English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Stannate
n. ஈயத்திராவக உப்பு.
Stannic
a. வௌளீயஞ் சார்ந்த, மீ எடைகிற வௌளீயஞ்சார்ந்த, நாலிணைதிற வௌளீயத்துக்குரிய.
Stanniferous
a. வௌளீயம் அடங்கிய.
Stannous
a. ஈரிணை திற வௌளீயஞ் சார்ந்த.
Stanza
n. செய்யுட் பத்தி, அடிவரையறைச் செய்யும், கிரேக்க இலத்தீன் மொழிகள் வகையில் நாலடிப்பாட்டு.
Stanzad, stanzaed
அடிவரையறைப்பாக்களால் யாக்கப் பெற்ற, அடிவவரயறைப் பா அமைப்புற்ற.
Stanzaic
a. அடிவரையறைச் செய்யுள் சார்ந்த.
Staple
-1 n. கொண்டி, நாதாங்கி, தாழ்செருகுகுழை, புற்குழல், துளை இசைக்கருவியின் புல்வாய்களை உள்ளடக்குங்குழல், தைப்புமுள், கம்பித்ததையலில் வழங்கும் வளைமுள் இறுக்கி, (வினை.) கொண்டியிடு, கொண்டியிட்டிறுக்கு, கொண்டியிட்டடை, தாழிடு, தாழிட்டு அடை, தைப்பு முள்ளிட்டு, தைத்
Staple
-2 n. முக்கிய வாணிகப் பொருள், மூலப்பொருள், ஆக்கப் பொருளுக்கு மூலமான அடிப்படைச் சரக்கு, இழை, துய், இழைப் பண்பு, இழைத் தரம், (பெ.) முக்கியமான, அடிமூலமான, (வினை.) தரப்படி வகைப்படுத்து.
Stapler
-1 n. முக்கிய பொருள் வணிகர், கம்பளியைத் தரப்படுத்தி வாணிகஞ் செய்பவர்.
Stapler
-2 n. தாள் தைப்பு முட்கருவி.
Stapling-machine
n. தாள் தைப்பு முட்கருவி.
Star
-1 n. விண்மீன், வான்வௌளி, வான்வௌதக் கோளம், நட்சத்திரம், ஐம்முனை வடிவப்பொருள், உடுவடிவப் பதக்கம், உடுவடிவ விருதுச்சின்னம், உடுக்குறி, விலங்கின் சுட்டி, குதிரை முக வெண்சுட்டி, பல்தெருச்சந்தி, சேணிடப்பொருள், அரும்பொருள், ஒண்பொருள், பற்றார்வத்துக்குரியவர், ப
Star hotel
உடுவிடுதி, நட்சத்திர உணவகம்
Star-apple
n. மேற்கிந்தியக் கனிமர வகை, மேற்கிந்தியக் கனிவகை.
Star-blasting
n. ஆட்சிக்கோள்களின் நச்சுப்பலன்.
Starboard
n. (கப்.) வலப்பக்கம், கப்பலில் முன்னோக்கியுள்ளவரது வலதுகைப்புறம், (வினை.) கப்பலின் பயின்கட்டையை வலப்பறமாகத் திருப்பு, பயின்கட்டையை வலப்புறமாகத் திருப்பி வை.
Star-bright
a. விண்மீன் போலச் சுடர்வீசுகிற.
Star-catalogue
n. உடுப்பட்டி, விண்மீன்கள் பெயர் முதலிய விவரங்களடங்கிய பட்டியல்.