English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Staringly
adv. முனைப்பாக.
Star-jelly
n. களிப்பாசி, குழம்பு போன்ற பசைப்பண்புடைய இழைத்துய்கள் பரப்பும் பசுநீலப் பாசிவகை.
Stark
a. விறைப்பான, முறைப்பான, (செய்.) வலிமையான, உறுதியான, விடாப்பிடியான, கலப்பற்ற, தனி நிலையான, புற அணியற்ற, முழுதளவான, மறைவு பொதிவற்ற, (வினையடை.) முட்டமுழுக்க, முற்றிலும்.
Starless
a. விண்மீன் அற்ற.
Starlet
n. சிறுதிற விண்மீன்.
Starlight
n. விண்மீன் ஔத, (பெ.) விண்மீன்களால் ஔத தரப்பெற்ற, விண்மீன் ஔத பரவிய.
Starlike
a. விண்மீன் ஒத்த.
Starling
-1 n. போலி செய்யும் ஆற்றலுடைய பூசையினப் பறவை வகை.
Starling
-2 n. திண்டுவரி, பாலத்தின் திண்டைச் சுற்றிப் பாதுகாப்பிற்காக இடும் பெருந்தூண் தொகுதி.
Starlit
a. விண்மீன் வௌதச்சங் கொண்ட.
Starry
a. விண்மீன் ஆர்ந்த, உடுவுருக்களால் அணி ஒப்பனை செய்யப்பட்ட, உடுக்களடங்கிய, உடுக்களிலிருந்து வருகிற, விண்மீன்கள் போன்ற, விண்மீன்கள் போன்று ஔதருகிற.
Starry-eyed
a. கனவியலாளரான, கற்பனையுலகிலே திரிகிற.
Stars
n. pl. யோகம், நல வாய்ப்பு.
Star-shell
n. ஔத வெடிப்புக்குண்டு, விண்ணில் வெடித்து ஔதயால் எதிரி இருப்பிடங் காட்டும் வெடிகுண்டு.
Star-spangled
a. உடு உருக்களால் அணி செய்யப்பட்ட.
Star-stone
n. நீல மணிக்கல் வகை.
Star-stream
n. விண்மீனோட்டம், உடுமண்டலத்தின் இருபுடைபெயர் வியக்கக் குழுக்களில் ஒன்று.
Start
n. திடுக்குறவு, திடீர் அதிர்வெறிவு, திடீர் இயலதிர்வு, தன்னையறியாமலே திடுமென ஏற்படும் அதிர்ச்சி, திடீர் வெட்டசைவு, திடீர் வியப்பதிர்ச்சி, திடீர் நடுக்குறவு, எதிர்பாரா நடுக்க உணர்வு, திடீர்ப்பீற்று, திடீர் வலி, திடீ எழுச்சி, விட்டியங்குநிலை, இடைவிட்டெழும் சிறுதிற அசைவியக்கம், விட்டெழுச்சி, இடைவிட்டெழும் குறுமுயற்சி, தொடக்கம், தொடங்குதல், தொடக்குவிப்பு, தொடக்க இயக்குவிப்பு, புறப்படுகை, புறப்படுவிப்பு, தொடக்க ஊக்காதரவு, முதல்நிலை ஆதரவு, பந்தயத்தில் தொடக்க இடம், பந்தயத்தில் தொடக்க வேளை, பந்தயத்தில் தொடக்க நிலையான இடம்விடு சலுகை, பந்தயத்தில் தொடக்கத்திற்குரிய நேரச்சலுகை, (வினை.) திடுக்கிடு, திடீர் அதிர்வுறு, திடீர் வியப்பதிர்வுறு, திடுமெனப் புடைபெயர்வுறு, வெட்டுமரவகையில் திடீர்ப்பெயர்வுறு, இரிவுறு, வெட்டுமர வகையில் திடுமெனக் கீழமர்வுறு, பெயர்வுறச் செய், பெயர்ச்சியுணர், திடுமென எழு, மேலெழு, மனத்தில் எழு, காட்சியில் தோன்று, புறப்படு, தொடங்கு, பயன்படுத்தத் தொடங்கிவிடு, செயல்தொடங்கிவிடு, தொடக்க முயற்சியிலீடுபடு, முன்னேற்பாடுகள் செய், தொடக்கமுறு, இயங்குவி, தொடங்குவி, நிறுவு, புதுவதாகத் தோற்றுவி, தொடங்கி நடத்து, விடாது தூண்டுதலளி, இயங்கிக் கொண்டே இருக்கும்படி செய், மணிப்பொறியைத் திருக்கிவிடு, உந்துகல இயந்திரப் பொறியை முடுக்கிவிடு, தொடக்க உதவி செய், ஊக்காதரவு வழங்கு, முதல்நிலை ஆதரவு அளி, உந்து, துருத்தி நில, திறம்பு, விரி, மலர்வுறு, தளர்வுறு, கழலு, துள்ளிப் பாய், தெறித்தோடு, பீறி வௌதப்படு, வௌதப்படுத்து, கலைவுறு, கலை, ஒழுகுறு, ஒழுகுவி, வேட்டைவிலங்கு வகையில் மறைவிடத்திலிருந்து கலைத்து வௌதப்படுத்து, (கப்.) மிடாவிலிருந்து தேறல், வடித்தெடு.
Starter
n. தொடங்குபவர், முடுக்குபவர், வேட்டை விலங்கைக் கலைப்பவர், கிளப்புபவர், புதுவதாகத் தொடக்கஞ் செய்பவர், வினைத் தொடக்கம் புரிபவர், வாணிகம்-தொழில் ஆகியவற்றின் வகையில் வினைமுதலாகுபவர், தொடக்க உதவி புரிபவர், ஓட்டப்பந்தயத் தொடக்க அடையாளங் காட்டுபவர், (கப்.) மிடாவிலிருந்து தேயல் வடிப்பவர், பந்தயத்தில் புறப்பட ஆயத்தமாயுள்ள குதிரை, போட்டியாளர் பந்தயத்தில் புறப்பட ஆயத்தமாயுள்ளவர், வேட்டையாட்டுத் தொடங்கி வைக்கும் நாய், இயந்திர இயக்கந் தொடங்கி வைக்கும் அமைவு தொடக்கமுறைக் கருவி.
Starting
n. திடுக்கிடுக்கை, திடுக்கிடுவிப்பு, புறப்படுகை, புறப்படுவிப்பு, தொடங்குதல், நிறுவுகை, தொடங்கிவைப்பு, நிறுவன வினை, நடைமுறைத் தொடக்கம், ஓட்டப் பந்தயத்தொடக்க அடையாளங் காட்டல், வேட்டை விலங்குக் கலைப்பு, (கப்.) தேறல் வடிப்பு, (பெ.) புறப்படுகிற, முதற்படியான, தொடங்கி வைக்கிற, தொடக்க ஊக்கமான, இயந்திர இயக்கந் தொடங்கி வைக்கிற, ஓட்டப்பந்தயத் தொடங்கி வைக்கிற.