியாளர், மேடையிற் பேசப்படும் கொள்கைகளின்படி நடப்பவர், காப்புவரிக்கட்சி விதிப் பிடிவிடாதவர்.
Stand-pipe
n. நிலைகுத்துக் குழாய்.
Standpoint
n. நோக்குநிலை, நோக்குதிசை.
Stand-rest
n. சாய்கோக்காலி, நிலைச்சட்டத்தில் நிற்பவரைத் தாங்கும் ஓவியரின் சரிவு முகட்டுக் கோக்காலி.
Standstill
n. முழுநிலை நிறுத்தம், அசையாநிலை, இயங்காநிலை, இயங்கமுடியா நிலை, (பெ.) இயங்காத, அசையாத, நிலை கட்டமான, இயக்கங்கைவிட்ட, இயக்கந் தடை செய்யப்பட்ட.
Stand-up
a. நிமிர்வான, கழுத்துப்பட்டி வகையில் செங்குத்தாக நிற்கிற, சண்டை வகையில் வினையார்ந்த, மனமார்ந்த, விட்டுக்கொடுப்பு எண்ணமற்ற.
Stanhope
n. திறந்த இருசக்கர வண்டி, திறந்த நான்கு சக்கர வண்டி.
Stanhope lens
n. முரண் குவிவாடி, இருபுறமும் வேறு வேறு முரணான குவிவுகளையுடைய கண்ணாடிச்சில்லு.
Stanhope press
n. ஸ்டானஹோப் பெருமகனார் கண்டு நிறுவிய அச்சக மாதிரி.
Staniel
n. சிறு வல்லுறு வகை.
Stank
v. 'ஸ்டிங்க்' என்பதன் இறந்த கால வடிவங்களில் ஒன்று.
Stannary
n. வௌளீயச் சுரங்கம், வௌளீயச்சுரங்கமுள்ள மாவட்டம்.